இந்திய அணியின் கண்களை திறந்துவிட்ட இலங்கை அணியின் வெற்றி

1485

போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் மோசமான தோல்வியினை சந்தித்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியிடம் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, இந்தப் போட்டியில் அவர்களிடம் பொட்டிப் பாம்பாக அடங்கிப் போனது.

இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், இந்திய அணித் தலைவராக ரோஹித் சர்மா அணியை வழிநடத்துகின்றார்.

தொடர் தோல்விகளுக்கு அதிரடி வெற்றியுடன் முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்..

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான போட்டித் தொடரை கருத்திற்கொண்டு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட தரம்சாலா ஆடுகளத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு திணறிய இந்திய அணி 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் 14ஆவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகவும், சொந்த மண்ணில் இந்திய அணி பெற்றுக்கொண்ட 3ஆவது மோசமான ஓட்ட எண்ணிக்கையாகவும் இது அமைந்தது.

இந்திய அணியில் உள்ள 11 பேரில் மொத்தம் மூன்று வீரர்கள் மட்டுமே 10 ஓட்டங்களுக்கு அதிகமாக எடுத்தனர். 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். எனினும், அவ்வணி சார்பாக முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனி மாத்திரம் அபாரமாக விளையாடி 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில், தான் தலைமைத்துவம் வகித்த முதல் போட்டியில் அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

”நாம் பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கை போதுமானதாக இல்லை. 112 ஓட்டங்கள் என்பது மிகச்சிறிய ஓட்ட எண்ணிக்கைதான். நாம் இன்னும் 70 அல்லது 80 ஓட்டங்களை பெற்றிருந்தால் போட்டியின் வெற்றி வாய்ப்பு மாறுவதற்கு வாய்ப்பிருந்தது.

எனினும், அனைத்து பாராட்டுக்களும் இலங்கை பந்துவீச்சாளர்களை சாரும். அவர்கள் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். எல்லா மைதானங்களிலும் ஒரே மாதிரியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியாது. இதனால் மைதானத்துக்கு ஏற்றவாறு எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய துடுப்பாட்ட உத்திகளை கையாள வேண்டும். எனவே நாம் இதிலிருந்து சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டோம். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தட்டையான ஆடுகளங்களில் நாம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றோம். எதிர்வரும் காலத்தில் இதிலிருந்து மீண்டு வருவதற்கு வீரர்கள் அவதானத்துடன் விளையாட வேண்டும்” என்றார்.

இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் புகாரை விசாரிக்கவுள்ள ஐ.சி.சி

இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசடைகின்ற நகரங்களில்…

கிரிக்கெட் அரங்கில் அதிகமானவர்களால் விரும்பப்படும் டோனியின் பங்களிப்பு இந்தப் போட்டியில் மிகப் பெரிய உதவியாக இந்திய அணிக்கு இருந்தது. ஏனைய அனைத்து வீரர்களின் ஓட்ட எண்ணிக்கையின் மொத்தத்தை விட அதிக ஓட்டங்களைப் பெற்று தனி ஒருவராகப் போராட்டம் காண்பித்திருந்தார் டோனி. இது டோனி அணிக்காக தனித்து நின்று போராடிய முதல் தடவையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ”இந்திய அணியில் அனுபவமிக்க வீரர் டோனி, மைதானத்துக்கும், போட்டிக்கேற்பவும் தன்னை மாற்றிக்கொண்டு விளையாடுவார். அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் ஓட்ட இலக்கை மாற்றியிருப்பார்” என்றார் சர்மா.

”இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாம் களமிறங்கினோம். எமது குறைபாடுகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த போட்டியின் ஊடாக நாம் பல பாடங்களை கற்றுள்ளோம். தற்போது தோல்வியை மறந்து அடுத்த போட்டிகளில் வெற்றிகளுக்கான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” என ரோஹித் ஆடுத்த கட்ட திட்டம் குறித்து குறிப்பிட்டார்.

எவ்வாரிருப்பினும் இந்திய அணியில் சிறந்த முறையில் பிரகாசிக்கும் ரஹானே நேற்றைய போட்டியில் ஆடவில்லை. அது குறித்து கருத்து தெரிவித்த அணித் தலைவர்,  

”ரஹானேவை நாங்கள் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவே அடையாளம் கண்டுள்ளோம். அதனால்தான் அவரை நேற்றைய ஆட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை” என்றார்.

இதேவேளை, இப்போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றியது போல வேகப்பந்து வீச்சாளரான நம்பிக்கைக்குறிய வீரர் பும்ராவும் சொதப்பியிருந்தார். பும்ரா வீசிய 6ஆவது ஓவரில் உபுல் தரங்கவின் பிடியெடுப்பை தினேஷ் கார்த்திக் எடுத்தார். ஆனால் பும்ரா வீசிய பந்து நோபோல் என அறிவிக்கப்பட்டது. இதன்போது 11 ஓட்டங்களைப் பெற்றிருந்த தரங்க, ந்த வாய்ப்பை பயன்படுத்தி 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இதுதொடர்பில் ரோஹித் கருத்து வெளியிடுகையில்,

”துடுப்பாட்டத்தில் சொதப்பிய காரணத்தினால்தான் நாம் இப்போட்டியை இழந்தோமே தவிர, பந்துவீச்சில் அல்ல. தோல்விக்கு ஒரு பந்துவீச்சாளரை மாத்திரம் குற்றம் சுமத்துவது நியாயமற்றது. எமது துடுப்பாட்ட வரிசை நிலைமைக்கு ஏற்ப பொறுப்புடன் விளையாடவில்லை. ஆனால் அதுவும் இப்போட்டிக்கு முக்கிய காரணம் என நான் சொல்ல விரும்பவில்லை. 180 – 190 ஓட்டங்களை குவித்திருந்தால் போட்டியின் நிலைமை மாறியிருக்கும்” என அவர் தெரிவித்தார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தடுமாறியது இது முதற்தடவையல்ல. முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போதும் இந்திய அணி தடுமாறியிருந்தது. எனினும், இந்த மோசமான விளையாட்டானது தென்னாபிரிக்க அணியுடனான போட்டித் தொடருக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என ரோஹித் இறுதியாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.