ஐந்தாவது தடவையாகவும் சம்பியனாகிய கொழும்பு வெட்டரன்ஸ் அணி

297

கொழும்பில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற எட்டு நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாஸ்டர்ஸ் நல்லெண்ண கால்பந்தாட்ட தொடரில் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மொஹமட் ரூமியின் தலைமையிலான கொழும்பு வெட்டரன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றதன்மூலம் கொழும்பு அணி 5ஆவது தடவையாகவும் சம்பியனாக மகுடம் சூடியது.  

சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் அணி

13 ஆவது தடவையாக இடம்பெறும் முன்னாள் …

13ஆவது சர்வதேச மாஸ்டர்ஸ் நல்லெண்ண கால்பந்தாட்ட தொடர் இம்முறை கொழும்பு சிட்டி லீக் மற்றும் செரசன்ஸ் மைதானங்களில் கடந்த 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்றது. இம்முறை போட்டித் தொடரில் ஏழு லீக் ஆட்டங்களில் 6இல் வெற்றியைப் பதிவுசெய்த கொழும்பு வெட்டரன்ஸ் அணி தோல்வியுநாத அணியாக சம்பியனாகத் தெரிவாகியமை சிறப்பம்சமாகும்.

லீக் முறையில் நடைபெற்ற இம்முறை போட்டிகளில் இலங்கை அணி, 19 கோல்களைப் பதிவுசெய்து 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், எதிரணிக்கு 3 கோல்களை மாத்திரமே இலங்கை அணி விட்டுக்கொடுத்தது.

கொழும்பு வெட்டரன்ஸ் கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமான இராமநாதன் புவனேந்திரனின் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற இப்போட்டியின் லீக் ஆட்டங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒலிம்பிக் வெட்டரன்ஸ் (2-0), மலேஷியாவின் செலங்கூர் இண்டியன் எஸ்.சி (2-1), சென்னை வெட்டரன்ஸ் (2-0), சிங்கப்பூர் வெட்டரன்ஸ் (3-0) டுபாய் எக்ஸ்பெட்ஸ் மற்றும் மொரீஷியஸின் சாவன்னா வெட்டரன்ஸ் (4-0) ஆகிய அணிகளை கொழும்பு வெட்டரன்ஸ் அணி வெற்றி கொண்டது.  

எனினும், தென்னாபிரிக்காவின் பிளம்ஸ் ஸ்போர்ட்ஸ் அணியுடனான போட்டி 22 என சமநிலையில் நிறைவுக்கு வந்ததுடன், இம்முறை போட்டிகளில் பிளம்ஸ் ஸ்போர்ட்ஸ் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் சாப் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

தற்பொழுது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் …

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கால்பந்து அணியின் முன்னாள் தலைவராகவும், தேசிய அணியின் வீரராகவும் செயற்பட்ட மொஹமட் ரூமியின் தலைமையில் இத்தொடரில் பங்கேற்ற கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து அணியில் பல முன்னாள் தேசிய அணி வீரர்கள் விளையாடியிருந்தனர். அத்துடன், இவ்வணி ஏற்கனவே நான்கு தடவைகள் (2006, 2008, 2011, 2017) சம்பியன் பட்டத்தினையும் வென்றிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், மொரீஷியஸின் சாவன்னா வெட்டரன்ஸ் அணிக்காக விளையாடிய 62 வயதுடைய வீரருக்கு அதி சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டதுடன், நேர்த்தியான விளையாட்டுக்குரிய பெயார் பிளே விருது தென்னாபிரிக்காவின் பிளம்ஸ் ஸ்போர்ட்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா மற்றும் செயலாளர் ஜஸ்வர் உமர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…