DCLஇன் ரினௌன் – கொழும்பு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில்

468

இந்த பருவகாலத்துக்கான கழகங்களுக்கிடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் இறுதி வரத்திற்காக இறுதிப் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இப்போட்டித் தொடரின் பிரதான அனுசரணையாளரான டயலொக் ஆசியாட்டா நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

முதல்முறை இலங்கை வரவுள்ள பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக் கிண்ண கால்பந்து… இதன்படி , குறித்த வெற்றிக்…

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் ஆரம்பமான இம்முறைப் போட்டித் தொடர் கடந்த 17 வாரங்களாக நடைபெற்று வந்தன. ரினௌன் மற்றும் கொழும்பு கழகங்களுக்கிடையிலான போட்டியைத் தவிர இதன் அனைத்து ஆட்டங்களும் கடந்த 24ஆம் திகதி நிறைவுக்கு வந்தன.

இதன்படி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 16 ஆட்டங்களில் 12 வெற்றியையும் 4 போட்டிகளில் சமநிலையும் பெற்ற ரினௌன் விளையாட்டுக் கழக அணி 40 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 11 வெற்றியும், 4 போட்டிகளில் சமநிலை மற்றும் ஒரு தோல்வியையும் பெற்ற கொழும்பு கால்பந்து கழகம் 37 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளன.

இதில், கடந்த இரு வாரங்களுக்கு முன் ரினௌன் மற்றும் விமானப்படை அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி சமநிலையில் நிறைவடைய, கொழும்பு மற்றும் இராணுவ அணிகளுக்கிடையிலான போட்டியில் கொழும்பு அணி வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்படி குறித்த வாரத்திலேயே ரினௌன் அணியின் சம்பியனாகும் கனவு தகர்ந்தது.

இதன்படி, கடந்த இரண்டு பருவகாலப் போட்டித் தொடர்களிலும் இறுதிவரை போராடி, கடைசி நேரத்தில் சம்பியன் கிண்ணத்தை இழந்த ரினௌன் விளையாட்டுக் கழகமும், நடப்புச் சம்பியனாக வலம் வந்துகொண்டிருக்கின்ற பலமிக்க கொழும்பு கால்பந்துக் கழகமும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்று இறுதிப் போட்டியில் எதிர்வரும் 13ஆம் திகதி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இம்முறை டயலொக் சம்பியன்ஸ் கிண்ணம் யாருக்கு?

கடந்த முறை இத்தொடரின் முதல் சுற்று இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் சுற்றில் முதல்…

இந்தப் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றியைப் பதிவுசெய்தால் 40 புள்ளிகளுடன் ரினௌன் அணியுடன் முதலிடத்தை சமமாகப் பகிர்ந்துகொள்ளும். ஆனால் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இப்போட்டித் தொடரில் அதிக கோல் வித்தியாசம் கருத்திற்கொள்ளப்படும் எனில் கொழும்பு அணி சம்பியனாகும் வாய்ப்பைப் பெறும்.

மறுபுறத்தில் இம்முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள ரினௌன் அணி, இப்போட்டியை வெற்றி பெற்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி ஆட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தாலோ சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ளும்.

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2016 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் கொழும்பு கால்பந்துக் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றிருந்ததுடன், ரினௌன் கால்பந்து கழகம், 2013, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.