இந்திய ஒருநாள் குழாமிலிருந்து வெளியேறும் தீபக் சஹார்

131
ESPNcricinfo

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டிக்கான இந்திய அணியின் குழாமிலிருந்து உபாதை காரணமாக வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் வெளியேறியுள்ளார். 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி மட்டுப்படுத்தப்பட்ட இரு வகையான போட்டித் தொடர்களிலும் ஆடி வருகிறது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

இந்திய – மேற்கிந்திய தீவுகள்…..

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் தொடர் 1-1 என்ற அடிப்படையில் தற்போது சமநிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (18) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது. 

குறித்த போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 27 வயதுடைய வலது கை வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் விளையாடியிருந்தார். இப்போட்டியில் 7 ஓவர்கள் வீசிய தீபக் சஹார் ஒரு ஓட்டமற்ற ஓவருடன் 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.

இந்நிலையில் குறித்த போட்டியில் தீபக் சஹார் உபாதைக்குள்ளானார். பின் முதுகுப்பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று (19) பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சிறிய காலம் ஓய்வு தேவ என்பதன் அடிப்படையில் எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிக்கான குழாமிலிருந்து அவர் நீக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் நடைபெறுவதில் தாமதம்

அயர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த…..

இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட 27 வயதுடைய வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடும் அடிப்படையில் இந்திய குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். 

இதேவேளை முன்னதாக வேகப் பந்துவீச்சாளரான புவ்னேஸ்வர் குமார் உபாதை காரணமாக ஒருநாள் குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சர்துல் தாகூர் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்குமிடையிலான இறுதி ஒருநாள் சர்வதேச போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெறவுள்ளது.