உலகக் கிண்ணத்திற்கு முன்னரே அவிஷ்க பெர்னாண்டோவுக்கு உபாதை

680

தென்னாபிரக்காவுக்கு எதிராக காடிப்பில் இன்று (24) நடைபெறும் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியின்போது கணுக்கால் காயத்திற்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் உடல் தகுதி குறித்து சந்தேகம் வெளியாகியுள்ளது.

களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த 21 வயது வலது கை துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ, போட்டியின் 18 ஆவது ஓவரின்போது பந்தை தடுக்க முயன்ற வேளையில் தனது கணுக்கால் பக்கமாக சீரற்ற முறையில் சறுக்கி விழுந்தார். இசுரு உதான வீசிய பந்தை தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டூ பிளசிஸ் கவர் திசையில் தட்டிவிட்டபோது ஓட்டம் பெறுவதைத் தடுக்க பெர்னாண்டோ பந்தை நோக்கி ஓடியபோதே அவர் இவ்வாறு விழுந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான அனைத்து தகுதியும் எனக்கு உண்டு: திமுத்

உலகக் கிண்ணத்தில் விளையாடக் கிடைத்தமை மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாகத்……

உடற்பயிற்சி நிபுணர் அஜன்த விதானகே, உடன் அங்கு விரைந்ததோடு பின்னர் அவர் மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வார ஆரம்பத்தில் எடின்பர்க்கில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெர்னாண்டோ ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது முதல் அரைச்சதத்தை பெற்றார்.

எவ்வாறாயினும் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித்தின் உடல் தகுதி குறித்து திருப்தி ஏற்பட்டிருப்பதோடு அவர் இன்றைய போட்டியில் களமிறங்கினார். பின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் இரண்டு மாதங்களுக்கு மேலாக போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தென்னாபிரிக்காவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இந்தப் பயிற்சிப் போட்டியைத் தொடர்ந்து இலங்கை அணி வரும் மே 27ஆம் திகதி சௌதம்டனில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மற்றொரு பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளது. இலங்கை அணி உலகக் கிண்ண போட்டியில் வரும் ஜூன் 1 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடவுள்ளது.     

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<