ஜப்பானை வீழ்த்தி கோப்பா அமெரிக்க தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த சிலி

74

வரவேற்பு அணியான ஜப்பானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் சிலி, கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரை அதிரடி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இதன்போது, உடற்தகுதி இன்றி இருந்த மன்செஸ்டர் யுனைடெட் வீரர் அலெக்சிஸ் சான்செஸ் ஐந்து மாதங்களில் முதல் கோலை புகுத்தினார்.

கோப்பா அமெரிக்க தொடரில் ஆசிய சம்பியன் கட்டார் சாகசம்

கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்து………

கடந்த 2015 மற்றும் 2016இல் அடுத்தடுத்து கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை சுவீகரித்த சிலி நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்குடனேயே இம்முறை தொடரில் களமிறங்கியுள்ளது. சாவோ போலோவில் ஜப்பானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் மத்திய கள வீரர் எரிக் புல்கர் தலையால் முட்டி முதல் கோலை பெற்று முதல் பாதியில் சிலியை முன்னிலை பெறச் செய்தார்.

இந்நிலையில், இகுவார்டோ வார்காஸ் தொடர்ச்சியாக சிலி அணிக்கு தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 54 ஆவது நிமிடத்தில் சிலியின் கோல்களை இரண்டாக உயர்த்தினார். இவர் கடைசியாக நடந்த நான்கு பிரதான போட்டிகளில் தொடர்ச்சியாக கோல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 82 ஆவது நிமிடத்தில் சான்செஸ் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து பந்தை நோக்கித் தாவில் தலையால் முட்டி சிலி அணிக்கு மூன்றாவது கோலைப் பெற்றார். யுனைடெட் அணிக்கு அண்மைக் காலத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சான்செஸ் கடந்த மார்ச் மாதத்தில் முழங்கால் உபாதைக்கு உள்ளானார்.

எனினும், சிலி அணிக்காக அதிக கோல்கள் பெற்ற வீரராக சான்செஸ் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவிடம் வீழ்ந்தது மெஸ்ஸியின் ஆர்ஜன்டீனா

கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ணத் ………

ஒரு நிமிடம் கழித்து சான்செஸ் இரண்டாவது கோலையும் பெற்றார். இதன்மூலம், அவர் கோப்பா அமெரிக்க தொடரில் சிலி அணிக்காக அதிக கோல் பெற்ற மார்செலோ சாலாஸின் சாதனையை முறியடித்தார். இந்தத் தொடரில் அவர் மொத்தம் 12 கோல்களை பெற்றுள்ளார்.  

இந்த வெற்றியுடன் சிலி C குழுவில் உருகுவேயுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. உருகுவே தனது முதல் போட்டியில் ஈகுவடோரை 4-0 என வீழ்த்தியது.

கோப்பா அமெரிக்கா தொடரில் பங்கேற்றிருக்கும் இரு வரவேற்பு அணிகளில் ஒன்றாகவே ஜப்பான் கலந்துகொண்டுள்ளது. எனினும், அந்த அணி இந்தத் தொடரில் தனது இளம் வீரர்களையே அதிகம் பயன்படுத்தியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்றிருக்கும் மற்றைய வரவேற்பு அணி ஆசிய சம்பியன் கட்டாராகும்.  

கோல் பெற்றவர்கள் – எரிக் புல்கர் 41′, இகுவார்டோ வார்காஸ் 54′, 83′, மார்செலோ சாலாஸ் 82′  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<