களனி கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற DCL 17 தொடரின் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு எதிரான போட்டி 0-0 என சமநிலையில் முடிவுற்றது.

சம பலம் மிக்க இரு அணிகளும் தமது முதல் போட்டியில் வெற்றிபெறத் தவறியமையால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது.

எனினும் சீரற்ற காலநிலை காரணமாக மைதானம் பாதிக்கப்பட்டிருந்தமையால் இரு அணி வீரர்களும் பந்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள சிரமப்பட்டனர்.

விமானப்படையின் கவிந்து இஷான் துல்லியமான முறையில் முன்னேறிச் சென்று போட்டியில் கோல் போடும் முதல் வாய்ப்பை ஏற்படுத்தினார். எனினும் அவர் அனுப்பிய பந்தை மொஹமட் நுஸ்லான் கோல் கம்பங்களுக்கு மேலே உதைந்தார்.

இரு அணிகளும் பந்தை கட்டுப்படுத்துவதில் சிரமப்பட்டதால் அதிகமான வாய்ப்புகள் தவறின.

அனுபவ வீரர் விராஜ் அசங்க, தெவிந்த பண்டாரவின் வன் ஒன் வன் வாய்ப்பை தகர்த்தெறிந்தார்.

முதல் பாதி, இரு அணிகளும் கோல் ஏதும் பெறாத நிலையில் முடிவுற்றது.

முதல் பாதி – சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 விமானப்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆட்டத் தொடக்கமும் முதலாவது பாதியை போன்றதாகவே இருந்தது.

சௌண்டர்ஸ் அணிக்காக அனுபவ வீரர்கள் கசுன் ஜயசூரிய மற்றும் கிரிஷாந்த அபயசேகர அடித்த உதைகள் விமானப்படை அணியின் கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டன.

இராணுவத்திற்கு அதிர்ச்சியளித்த அப் கண்ட்ரி; கடற்படைக்கு முதல் வெற்றி

மறு புறத்தில் விராஜ் அசங்க தனது பங்கிற்கு அபாரமான தடுப்புகளை மேற்கொண்டார்.

சௌண்டர்ஸ் அணிக்கு இரு பிரி கிக் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற போதிலும் அவை வீணடிக்கப்பட்டன.

சௌண்டர்ஸ் அணி கோலொன்றைப் போட முயற்சித்த வேளை அதனை தலையால் வெளியில் செலுத்தி விமானப்படை அணியைக் காப்பாற்றினார் நிர்மால் விஜயதுங்க.

போட்டியின் 73ஆவது நிமிடத்தில் தவறான முறையில் விளையாடியதன் காரணமாக நிர்மால் விஜயதுங்க மற்றும் சானுக எரங்கவிற்கு நேரடி சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டது. இரு அணிகளும் பத்து வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டன.

போட்டியின் இறுதி நிமிடத்தில் மீண்டும் கவிந்து இஷான் கோல் அடிக்க முயற்சித்த போதும் அது பலனளிக்காமல் போக போட்டி சமநிலையில் முடிவுற்றது.

முழு நேரம் – சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 0 – 0 விமானப்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் சிறப்பாட்டக்காரர் – விராஜ் அசங்க (சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)

மஞ்சள் அட்டை

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – கிரிஷாந்த அபயசேகர 34′, நிரேஷ் சுந்தர்ராஜ் 37′
விமானப்படை விளையாட்டு க்கழகம் – டீ கே துமிந்த 29′

சிவப்பு அட்டை

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – சானுக எரங்க 73′
விமானப்படை விளையாட்டுக் கழகம் – நிர்மால் விஜயதுங்க 73′

போட்டியை பார்வையிட