டயலொக் சம்பியன்ஸ் லீக்: முதல் வார கண்ணோட்டம்

379

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில் 13ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கையின் பிரதான கால்பந்து லீக் போட்டித் தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் அங்குரார்ப்பண போட்டி கடந்த 21ஆம் திகதி யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதன்படி, இம்முறை போட்டித் தொடருக்கான முதல் போட்டியில் கடந்த முறை டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் மூன்றாம் இடம் பெற்ற வென்னப்புவ நியு யங்ஸ் கால்பந்துக் கழகம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்ற பேருவளை சுபர் சன் விளையாட்டுக் கழக அணிகள் மோதின.

சுபர் சன் – நியு யங்ஸ் இடையிலான ஆரம்பப் போட்டி சமநிலையில் நிறைவு

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் நியு …

போட்டியின் 22ஆவது நிமிடத்தில் நியு யங்ஸ் அணியின் பி.எஸ் நிமோ கோலடிக்க முதல் பாதியில் 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது. இடைவேளையைத் தொடர்ந்து 78ஆவது நிமிடம் பேருவளை சுபர் சன் அணியின் ஒலுவெட்சின் டேனியல் பதில் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது.

இந்த நிலையில், இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் வாரத்திற்கான ஏனைய 8 போட்டிகளும் கடந்த மற்றும் இந்த வாரங்களில் இடம்பெற்றன.

கொழும்பு எதிர் அப் கண்ட்ரி லயன்ஸ்

கொழும்பு CR & FC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்புச் சம்பியன் கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் நாவலப்பிட்டி அப்கண்ட்ரி லயன்ஸ் அணிகள் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த மோதலில் கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளாலும் 4 கோல்கள் பெறப்பட்டன. இறுதியில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு வீரர்கள் பரபரப்பான வெற்றியொன்றைப் பதிவுசெய்தனர்.

போட்டியின் 27ஆவது நிமிடத்தில் அப்கன்ட்றி லயன்ஸ் அணியின் ஆர். மஞ்சுள முதல் கோலைப் போட, 39ஆவது நிமிடத்தில் கொழும்பு கழகத்தின் மொஹமட் ஆகிப் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.

Photos: New Youngs FC v Super Sun SC | Week 1 | Dialog Champions League 2018

ThePapare.com | Murugaiah Saravanan | 22/10/2018 Editing …

இரண்டாவது பாதியின் 46, 80, 86ஆவது நிமிடங்களில் கொழும்பு எப்.சி அணி கோல்களைப் பெற்றுக்கொள்ள, எதிரணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்து அபாரமாக விளையாடிய மலையக வீரர்கள் 85, 89ஆவது நிமிடங்கில் கோல்களைப் பதிவுசெய்தனர்.

ரினௌனன் எதிர் பெலிகன்ஸ்

பெத்தகான செயற்கை புற்தறை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரினௌன் அணி இப்ராஹிம் ஜிமோஹ் முதல் பாதியில் பெற்ற ஹெட்ரிக் கோலின் உதவியுடன் குருநாகல் பெலிகன்ஸ் அணியை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்க செலுத்திய ரினௌன் அணிக்கு 7ஆவது நிமிடத்தில் டிலிப் மெண்டிஸ் முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 21, 30, 45ஆவது நிமிடங்களில் ஜிமோ ஹெட்ரிக் கோல்களைப் பதிவுசெய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 88ஆவது நிமிடத்தில் பெலிக்கன்ஸ் சார்பாக கொப்பினா கொட்பிரெட் ஆறுதல் கோலொன்றைப் போட்டார்.

ரத்னம் எதிர் விமானப்படை

3 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் களமிறங்கிய முன்னாள் சம்பியனான ரத்னம் கழகம், தனது மீள்வருகை போட்டியிலியே அசத்தல் வெற்றி பெற்றது.

இப்ராஹிம் ஜிமோஹ்வின் ஹெட்ரிக் கோலால் பெலிகன்ஸை வீழ்த்திய ரினௌன்

பெத்தகான விளையாட்டு மைதானத்தில் இன்று (27) ……

CR & FC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரத்னம் மற்றும் விமானப்படை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்போது, அனுபவமிக்க மற்றும் பலம்வாய்ந்த வீரர்களைக் கொண்ட விமானப்படை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ரத்னம் அணி வெற்றியீட்டியது.

போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் சமமாக மோதிக்கொண்ட போதிலும், போட்டியின் 50ஆவது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் நாட்டவரான எல்.கே டிடியர், ரத்னம் கழகத்துக்கான கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

டிபென்டர்ஸ் எதிர் ஜாவா லேன்

களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் டிபென்டர்ஸ் விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் களமிறங்கிய இலங்கை இராணுவப்படை வீரர்கள் ஜாவா லேன் அணியை 4-0 என மிக இலகுவாக வெற்றி கொண்டனர்.

இதன்போது நட்சத்திர வீரர் மொஹமட் இஸ்ஸடீன் 38, 60 மற்றும் 72ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றுக்கொடுக்க, ஜி. ப்ரியஷாந்த 83ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலைப் போட்டார்.

