சென்னை சுப்பர் கிங்ஸ் : அன்றும் இன்றும் என்றும் அசைக்க முடியாத ரசிகர் கோட்டை

231

காத்திருப்புக்கள் காதலை அதிகப்படுத்தும் என்பதெல்லாம் கதைகளிலும் கவிகளிலும் மட்டும் தான். நிதர்சனத்தில் இதெல்லாம் சாத்தியமா? இரண்டு வருட இடைவெளி எல்லாவற்றையும் மாற்றிவிடவல்லது. ஆழ்மனங்களில் அன்பைப் புதைத்துவிடக்கூடியது. அப்படிப்பட்ட இரண்டு வருடங்கள் போட்டிகளில் இருந்து விலக்கிவைக்கப்பட்ட ஒரு அணி மீண்டும் தொடருக்குள் வந்தால்? தன்னுடைய அடையாளமும் தனித்துவமும் நிகரற்ற ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு மீண்டும் கிடைத்தால்? அதிக வயதான அணியென்ற பெயருடன் உள்நுழைந்து மீண்டும் கிண்ணத்தை வென்றால்? “2 வருத்திற்கு முன்னாலே எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்திட்டேன்னு சொல்லு” என்று தலைவர் சொல்லிக்காட்டியதை ஸ்டைலாக செய்து காட்டியது “சென்னை சூப்பர் கிங்ஸ்”.

மும்பை இந்தியன்ஸ்: இலங்கை ரசிகர்களின் ஒரு தசாப்த காதல்

அது 2007 கிரிக்கெட் உலகக் கிண்ணம் என்ற புயல் வீசி…….

ஒரு சாதாரண அணியின் ரசிகன் அந்த அணியின் வெற்றியைக் கொண்டாடுவான். தோல்வியில் அமைதி கொள்வான். மீண்டும் தோற்றால் அந்த அணிக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல சென்றுவிடுவான். ஆனால், இந்தக் கூட்டம் அப்படியல்ல. சேப்பாக்கம் MA சிதம்பரம் மைதானம் பயிற்சிப் போட்டிகளை பார்ப்பதற்குக் கூட ரசிகர்களை அனுமதிக்கும் கலைக்கோவில். ஒவ்வொரு சென்னைப் போட்டியும் ஒவ்வொரு திருவிழா போன்று பிரம்மாண்டமாய் இருக்கும். அரங்கு முழுவதும் மஞ்சளால் நிறைந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னை போட்டியென்றாலே சிவமணியின் ட்ரம்ஸ் இல்லாமலிருக்காது. தமிழ்த் திரையிசையின் அத்தனை குத்துப்பாடல்களும் வானைப்பிளந்து ஒலித்துக்கொண்டிருக்கும். ஏழை,1 பணக்காரன் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி பறக்கும் ஒவ்வொரு விசிலும் தான் எங்கள் அடையாளங்கள். இது ஒரு அணியல்ல. எங்கள் கடந்த தசாப்தத்தின் உணர்வுகளின் சங்கமம்.  

அது 2007, உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி இலங்கை, வங்கதேச அணிகளிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேற இந்திய அணியின் தலைமை 26 வயதே நிரம்பிய இளைஞனிடம் ஒப்படைக்கப்படுகிறது. 7ம் இலக்க ஜெர்சி, வளர்ந்த நீண்ட கேசம், Rbk துடுப்பு மட்டை, எதற்கும் புன்னகைக்கும் சாந்தமான முகம் என்று தன தோற்றத்திலேயே ரசிகர்களை வசீகரித்திருந்தான். தன்னுடைய முதலாவது தொடரான T 20 உலகக்கிண்ணத்தை இறுதிப்போட்டியில் தங்கள் வைரிகளான பாகிஸ்தானை வென்று தன் தலைமையின் சிறப்பை நிரூபித்தான்மகேந்திர சிங் தோனி

T 20 போட்டிகள் மெல்ல மெல்ல கிரிக்கட் உலகை ஆக்கிரமிக்க இந்தியாவில் .பி.எல் முதல்முறையாக ஆரம்பமாகிறது. ஏலத்தை ஆரம்பித்த ரிச்சர்ட் மாட்லி ஏலத்தில் அறிவித்த முதல் வீரர் அன்றைய இந்திய ரசிகர்களின் கதாநாயகன் தோனி. பெயரைச் சொன்னதுமே 8 அணிகளும் போட்டிபோட்டு ஏலமெடுக்க ஆரம்பித்தன. முதலாவது .பி.எல் இல் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரன் தோனி. “தோனியயை என் அணிக்கு வாங்குவதற்காக என்னுடைய காற்சட்டையை கூட நான் விற்க தயாராக இருக்கிறேன்என்று கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறியது எவராலும் இலகுவில் மறந்துவிட முடியாது.

