போராட்டத்தின் பின்னர் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த டிபெண்டர்ஸ் அணி

95
©Bhutan Football Federation

2020 AFC கிண்ண தகுதிகாண் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டியின் இரண்டாம் கட்ட மோதலில் (Second Leg) பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்தை 2-2 என சமநிலை செய்த இலங்கையின் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் எதிரணிக்கு 3 கோல்களை விட்டுக் கொடுத்து போட்டியை சமநிலை செய்த நிலையில் எதிரணியின் சொந்த மைதானத்தில் 2 கோல்களை மாத்திரம் பெற்றமையினாலேயே டிபெண்டர்ஸ் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

வாய்ப்புக்கள் வீணாக பாரோ அணியை சமன் செய்த டிபெண்டர்ஸ்

பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்திற்கு எதிராக இடம்பெற்ற 2020 AFC…

ஏற்கனவே கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற முதல் கட்டப் போட்டி 3-3 என சமநிலையில் நிறைவுபெற்றது. இந்த நிலையிலேயே பூட்டான் தலைநகர் திம்புவில் புதன்கிழமை (29) இரண்டாம் கட்ட மோதல் இடம்பெற்றது.

டிபெண்டர்ஸ் அணிக்கு அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு இந்தப் போட்டியில் ஒரு வெற்றி அல்லது இரண்டு அணிகளும் தலா 3 ஐ விட அதிக கோல்களை பெற்ற  நிலையிலான ஒரு சமநிலை முடிவு தேவையாக இருந்தது.

இந்நிலையில் போட்டி ஆரம்பமாகி 12ஆவது நிமிடத்தில் பாரோ அணிக்கு முதல் கோல் கிடைத்தது. தமக்கு கிடைத்த த்ரோ போல் (throw ball) வாய்ப்பின்போது ஷன்ஷோ உள்ளே வீசிய பந்தை முன்னணி வீரர் ஷென்ஷோ கில்சென் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். இதன்போது டிபெண்டர்ஸ் கோல் காப்பாளர் லுத்பி பந்தை அவதானிப்பதில் தவறிழைத்தார்.

முதல் கோல் பெறப்பட்டு 5 நிமிடங்களில் டிபெண்டர்ஸ் முன்கள வீரர் எவான்ஸ் பந்தை கடத்திச் சென்று கோலுக்குள் செலுத்துகையில் பாரோ கோல் காப்பாளர் அதனைத் தடுத்தார். மீண்டும் தன்னிடம் வந்த பந்தை ஜேசுராஜ் பேர்ணார்ட் கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக பூட்டான் தரப்பினரே பந்தை டிபெண்டர்ஸ் கோல் திசைக்கு அதிகம் கொண்டு சென்று கோல் முயற்சிகளை மேற்கொண்டனர்.

டிபெண்டர்ஸ் அணிக்கு இரண்டு சிறந்த வாய்ப்புக்கள் முதல் பாதியில் கிடைத்தன.

Photos : Defenders FC v Paro FC | AFC Cup 2020

ThePapare.com | Viraj Kothalawala | 23/01/2020 Editing and re-using…

முதல் வாய்ப்பாக, அசிகுர் ரஹ்மான் செலுத்திய கோணர் உதையை லக்ஷித்த ஜயதுங்க கோலுக்குள் செலுத்த, எதிரணியின் தடுப்பு வீரர் கோல் எல்லையில் இருந்து பந்தை தடுத்தார்.

தொடர்ந்து, எவான்ஸ் நெஞ்சினால் நிறுத்தி பந்தை கோலுக்குள் உதைய பந்து ஒரு திசையினால் வெளியே சென்றது.

முதல் பாதி: டிபெண்டர்ஸ் கா. 1 – 1 பாரோ கா.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் பாரோ வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை அவ்வணியின் தலைவர் ஜிஜ்மி ஷெரின் ஜோர்ஜி ஹெடர் செய்து கோலாக்கினார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் டிபெண்டர்ஸ் பின்கள வீரர் ப்ரன்சிஸ் அக்பெடி தமது தரப்பின் பகுதியில் இருந்து உயர்த்தி அனுப்பிய பந்தை பாரோ பின்கள வீரர் தடுக்கத் தவற, இஸ்மாயில் அபுமெரி பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி 2-2 என ஆட்டத்தை சமப்படுத்தினார்.

60ஆவது நிமிடத்தில் பாரோ வீரர் பபாஸ்ஸோ கோலுக்கு அண்மையில் இருந்து உதைந்த பந்து கம்பங்களை விட்டு உயர்ந்து சென்றது.

68ஆவது நிமிடத்தில் பாரோ அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது பபாஸ்ஸோ கோல் நோக்கி உதைந்த பந்து கோலின் மேல் கம்பத்தில்பட்டு மீண்டும் மைதானத்திற்கு திரும்பியது.

புனித பெனடிக் கல்லூரியை இலகுவாக வீழ்த்தியது கொழும்பு ஸாஹிரா

பாடசாலை அணிகளுக்கு இடையிலான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப்…

அதன் பின்னர் டிபெண்டர்ஸ் அணியினர் முன்னிலை கோலுக்காக வேகமாக ஆடினாலும், பாரோ வீரர்கள் நிதானமாக ஆட்டத்தைக் கொண்டு சென்றனர்.

இறுதி நேரத்தில் தமது சக அணி வீரருடன் மோதுண்ட பாரோ கோல் காப்பாளர் உபாதைக்குள்ளாகி மைதானத்தில் இருந்து மருத்துவ உதவியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டார்.

எனவே, போட்டி 2-2 என சமநிலையில் நிறைவடைய பாரோ கால்பந்து கழகம் 2020 AFC கிண்ண தகுதிகாண் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. அவ்வணி, அடுத்த சுற்றில் இந்தியாவின் பெங்களூரு கால்பந்து கழகத்தை சந்திக்கவுள்ளது.

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா. 2 – 2 பாரோ கா.

கோல் பெற்றவர்கள்
டிபெண்டர்ஸ் கா.க – ஜேசுராஜ் பேர்ணார்ட் 17’, இஸ்மாயில் அபுமெரி 36’
பாரோ கா.க – ஷென்ஷோ கில்சென் 12’, ஜிஜ்மி ஷெரின் ஜோர்ஜி 51’

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க –