இறுதி நிமிட அபாரத்தினால் ரினௌனை வீழ்த்தியது சோண்டர்ஸ்

372

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இறுதி 15 நிமிடங்களில் பெறப்பட்ட 3 கோல்களினால் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியினால் சோண்டர்ஸ் அணி இந்த பருவகாலத்தில் தமது முதல் வெற்றியைப் பதவு செய்துள்ளது. எனினும், ரினௌன் அணி இந்த தோல்வியினால் சம்பியனாவதற்கு போட்டிபோட்டுக்கொண்டிருந்த தமது பாதையில் 3 புள்ளிகளை இழந்துள்ளது.  

நடப்புச் சம்பியன் கொழும்பை சமன் செய்தது விமானப்படை

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று (09)…

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இப்போட்டி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் ரினௌன் கோல் எல்லைக்கு சற்று வெளியில் சோண்டர்ஸ் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கிறிஷான்த அபேசேகர பெற்றார். அவர் உதைந்த பந்து ரினௌன் கோல் கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

அடுத்த நிமிடம் எதிரணியின் கோல் எல்லைவரை பந்தை எடுத்துச் சென்ற ரினௌன் வீரர் டிலான் மதுசங்க அதனை கோல் திசைக்குள் செலுத்த, சக வீரர் இப்ராஹிம் ஜிமோ கோல் நோக்கி அடித்தார். இதன்போது பந்து கம்பத்தின் இடது புறத்தினால் வெளியே சென்றது.

15 நிமிடங்களின் பின்னர் மத்திய களத்தில் ஒரு பகுதியில் இருந்து டிலான் உள்ளனுப்பிய பந்தை அர்ஷாட் நிறுத்தி, கோலுக்குள் உதைகையில் பந்தை சோண்டர்ஸ் கோல் காப்பாளர் சாலித திலக்சிறி பிடித்தார்.

ஆட்டத்தின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் சோண்டர்ஸ் அணியின் கோல் எல்லையில் ரினௌன் வீரர்கள் மேற்கொண்ட தொடர் பந்துப் பரிமாற்றங்களின் பின்னர், முன்னனுப்பப்பட்ட பந்தை முன்னேறிச் சென்று பெற்ற இப்ராஹிம் ஜிமோ அதனை வலைக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

கொழும்பு மற்றும் ரினௌன் கழகங்கள் மீது பக்கீர் அலி அதிருப்தி

இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட தேசிய கால்பந்து அணித் தேர்வு….

தொடர்ந்து சில நிமிடங்களில் எதிரணியின் மத்திய களத்தில் இருந்து இப்ராஹிம் ஜிமோ உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை, அர்ஷாட் கோல் நோக்கி ஹெடர் செய்தார். இதன்போது பந்து வலது புற கம்பத்தை அணிமித்த வகையில் வெளியே சென்றது.

முதல் பாதி: ரினௌன் வி.க 1 – 0 சோண்டர்ஸ் வி.க

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 2 நிமிடங்களில் ரினௌன் அணியின் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தைப் பெற்ற சோண்டர்ஸ் வீரர் சுந்தராஜ் நிரேஷ், கோலுக்கு அருகில் இருந்து உதைந்த பந்தை ரினௌன் கோல் காப்பாளர் ராசிக் ரிஷாட் பாய்ந்து பிடித்தார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் சோண்டர்ஸ் அணியின் கோல் திசையின் ஒரு பக்கத்தில் இருந்து செலுத்திய பந்தை, இடது பக்க கம்பத்திற்கு அருகில் இருந்து அர்ஷாட் கோலுக்குள் செலுத்தி அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.  

எதிரணியின் தரப்பில் இருந்து தமது அணி வீரரால் வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தை சோண்டர்ஸ் வீரர் இசுரு பெரேரா மத்திய களத்தில் இருந்து வேகமாக கோல் நோக்கி உதைந்தார். கோல் நோக்கி சென்றுகொண்டிருந்த பந்தை ரிஷாட் பாய்ந்து தட்ட, பந்து அவரது கையில் பட்டு இடது பக்க கம்பத்தில் பட்டு, மீண்டும் மைதானத்திற்குள் வந்தது.

மீண்டும் சோண்டர்ஸ் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்தை ஷமோட் டில்ஷான் கோலுக்கு ஹெடர் செய்ய, அது கோலின் மேல் கம்பத்தில் பட்டு வர, பல வீரர்கள் அங்கு பந்துக்காகப் போராடினர். எனினும், இறுதியில் ரிஷாட் பந்தைப் பற்றிக்கொண்டார்.

Photos: Air Force SC v Colombo FC | Week 9 | Dialog Champions League 2018

ThePapare.com | Hiran Chandika | 10/01/2019 Editing and re-using….

சில நிமிடங்களில் சோண்டர்ஸ் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தை கோல் எல்லையில் இருந்து பெற்ற ரினௌன் முன்கள வீரர் டிலிப் பீரிஸ், தடுப்பிற்கு வந்த வீரரிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தி, கோல் நோக்கி உதைந்த பந்தை சாலித தடுத்தார்.

தொடர்ந்து, தனக்கு உயர்த்தி வழங்கப்பட்ட பந்தை எதிரணியின் கோல் எல்லையில் இருந்து கிறிஷான்த அபேசேகர ஹெடர் செய்கையில், மிக வேகமாக செயற்பட்ட ரிஷாட் அதனைத் தடுத்தார்.

சில நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்து எந்தவொரு வீரரின் கால்களிலும் படாமல் நிரேஷிடம் வர, அவர் அதனை முன்னோக்கி எடுத்துச் சென்று, கோல் காப்பாளர் இல்லாத திசையினால் பந்தை கோலுக்குள் செலுத்தி சோண்டர்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

தொடர்ந்து சோண்டர்ஸ் வீரர்கள் மேற்கொண்ட சில முயற்சிகளை ரிஷாட் சிறப்பாகத் தடுத்தார்.

பின்னர், சோண்டர்ஸ் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை நளீம் கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.

சில சிமிடங்களில் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து நிரேஷ் வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து வலது பக்க கம்பத்தில் பட்டு வெளியில் சென்றது.

மீண்டும் ஆபிரிக்காவின் சிறந்த வீரரானார் முஹமட் சலாஹ்

எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், இங்கிலாந்து…

மேலும் சில நிமிடங்களில் சோண்டர்ஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த இளம் வீரர் சமத் ரஷ்மித்த ரினௌன் பெனால்டி எல்லையில் வைத்து அவ்வணியின் திமுது பிறியதர்ஷனவினால் முறையற்ற வித்தில் வீழ்த்தப்பட்டார். இதன்போது கிடைத்த பெனால்டி உதையை நிரேஷ் இலகுவாக கோலுக்குள் செலுத்தி அணியினை முன்னிலைப்படுத்தினார்.

எஞ்சிய சில நிமிடங்களில் ரினௌன் அணி வீரர்கள் கோலுக்கான வேகமான முயற்சிகளை மேற்கொள்ள அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

எனவே, இந்தப் போட்டி முடிவில் சோண்டர்ஸ் வீரர்கள் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இம்முறை டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: ரினௌன் வி.க 2 – 3 சோண்டர்ஸ் வி.க

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சுந்தராஜ் நிரேஷ் (சோண்டர்ஸ் வி.க)

கோல் பெற்றவர்கள்
ரினௌன் வி.க – இப்ராஹிம் ஜிமோ 31, மொஹமட் அர்ஷாட் 53
சோண்டர்ஸ் வி.க – சுந்தராஜ் நிரேஷ் 77, மொஹமட் நளீம் 81 91

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<