Photos: Air Force SC v Ratnam SC | Dialog Champions League 2018/19

ThePapare.com | Ruchira Ranawaka | 29/10/2018 | …..

புளூ ஸ்டார் எதிர் நேவி சீஹோக்ஸ்

வெலிசறையில் நடைபெற்ற இப்போட்டியில் கடற்படை கழகத்தை (நேவி சீஹோக்ஸ்) எதிர்த்தாடிய களுத்துறை புளூ ஸ்டார் கழகம், போட்டியின் கடைசி நேரத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் 1-0 என வெற்றி பெற்றது.

இரு அணிகளும் பலத்த போட்டியைக் கொடுத்த இப்போட்டியின் உபாதையீடு நேரத்தில் (93 நிமிடம்) .சி.எம் சஹ்லான் போட்ட அபார கோலின் மூலம் புளூ ஸ்டார் கழகம் முதல் வெற்றியை ருசித்தது.

சமநிலையில் முடிந்த போட்டிகள்

சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்ற நீர்கொழும்பு யூத் மற்றும் சௌண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவுற்றது.  

இப்போட்டியின் 21ஆவது நிமிடத்தில் சுந்தரராஜ் நிரேஷ் கோல் ஒன்றைப் போட்டு சௌண்டர்ஸ் கழகத்தை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 71ஆவது நிமிடத்தில் நீர்கொழும்பு யூத் வீரர் ஷானக்க ப்ரசாத் அவ்வணிக்காக கோலொன்றைப் போட்டு சமப்படுத்தினார்.

தொடர்ந்து இரு அணி வீரர்களும் மற்றுமொரு கோலினைப் பெறுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இதனால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் முதல் தடவையாக இணைந்துகொண்டுள்ள பேருவளை ரெட் ஸ்டார் கால்பந்துக் கழகம், தமது முதல் போட்டியில் மாத்தறை சிட்டி கழகத்தை எதிர்த்தாடியது.

களுத்துறை வேர்னண் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி 1-1 என சமநிலை பெற்றது. ரெட் ஸ்டார் சார்பாகப் பெறப்பட்ட கோலை என்.சி.எம் ரஹ்மான் (50ஆவது நிமி.) பெற்றதோடு, மாத்தறை சிட்டி கழகம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஆர். விக்ரமநாயக்க (80ஆவது நிமி.) பெற்றிருந்தார்.

இதேவேளை, அநுராதபுரத்தில் நடைபெற்ற சொலிட் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என வெற்றி தோல்வியின்றி சநிலையில் நிறைவுற்றது.

இப்போட்டியில் கிறிஸ்டல் பெலஸ் சார்பாக அணித் தலைவர் ஐசாக் அபாவும் (16ஆவது நிமி.), சொலிட் கழகம் சார்பாக ஆர். மதுஷானும் (44ஆவது நிமி.) கோல்களைப் போட்டனர்.

இந்த வார இறுதியில் 4 போட்டிகள்

தமது முதல் போட்டியில் அபார வெற்றிபெற்ற ரத்னம் கழகத்துக்கும், கிறிஸ்டல் பெலஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி நாளை (03) கொழும்பு CR&FC மைதானத்தில் நடைபெறவுள்ளது.   

அதேபோல களுத்துறை புளூ ஸ்டாருக்கும், பேருவளை சுப்பர் சன்னுக்கும் இடையிலான போட்டி நாளை களுத்துறையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, அப்கண்ட்ரி லயன்ஸ்பெலிகன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாவலப்பிட்டியிலும், டிபெண்டரஸ் அணிக்கும் சொலிட் அணிக்கும் இடையிலான போட்டி களளி மைதானத்திலும் நாளை மறுதினம் (04) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.   

Photos : Colombo FC v Up Country Lions SC | Week 1 | Dialog Champions League 2018

ThePapare.com | Brian Dharmasena | 27/10/2018…..

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் புள்ளிகள் பட்டியல்

அணிகள் போட்டி வெற்றி சமநிலை தோல்வி கோல் வித்தியாசம் புள்ளிகள்
டிபெண்டர்ஸ் வி. (இராணுவம்) 1 1 0 0 4 3
ரினௌன் வி. 1 1 0 0 3 3
கொழும்பு கா.க 1 1 0 0 1 3
ரத்னம் வி.க 1 1 0 0 1 3
புளூ ஸ்டார் வி.க 1 1 0 0 1 3
சுப்பர் சன் வி.க 1 0 1 0 0 1
நியு யங்ஸ் கா.க 1 0 1 0 0 1
நீர்கொழும்பு யுத் வி.க 1 0 1 0 0 1
சௌண்டர்ஸ் வி.க 1 0 1 0 0 1
கிறிஸ்டல் பெலஸ் கா.க 1 0 1 0 0 1
மாத்தறை சிட்டி வி.க 1 0 1 0 0 1
ரெட் ஸ்டார் கா.க 1 0 1 0 0 1
சொலிட் வி. 1 0 1 0 0 1

>>மேலும் பல கால்பந்து  செய்திகளைப் படிக்க<<