கோபா அமெரிக்க கிண்ணத்தை 2ஆவது முறையாக சுவீகரித்தது சிலி

193
Copa america Final

அமெரிக்காவில் நடந்து வரும் 45ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் ‘கிளைமாக்ஸ்’கட்டத்துக்கு வந்துவிட்டது.

இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு நியூ ஜெர்சியில் நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில்நம்பர் ஒன்அணியான ஆர்ஜென்டினாவும், நடப்பு சாம்பியன் சிலியும் மல்லுகட்டத் தொடங்கின.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால், ஆட்டநேரம் முடிவடையும் வரை இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இதையடுத்து, பெனால்டி சூட் முறை அறிவிக்கப்பட்டது. இதில், சிலி வீரர்கள் 4 கோல்களை அடித்தனர். ஆர்ஜென்டினா வீரர்களால் 2 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து, சிலி கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சிலி தற்போது இரண்டாவது முறையாக இந்தப் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்