டோனியைத் தொடர்ந்து உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் உப தலைவர் ரெய்னா, பத்ரினாத், அநிருத்தா ஸ்ரீகாந், பாலாஜி, முரளி விஜய், அமர்நாத், என்று ஏகப்பட்ட தமிழ் வீரர்களைக் கொண்ட ஒரு தமிழக அணியைப் பார்ப்பது அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்தது.  இவர்களுடன் முத்தையா முரளிதரன், சாமர கப்புகெதர, நுவன் குலசேகர ஆகிய இலங்கை வீரர்களும் இணையவே இலங்கையின் ரசிகர்களும் அதன் மீது  ஈர்க்கப்பட்டனர்.  மத்யூ ஹெய்டன், மைக் ஹசி, மாக்கயா என்டினி, ஸ்டீபன் பிளெபிங், ஜேக்கப் ஓரம், அல்பி மோர்க்கல், அன்றூ பிளின்டொப் என்று சர்வதேச சுப்பர் ஸ்டார்களை குவித்து வைத்திருந்தது சென்னை அணி.

ஏப்ரல் 19, 2008 பஞ்சாப்பிற்கு எதிராக ஆரம்பிக்கிறது சென்னையின்  .பி.எல் பயணம் ஆரம்பமாகிறது.  மைக் ஹசி 54 பந்துகளில் 116 ஓட்டங்களை விளாச 20 ஓவர்களில் 240-5 என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்கும்.  அதுவே அந்த .பி.எல்லின் அதிகூடிய ஓட்டமும் கூட சங்கக்கார அரைச்சதம் கடந்தும் கூட அந்தப் போட்டியில் பஞ்சாப்பால் வெற்றியை நெருங்கக்கூட முடியவில்லை.  அந்த வருடம் இறுதிப் போட்டிக்கு தெரிவானபோதும் சென்னை தன்னுடைய முதல் கிண்ணத்தை தவறவிட நேரிட்டது.

அடுத்த வருடத்தின் ஆரம்பம் சறுக்கலாக இருந்தாலும் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியை போர்ட் எலிஸபத்தில் சந்திக்கிறது சென்னை.  முதல் இன்னிங்ஸில் 179/5 என்ற கணிசமான இலக்கே நிர்ணயிக்கப்படும்.  ஆனால் முரளியின் சுழலில் சிக்கிய பெங்களூர் அணி 87 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்து சரணடையும் இந்தப் போட்டியில் முரளியின் பந்துவீச்சில் 4 ஒவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 11 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டமை சென்னை அணியின் வரலாற்று பக்கங்களில் பதியப்பட்டது.

தென்னாபிரிக்காவிலே நடந்த இந்தத் தொடரில் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயம் மத்யூ ஹைடனின் துடுப்பு மட்டை. மங்கூஸ் துடுப்பு மட்டை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு சில காலங்களிலே றைடன் அந்த மட்டையுடன் ஆட ஆரம்பித்தார்.  பலவிதமான விமர்சனங்களும் எழுந்தது. 2010ம் ஆண்டு டெல்லி அணிக்கெதிராக 43 பந்துகளில் 93 ஓட்டங்களை விளாச அந்தத் துடுப்பு மட்டை மிகப்பெரிய பேசுபொருளாகியது.

2010ம் ஆண்டு சென்னை ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில் திளைத்த வருடம் சச்சின் தொடர் முழுவதும்  சிறப்பாக ஆடியிருந்தபோதும் இறுதிப்போட்டியில் மும்பைக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க  முடியாமல் போக, சென்னை அணி தன்னுடைய முதலாவது .பி.எல். வெற்றியைச் சுவைத்தது.  அதே வேகத்தில் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் சென்று அங்கும் தங்கள் ராஜாக்கள் என்று நிரூபித்து வருகிறது சென்னை.  .பி.எல் போட்டிகளில் தொடர் நாயகனாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவாக ஆரவாரம் அதிகமாகியது.  இந்த இறுதிப் போட்டிதான் சென்னைமும்பை என்ற வைரிகள் உருவாக அடிப்படை ஆகியது.

