சங்கக்காரவின் சாதனையை முறியடித்த கிரிஸ் கெயில்

4723
Chris Gayle
@ICC

இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார வைத்திருந்த, இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை சற்றுமுன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில் முறியடித்துள்ளார்.

சௌதெம்டனில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக களமிறங்கிய கிரிஸ் கெயில் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு…

இதில், கிரிஸ் கெயில் 29 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார்.  இதற்கு முதல் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார வைத்திருந்த சாதனையையே இன்றைய தினம் கிரிஸ் கெயில் முறியடித்துள்ளார்.

கிரிஸ் கெயில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 51.00 என்ற ஓட்ட சராசரியில் 1,632 ஓட்டங்களை குவித்துள்ளார்.  அதேநேரம், இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரது ஓட்டவேகம் 96.16 ஆக இருப்பதுடன், இந்த அணிக்கு எதிராக 4 சதங்கள் மற்றும் 8 அரைச்சதங்களையும் கெயில் விளாசியுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் குமார் சங்கக்கார இங்கிலாந்து அணிக்கு எதிரான 44 ஒருநாள் போட்டிகளில் விளைாயடி 47.79 என்ற ஓட்ட சராசரியில் 1,625 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 4 சதங்கள் மற்றும் 11 அரைச்சதங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இவர்களுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சேர் விவியன் ரிச்சட்சன், அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன ஆகியோர் முறையே 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களை பிடித்துள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<