நடப்புச் சம்பியன் கொழும்பை சமன் செய்தது விமானப்படை

262
Colombo FC vs Air Force SC

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று (09) இடம்பெற்ற விமானப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி தலா 2-2 என்ற கோல்களினால்  சமநியைில் முடிவடைந்தது.

கொழும்பு மற்றும் ரினௌன் கழகங்கள் மீது பக்கீர் அலி அதிருப்தி

இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட தேசிய கால்பந்து அணித் தேர்வு முகாமில்..

ஏகல விமானப்படை மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் கோல் முயற்சியாக எதிரணியின் மத்திய களத்தின் ஒரு திசையில் இருந்து கொழும்பு அணி வீரர் திமித்ரி வழங்கிய பந்தை மொஹமட் ஆகிப் கோல் எல்லைக்குள் செலுத்தினார். இதன்போது, கோல் காப்பாளர் முன்னே வந்த நிலையில் பந்தை கோல் திசைக்கு எடுத்துச் சென்ற சர்வான் ஜோஹர் கோல் பெறுவதற்காக இருந்த இலகுவான வாய்ப்பின்போது உதைந்த பந்து எதிரணி வீரரின் உடம்பில் பட்டு திசை மாறியது.

சில நிமிடங்களில் விமானப்படை பின்கள வீரர் ஜீவன்த பெர்னாண்டோ, தமது தரப்பின் எல்லையில் இருந்து சக வீரர்களுக்கு 2, 3 தடவைகள் பந்தை பரிமாற்றம் செய்து மீண்டும் எடுத்துச் சென்று கவிது இஷானுக்கு வழங்க, அவர் பந்தை இலகுவாக கோலுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப்படுத்தினார்.

விமானப்படை அணியின் பின்களத்தில் கொழும்பு வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை திமித்ரி பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்துக்காக விமானப்படை அணியின் கோல் எல்லையில் இரு அணி வீரர்களும் போராட, இறுதியில் ஷரித்த ரத்னாயக்க பந்தை வலைக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.

முதல் பாதியின் இறுதித் தருவாயில் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற கொழும்பு அணி வீரர் மொமாஸ் யாப்போ முன்னோக்கி எடுத்துச் சென்ற பந்தை விமானப்படை கோல் காப்பாளர் ஹன்சன திஸானாயக தடுத்தார்.

அடுத்த நிமிடம் எதிரணியின் கோல் எல்லையின் ஒரு திசையில் இருந்து திமித்ரி கோல் திசைக்கு செலுத்திய பந்தை டிலான் கௌஷல்ய கோல் நோக்கி செலுத்த முயற்சிக்கையில் அவரது உடம்பில் படாமலேயே பந்து சென்றது.

ஆசிய கால்பந்தாட்ட தலைமை அதிகாரியாக அநுர டி சில்வா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண…

இந்த இரண்டு முயற்சிகளுக்கும் பலனாக அடுத்த நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையில் வைத்து தனக்கு வழங்கப்பட்ட பந்தை திமித்ரி கோலாக்கி அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதி: விமானப்படை வி. 01 – 02 கொழும்பு கா.

இரண்டாம் பாதியின் முதல் முயற்சியாக எதிரணியின் பகுதியில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை விமானப்படை வீரர் தில்சர கோல் நோக்கி உதைந்தார். அதனை கொழும்பு கோல் காப்பாளர் இம்ரான் பிடித்தார்.

தொடர்ந்து தமக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்தையும் தில்சர ஹெடர் செய்ய, பந்து கம்பங்களுக்கு மேலால் வெளியே சென்றது.

கொழும்பு அணிக்கு மாற்று வீரராக வந்த சப்ரான் சத்தார் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை ஹன்சன திஸானாயக பிடித்தார்.

சில நிமிடங்களில் விமானப்படை வீரர்கள் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை கவிது இஷான் வந்த வேகத்திலேயே கோல் நோக்கி உதைய, பந்தை இம்ரான் சிறந்த முறையில் வெளியே தட்டி விட்டார்.

கொழும்பு அணியின் கோல் பகுதியின் ஒரு திசையில் இருந்து ஜீவன்த பெர்னாண்டோ உள்ளனுப்பிய பந்தை இம்ரான் தடுத்தார். இதன்போது அவரது கைகளில் இருந்து நழுவிய பந்தை கொழும்பு பின்கள வீரர்கள் அங்கிருந்து வெளியேற்றினர்.

அஜ்மிரின் கோல் மூலம் புளூ ஸ்டார் அணிக்கு வெற்றி

வெலிசரை, கடற்படை மைதானத்தில் நடைபெற்ற 9 ஆவது வாரத்தின்…

தொடர்ந்து கொழும்பு அணியின் கோல் எல்லைக்கு சற்று வெளியில் இடது புறத்தில் கவிந்து இஷான் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக்கை அவரே பெற்றார். இதன்போது உள்ளனுப்பிய பந்தை டில்ஷான் பெர்னாண்டோ ஹெடர் செய்ய, அது கம்பங்களை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

போட்டி முடிவடையவிருந்த இறுதி நிமிடத்தில் கவிந்து இஷான் கொழும்பு அணியின் பெனால்டி எல்லையில் வைத்து ஷரித்த ரத்னாயக்கவினால் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை டில்ஷான் பெர்னாண்டோ கோலாக்கினார்.

இதனால், இறுதி நிமிட பெனால்டி கோலுடன் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்து கழக அணியுடனான மோதலை விமானப்படை அணி வீரர்கள் சமநிலையில் முடித்தனர்.

முழு நேரம்: விமானப்படை வி. 02 – 02 கொழும்பு கா.

கோல் பெற்றவர்கள்

விமானப்படை வி. கவிது இஷான், டில்ஷான் பெர்னாண்டோ

கொழும்பு கா. ஷரித்த ரத்னாயக்க, பொட்றிக் திமித்ரி

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<