ஐ.பி.எல் அரங்கில் இரட்டை சாதனை படைத்த டோனி

311
Image Courtesy - IPL

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணியுடனான லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோற்றபோதிலும் அந்த அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, ஐ.பி.எல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணியின் தலைவராக 4,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 39ஆவது லீக் ஆட்டம் பெங்களூரில் நேற்று (21) நடைபெற்றது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இதன் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து, 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்து வெறும் ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், போட்டியின் இறுதிவரை தனியொரு வீரராக டோனி வெற்றிக்காக போராடியிருந்தார்.   

போட்டியின் கடைசி ஓவரில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய குறித்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி, 2 ஓட்டங்கள் என 24 ஓட்டங்களை டோனி குவித்தார். ஆனால், கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், சர்துல் தாகூர் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆக ஒரு ஓட்டத்தினால் சென்னை அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

இங்கிலாந்துடனான தொடரில் முக்கிய சுழல் பந்துவீச்சாளரை இழந்துள்ள பாகிஸ்தான்

இங்கிலாந்து அணியுடனான தொடரிலிருந்து வைரஸ் தாக்கம் காரணமாக சுழல் பந்துவீச்சாளர்…

இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்தாலும், டோனி ஒருசில சாதனைகளை படைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர், 48 பந்துகளுக்கு முகங்கொடுத்து 84 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகள் அடங்கும். அத்துடன், டி-20 போட்டிகளில் டோனியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியது.

அதில் குறிப்பாக கடைசி ஓவரில் அதிகமுறை 20 ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி டோனி முதலிடத்தைப் பிடித்தார்.

அத்துடன், இந்தப் போட்டியில் 7 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் .பி.எல் வரலாற்றில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை டோனி பெற்றார். குறித்த போட்டியுடன் 203 சிக்ஸர்களை மொத்தமாக பெற்றுக்கொண்ட டோனி, இம்முறை ஐ.பி.எல் தொடரில் அதிக தூரம் சென்ற (111 மீற்றர்) சிக்ஸரையும் பதிவு செய்தார்.

.பி.எல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் 190 சிக்ஸர்கள் அடித்து சம இடங்களைப் பெற்றுக்கொள்ள, விராத் கோஹ்லி 186 சிக்ஸர்கள் அடித்து அடுத்த இடத்தில் உள்ளார்.

இதனிடையே, .பி.எல் போட்டிகள் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 323 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்திலும், தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் 204 சிக்ஸர்கள் அடித்து 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

பெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய…

எனவே, மூன்றாவது இடத்தில் உள்ள டோனிக்கு, டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே, இம்முறை போட்டிகளில் டோனி அதை முறியடித்து ஒட்டுமொத்தமாக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அதிக வாய்ப்பு உண்டு.

இதுஇவ்வாறிருக்க, பெங்களூர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது சாதனையாக .பி.எல் போட்டியில் ஒரு அணியின் தலைவராக 4 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் டோனி பெற்றார். ஏற்கனவே டோனி .பி.எல் போட்டியில் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்துவிட்டாலும், ஒரு தலைவராக இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியில் பெற்றுக் கொண்டார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க