ஆசிய பரா விளையாட்டு விழாவில் 35 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

188

மூன்றாவது ஆசிய பரா விளையாட்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ளது.

இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் வில்லாளர் (2), மெய்வல்லுனர் (20), பெட்மிண்டன் (01), பார்வை குறைபாடுடையவர்களுக்கான செஸ் (02), பளுதூக்கல் (01), நீச்சல் (02), இலக்கை நோக்கி சுடுதல் (03), மேசைப்பந்து (01), சக்கர இருக்கை டென்னிஸ் (03), ஆகிய ஒன்பது வகையான போட்டிகளில் இலங்கை பரா வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.  

தியகமவில் இடம்பெறும் 21ஆவது இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டிகள்

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண..

ஆசிய பரா விளையாட்டு விழா ஆரம்ப காலங்களில் தூர கிழக்கு மற்றும் பசுபிக் விளையாட்டு விழா என அழைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு வரை பழைய பெயருடன் நடைபெற்று வந்த இப்போட்டிகள் 2010 முதல் ஆசிய பரா விளையாட்டு விழா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, 2010இல் சீனாவிலும், 2014இல் தென்கொரியாவிலும் நடைபெற்ற இவ்விளையாட்டு விழா, இம்முறை இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ளது.

அத்துடன், 2002ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற இப்போட்டிகளில் இலங்கை பரா வீரர்கள் 6 தங்கப் பதக்கங்கள் உட்பட 20 இற்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். இறுதியாக, 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஒரு தங்கம், 06 வெள்ளி மற்றும் 05 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 14 பதக்கங்களை இலங்கை வீரர்கள் வென்றிருந்தனர். 41 ஆசிய நாடுகள் பங்குபற்றியிருந்த குறித்த போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இலங்கை அணி 19ஆவது இடத்தை பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதுஇவ்வாறிருக்க, இவ்வருடம் நடைபெறவுள்ள ஆசிய பரா விளையாட்டு விழாவுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 35 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இம்முறை போட்டிகளில் வாய்ப்பு வழங்குவதற்கு தேசிய பராலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் 10 தமிழ் பேசும் வீரர்கள்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 106 பேர்..

அதிலும், குறிப்பாக 2016 றியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும், கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படைப் பிரிவைச் சேர்ந்த தினேஷ் பிரயன்த ஹேரத், இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கை அணியின் தலைவராக செயற்படவுள்ளதுடன், அவர் இலங்கைக்கு நிச்சயம் பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பார் எனவும் நம்பப்படுகின்றது.  

இவருடன், கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் எவ் 44 பிரிவு ஈட்டி எறிதலில் 62.11 மீற்றர் தூரத்தை எறிந்து உலக சாதனையை நிகழ்த்திய இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த சமிந்த சம்பத் ஹெட்டியாரச்சி, உப்புல் இந்திக சூலதாச, சந்தீப மல்ஷான், பாலித பண்டார, அமரா இந்துமதி போன்ற வீரர்கள் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை வென்று கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

அத்துடன், சம்பத் பண்டார (வில்லாளர்), தினேஷ் தேசப்பிரிய (மேசைப்பந்து), காமினி திசாநாயக்க (சக்கர இருக்கை டென்னிஸ்) ஆகிய வீரர்களும் பதக்கங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என நம்பப்படுகின்றது.

அத்துடன், இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள 35 இலங்கை வீரர்களுக்கும் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசியாட்டா பிஎல்சி நிறுவனம் அனுசரணை வழங்கவுள்ளது.  

இதுஇவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள வீரர்களை அறிமுகம் செய்துவைக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 26ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 6000 மாணவர்கள் பங்கேற்பு

இந்நாட்டின் விளையாட்டு துறைக்கு எதிர்கால நட்சத்திர..

இதில், தேசிய பராலிம்பிக் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரஜித்த அம்ப்பேமொஹொட்டி கருத்து வெளியிடுகையில், இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள பரா மெய்வல்லுனர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சும், டயலொக் ஆசியாட்டா நிறுவனமும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை எமது வீரர்களுக்கு மிகப் பெரிய பலமாக உள்ளது என தெரிவித்தார்.

அத்துடன், அண்மைக்காலமாக இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற தேசிய பராலிம்பிக் சங்கத்துக்கு 2002 முதல் அனுசரணை வழங்கி வருவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், தொடர்ந்து பராலிம்பிக் வீரர்களுக்கு டயலொக் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் டயலொக் ஆசியாட்டாவின் குறியீடு மற்றும் ஊடகப்பிரிவு பொதுமுகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க இந்நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.  

இதேவேளை, மூன்றாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை பரா மெய்வல்லுனர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளனர்.

இலங்கை பரா மெய்வல்லுனர் அணி விபரம்

தினேஷ் பிரியன்த ஹேரத் (தலைவர் – ஈட்டி எறிதல்), சம்பத் ஹெட்டியாரச்சி, சமித துலான், காமினி ஏகநாயக்க, கே. டபிள்யு.எல் அஜித் திசர ஜயசிங்க (ஈட்டி எறிதல்), பிரதீப் சோமசிறி, மதுரங்க ஜயசிங்க (400 மீற்றர்), அஜித் ஹெட்டியாரச்சி (100, 200, 400 மீற்றர்), லால் புஷ்பகுமார (உயரம் பாய்தல்), நுவன் இந்திக, துமீர மதுரங்க, குமுது பிரியங்கா (நீளம் பாய்தல், 100 மீற்றர்), சந்தீப மல்ஷhன் (1500 மீற்றர்), பாலித பண்டார (குண்டு போடுதல்), கீர்த்தி பண்டார (100 மீற்றர்), அமில பிரசாந்த் (100, 200, உயரம் பாய்தல்), இந்திக சூலதாச (100,200), புத்திக இந்துபால, அமரா இந்துமதி (200, 400, நீளம் பாய்தல்)

பயிற்றுவிப்பாளர்கள்

பிரதீப் நிஷாந்த, ஹரிஜன் ரத்னாயக்க, சுமத் கருணாரத்ன, ரன்ஜித் ஹேன்னாயக்க

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<