2010ம் ஆண்டின் இரட்டைச் சம்பியன் பட்டத்துடன் நடப்புச் சம்பியன்களாக தொடருக்குள் 2011ம் ஆண்டு நுழைந்தது சென்னை இறுதிப் போட்டியில் கெயில், டிவிலியர்ஸ், கோலி என்று சிறந்த வரிசை கொண்ட பெங்களூர் அணியை எதிர்த்தாடும் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி முரளி விஜய் விளாசிய 95 ஓட்டங்களுடன் 203-5 என்ற இலக்கை நிர்ணயிக்கும் அஷ்வினின் பந்துவீச்சை ஈடுகொடுக்க முடியாமல் 147 ஓட்டங்களுக்குள் பெங்களூர் அணியை கட்டுப்படுத்தி தொடர்ந்து இரண்டாவது தடவை கிண்ணத்தை வென்ற ஒரே அணியென்ற பெருமையை தனதாக்கியது சென்னை.

150kmph வேகத்தில் பந்து வீசும் இளம் இந்திய வீரர்

ஐ.பி.எல். தொடரில் இம்முறை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்……

சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான போட்டியும் பெரிதாக ஆரம்பித்தது. 2012 முதலாவது போட்டியிலேயே மும்பை அணி சென்னையை 112 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் பறிகொடுக்கச் செய்து 8 விக்கட்டுகளால் அந்தப் போட்டியை வெற்றி பெறவே அதைத் திருப்பிக் கொடுக்கும் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தது சென்னை. லீக் போட்டிகள் முடிவடைந்து மூன்றாம் நான்காம் இடங்களை முறையே மும்பை, சென்னை பெற்றுக்கொள்ள அடுத்த கட்டத்திற்கு செல்லும் பலப்பரீட்சை நடாத்த வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் உரித்தானது.

காயப்பட்ட சிங்கத்தின் மூச்சு கர்ஜனையை விட பலமானது மும்பை அணியின் பந்துவீச்சை தகர்க்க ஏனைய அணிகள் தினறியபோது தோனி 20 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசி அணி 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் சென்னை.  ஆதற்கு ஈடுகொடுக்க முடியாத மும்பை 149 ஓட்களுக்கு சுருண்டுவிடவே முன்னேறிய சென்னை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி 190 ஓட்டங்கள் குவித்த போதும் பிஸ்லா, கலிஸ் ஜோடி கொல்கத்தாவின் முதல் வெற்றியை உறுதி செய்தனர்.

அடுத்த வருடமும் இறுதிப் போட்டிவரை சென்ற சென்னை வெற்றியைத்தவற விட்டபோதும் செம்மஞ்சள் தொப்பி (Orange Cap) மற்றும் ஊதாத் தொப்பி (Purple Cap) ஆகியவை சென்னை வசமாகியது.  ஆந்த ஒரு தொடரில் பிராவோ எடுத்த 32 விக்கட்கள் இன்னமுமே வீழ்த்தப்படாத சாதனையாக தொடர்கிறது.

ஏப்ரல் 13, 2013 பெங்களூர் அணிக்கெதிரான அந்தப் போட்டி யாராலும் மறக்க இயலாத ஒரு காவியம்.  கெயில் டக்கவுட் ஆகிய பின்னராக கோலி, டிவிலியர்ஸின் அதிரடி சேப்பாக்கத்தை சற்று அமைதியாக்கவே 165 ஓட்டங்களை குவித்தது RCB. பதிலெடுத்தாடிய சென்னை 4 ஓவர் முடிவிலே ஹசி, விஜய் இருவரையூம் இழந்து 10-2 என்று தோல்வியின் விளிம்பில் இருந்தது.  15வது ஓவரில் 101-4 என்ற நிலை தோனி ஆடிக்கொண்டிருந்தார்.  தோனியின் விக்கெட்டும் பறிபோய்விட ருத்ர பிரதாப் சிங்கின் இரு ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை. ஜடேஜா முதல் இரு பந்துகளையும் பவுண்டரி சிக்ஸர் என்று விரட்ட இறுதிப் பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலை வந்தது.  பவுன்ஸராக வந்த அந்தப்பந்து எட்ஜாகி நேராக களத்தடுப்பு வீரரிடம் பிடி கொடுத்து ஆட்டமிளக்க சேப்பாக்கம் முழுவதும் தலையில் கைவைத்தது. ஒரு செக்கன் நிசப்தம் நடுவர் அந்தப் பந்தை முறையற்ற பந்து என்று அறிவித்ததை அவர்கள் இனங்கண்டு கொள்ள கொஞ்சநேரம் எடுத்தது.  மலர்ந்த கோலியின் முகமும் வாடிப்போயிற்று. சென்னை 28 படம் பார்த்ததைப்போல் இருந்தது அந்தப்போட்டி.

