”கொம்யூனிட்டி ஷீல்ட்” கேடயம் மன்செஸ்டர் சிட்டி வசம்

129
City

லிவர்பூல் கால்பந்து அணியை பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடெட் அணி வெம்ப்லி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்ற எப்.ஏ. கொம்யூனிட்டி ஷீல்ட் கேடயத்தை சுவீகரித்தது.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் முழுநேர முடிவின்போது இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்ற நிலையிலேயே ஆட்டம் பெனால்டி சூட் அவுட் முறைக்கு சென்றது. இதன்போது மென்செஸ்டர் சிட்டி 5-4 என வெற்றியீட்டியது.  

மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை

கோப்பா அமெரிக்கா போட்டிகளில் ஊழல் இருப்பதாக ……..

முந்தைய பருவத்தின் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் எப்.ஏ. கிண்ண வெற்றியாளர்களுக்கு இடையிலேயே ஆண்டுதோறும் கொம்யூனிட்டி ஷீல்ட் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. எனினும், 2019 இல் இந்த இரண்டு தொடர்களையும் மென்செஸ்டர் சிட்டி வென்ற நிலையில் ப்ரீமியர் லீக்கில் இரண்டாம் இடம் பெற்ற லிவர்பூல் அணி இம்முறை கொம்யூனிட்டி ஷீல்டில் விளையாட தகுதி பெற்றது.  

வேகத்துடன் ஆரம்பமான போட்டியின் எட்டாவது நிமிடத்திலேயே லிவர்பூல் அணி கோல் ஒன்றை பெறும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது. பெனால்டி பெட்டிக்குள் மொஹமட் சலாஹ்வுக்கு கோலை நோக்கி பந்தை செலுத்துவதற்கு போதிய இடைவெளி ஒன்று கிடைத்தபோதும் அவர் உதைத்த பந்து இலக்குத் தவறிச் சென்றது.   

எனினும், நான்கு நிமிடங்கள் கழித்து அணியாக இருந்து செயற்பட்ட சிட்டி வீரர்கள் கோல் புகுத்தி முன்னிலை பெற்றனர். எதிரணி கோல் எல்லைக்குள் டேவிட் சில்வா வாய்ப்பொன்றை உருவாக்க அதனை ரஹீம் ஸடெர்லிங் கோலாக மாற்றினார். 

ஆட்டம் அரை மணி நேரத்தை எட்டும்போது சலாஹ் இரு பின்கள வீரர்களை முறியடித்து பெனால்டி பெட்டியின் விளிம்பு வரை பந்தை எடுத்துச் சென்றார். எனினும், அவர் வேகமாக உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியதால் லிவர்பூல் போட்டியை சமநிலை செய்யும் வாய்ப்பை தவறவிட்டது.   

ரொனால்டோ விளையாடாததற்கு எதிராக வழக்கு தொடரும் ரசிகர்கள்

தென் கொரியாவில் நட்புறவு போட்டி ஒன்றில் ………….

முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடம் இருக்கும்போது கோணர் கிக்கில் வந்த பந்தை லிவர்பூல் வீரர் ஜியோஜினோ விஜ்னல்டும் தலையால் முட்ட கிளவுடியோ பிராவோ அபாரமாக தடுத்து தனது அணியின் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டார். 

முதல் பாதி – மன்செஸ்டர் சிட்டி 1 – 0 லிவர்பூல்

இரண்டாவது பாதியிலும் லிவர்பூல் அணி பதில் கோல் திருப்புவதற்கு கடுமையாக போராடியதை காண முடிந்தது. 

போட்டியின் 57 ஆவது நிமிடத்திலும் துரதிஷ்டவசமாக லிவர்பூல் அணியின் கோல் முயற்சி ஒன்று தவறியதோடு ஒரு நிமிடம் கழித்து 20 யார்ட் தூரத்தில் இருந்து சலாஹ் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது.   

இறுதியில் 77 ஆவது நிமிடத்தில் வைத்து வேன் டிஜ்க் பரிமாற்றிய பந்தை ஜெவேல் மடிப் தலையால் முட்டி கோலாக மாற்றியதன் மூலம் போட்டியை சமநிலைக்கு கொண்டுவர லிவர்பூலால் முடிந்தது. 

வெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு

இலங்கை தேசிய கால்பந்து அணியில் ……..

தொடர்ந்து போட்டியில் இழுபறி நீடிக்க ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலையானது. இதனைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிப்பதற்கான பெனால்டி சூட் அவுட்டில் லிவர்பூலின் விஜ்னல்டுமின் பெனால்டி உதை தடுக்கப்பட்டதன் மூலம் மன்செஸ்டர் சிட்டி அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

இதனிடையே இரண்டாவது பாதி ஆட்டத்தில் பாகோ அல்கேசர் மற்றும் ஜாடொன் சான்சோ பெற்ற கோல்களின் உதவியோடு பெயர்ன் மியுனிச்சை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பொரஷியா டோர்ட்முண்ட் 2019 டி.எப்.எல். சுப்பர் கிண்ணத்தை சுவீகரித்தது.

முழு நேரம்: மன்செஸ்டர் சிட்டி 1 – 1 லிவர்பூல்

கோல் பெற்றவர்கள்

மன்செஸ்டர் சிட்டி – ரஹீட் ஸடெர்லிங் 12′

லிவர்பூல் – ஜெவேல் மடிப் 77′

பெனால்டி சூட்அவுட் – மன்செஸ்டர் சிட்டி 5 – 4 லிவர்பூல்

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<