கோப்பா அமெரிக்க கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த பிரேசில்

375

பிலிப்பே கோட்டின்ஹோவின் இரட்டை கோல் மூலம் பொலிவிய அணிக்கு எதிரான கோப்பா அமெரிக்க கிண்ண ஆரம்பப் போட்டியில் நட்சத்திர வீரர் நெய்மார் இல்லாத பிரேசில் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

பிரேசிலில் ஆரம்பமாகியுள்ள தென் அமெரிக்க பிராந்திய நாடுகளுக்கு இடையிலான இந்தத் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி இன்று (15) நடைபெற்றது. போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் வீடியோ மீளாய்வின் (VAR) மூலம் வழங்கப்பட்ட பெனால்டி கிக்கை கோடின்ஹோ கோலாக மாற்றி பிரேசில் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து ரொபார்டோ பெர்மின்னோ  பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி 53 ஆவது நிமிடத்தில் கோடின்ஹோ பிரேசிலுக்காக இரண்டாவது கோலை புகுத்தினார்.  

ரியல் மெட்ரிடுடன் இணைந்தார் செல்சி நட்சத்திரம் ஹசார்ட்

பெல்ஜிம் நட்சத்திர வீரர் ஈடன் ஹசார்ட் நீண்ட காலம் காத்திருந்தது போன்று செல்சி…

போட்டியின் கடைசி நிமிடங்களில் (85’) மாற்று வீரராக வந்த எவர்டன் சோரஸ்  மற்றொரு கோலை பெற்றதன் மூலம் பிரேசில் அணி உறுதியான வெற்றி ஒன்றை சுவைத்தது.

2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை முதல் முறை வெல்லும் முயற்சியிலேயே பிரேசில் இறங்கியுள்ளது. எனினும் பிரேசில் ரசிகர்களை கவர்ந்த நெய்மர், உபாதை காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எட்டுத் தடவை கோப்பா அமெரிக்க கிண்ணத்தை வெற்றி பெற்றிருக்கும் பிரேசில் அணி, கடைசியாக தொடரை நடத்திய நான்கு தடவைகளும் கிண்ணத்தை  சுவீகரித்துள்ளது.

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<