ரொனால்டோவின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது  

343
Cristiano Ronaldo's Appeal Against Five-Match Ban Rejected

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவர் தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரொனால்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என வெற்றிபெற்றது. குறித்த போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடித்தார். அப்போது அவர் தனது ஜேர்சியைக் கழற்றி பார்சிலோனா ஆதரவாளர்கள் முன்னிலையில் தனது வெற்றியைக் கொண்டாடினார். எனினும், போட்டி விதிமுறைப்படி இந்த நடத்தை தவறு என்பதால் ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாடத் தடை

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் மிகப் பெரிய போட்டியாளராகக் கருதப்படும் பார்சிலோனாவுடனான …

அதனையடுத்து சில நிமிடங்கள் கழித்து, பார்சிலோனா கோல் பகுதிக்குள் சென்ற ரொனால்டோ, பெனால்டி பெறும் வகையில் எதிரணி வீரர் தள்ளியமைக்காக கீழே விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, 2ஆவது முறையாக ரொனார்டோவுக்கு போட்டி மத்தியஸ்தர் ரிகார்டோ டி பார்கோஸ் மஞ்சள் அட்டை காண்பித்தார். ஒரே போட்டியில் இரு மஞ்சள் அட்டைகள் பெற்றதால் உடனடியாக ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கினார். இதனால் ரொனால்டோவுக்கு களத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது.

இந்நிலையில், ரொனால்டோவுக்கும் மத்தியஸ்தருக்கும் இடையில் வாக்குவாதம் எற்பட்டது. கோபப்பட்ட ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியேறும் முன் மத்தியஸ்தர் ரிகார்டோ முதுகில் கைவைத்து தள்ளினார்.

இதனால் சிவப்பு அட்டை பெற்ற ரொனால்டோவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், நடுவரை தள்ளிவிட்டதற்கு 4 போட்டிகளில் விளையாடத் தடையும் என என மொத்தம் 5 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்க ஸ்பானிய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது.

மேலும், அவருக்கு 4,500 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும், அடுத்த 10 நாட்களுக்குள் இந்த தடையை எதிர்த்து ரொனால்டோ மேன்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘இது ஒரு தண்டனையாக இல்லாத நிலையில் அட்டை காண்பிக்கப்பட்டது கடுமையானது. ரொனால்டோ வெளியேற்றப்பட்டது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது’ என்று ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளர் சினேடின் சிடேன் போட்டிக்குப் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர்

உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் தொடர்களில் ஒன்றான ஸ்பெய்னின் …

எனினும், இதை எதிர்த்து ரொனால்டோ சார்பில் செய்யப்பட்ட மேன்முறையீடு ஒரு சில மணி நேரங்களில் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவருக்கு ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரின் 2ஆவது கட்டப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் 2ஆவது கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது. இதன்படி ரியல் மெட்ரிட் அணி 5-1 என போட்டியை வென்று 10ஆவது தடவையாகவும் ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில், மேன்முறையீடு நிராகரிப்பு குறித்து ரொனால்டோ கருத்து தெரிவிக்கையில், ”இந்த தடையை எப்படி ஏற்றுக்கொள்வது என்றே எனக்கு தெரியவில்லை. அதிலும் 5 போட்டிகள் என்பது என்னைப் பொறுத்தவரையில் மிகைப்படுத்தும் செயலாகும். ஸ்பானிய கால்பந்து சம்மேளனம் அடக்குமுறையை கையாள்வது கால்பந்து விளையாட்டுக்கு ஏற்படுத்துகின்ற மிகப் பெரிய ஆபத்து” என்று தெரிவித்தார்.

இருபினும் குறித்த தடையை குறைப்பது தொடர்பாக ஸ்பானிய விளையாட்டு நீதிமன்றத்தை அனுக ரியல் மெட்ரிட் கால்பந்து நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.