சென்னையின் வரலாற்றுப் பக்கங்களில் திகிலான போட்டிகளுக்கு குறையேதும் இருப்பதில்லை.   2014ம் ஆண்டு பஞ்சாப்புடனான 2வது தகுதிகாண் போட்டி சின்னத் தல ரெய்னாவை கொண்டாடித் தீர்த்ததால் விரேந்தர் சேவாக் 58 பந்துகளில் 127 ஓட்டங்கள் விளாச 226 என்ற பாரிய இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்படும்.  ரேய்னா ஆரம்பத்தில் இருந்தே அடித்தாட 6வது ஓவர் பர்விற்தர் அவானாவால் வீசப்பட்டது.  முதல்பந்தில் 6 அடுத்து 6 பின்னர் 4, 4 அடுத்தபந்து முறையற்ற பந்து என்று அறிவிக்கப்பட அதற்கும் 4,4,4 அன்று ஒரு ஓவரில் 7 பவுண்டரி விளாசினார் ரெய்னா. 6 ஓவர்கள் முடிவில் சென்னையின் ஓட்ட எண்ணிக்கை 100 ஓட்டங்கள் ரெய்னா 25 பந்துகளில் 87 ஓட்டங்கள் ஆனால் துரதிஷ்ட வசமாக அடுத்த பந்திலேயே ஜோர்ஜ் பெய்லியின் தவறாத இலக்குக்கு பலியாகி ரன்அவுட் ஆக நேரிட்டது.  அத்தோடு ஓட்ட வேகம் குறைந்து போட்டி கையைவிட்டுச் சென்ற போதும் ரெய்னா எங்கள் மனங்களில் நிலைத்து விட்டார்.

“நோ போல்” சர்ச்சையுடன் மும்பை அணிக்கு முதல் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) பெங்களூரில் நடைபெற்ற றோயல்……

ஆட்ட நிர்ணயம் செய்ததாய் எங்கள் சி. எஸ் . கே. மீது குற்றம் சுமத்தப்பட்டு 2 வருடம் தடை விதிக்கப்பட்டது. தோனியும், ரெய்னாவும் பிரிந்து வெவ்வேறு அணிகளை வழிநடத்தினர். எங்களுக்கோ .பி.எல் வெறிச்சோடிப் போயிருந்தது.

நாங்கள் இல்லாத நேரத்தில் சன்ரைசர்ஸ் தனது முதல் கிண்ணத்தை வென்றுவிட்டது. மும்பை மூன்று கிண்ணம் வென்ற முதல் அணியாக முடி சூடியிருந்தது.சென்னையின் சத்திரியர்கள் புனேயிலும் குஜராத்திலும் அஞ்ஞாத வாசம் பூண்டிருந்தனர். எங்களுக்கும் காலம் வரும். காத்திருந்தோம். அந்த இரண்டு வருடங்கள் நாங்கள் தவமிருந்தோம். எங்கள் தலைவன் வருவான் எங்களைச் சேப்பாக்கம் அழைத்துச்செல்வான் விசில் மாரி பொழியும். எங்களுக்கு விடிவு வரும் என்று பொறுத்திருந்தோம். தீர்க்கப்படாதா எங்கள் பழைய கணக்குகளைத் தயார்ப்படுத்தியிருந்தோம். அந்த நாளும் வந்தது.

வந்தாரை வாழவைக்கும் சென்னை. சென்னை வீரன் ட்விட்டர் கூட  தமிழ் பேசும் என்பதை புதிய தோழர்கள் ஹர்பஜனும் தாஹிரும் பறைசாற்றினர். ஏப்ரல் 7 2018 .பி.எல். இன் முதல் போட்டி மும்பை 165-4 என்ற ஓட்டங்களோடு நிறைவு செய்திருக்க பதிலெடுத்தாடிய சென்னையின் விக்கெட்கள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க மறுபுறம் பிராவோ தன் அதிரடியை அறிவித்துக்கொண்டிருந்தார். உபாதை காரணமாக யாதவ் முன்னரே வெளியேற 9 விக்கெட்கள் வீழ்த்தப்பட மும்பை அணி ஆர்ப்பரிக்கும். அப்போது யாதவ் களம் புக மீண்டும் மைதானம் அமைதியாகும். இறுதி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்க சென்னை பெற்ற அந்த வெற்றி சென்னைக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை சொல்லாமல் சொல்லிற்று.

ஒரு அணி ஒருவரை மட்டும் நம்பி இருக்க கூடாது. ஒவ்வொருவரும் அணியின் வெற்றியை மட்டுமே அடிநாதமாய்க் கொண்டிருக்க வேண்டும். 2018 அதை நாம் கண்களாலே கண்டோம். முதல் போட்டி பிராவோ பின்னர், பில்லிங்ஸ், ராயுடு, தோனி, ரெய்னா என்று ஒவ்வொரு போட்டியிற்கு ஒவ்வொரு வெற்றியாளர்கள். இந்தத் தொடரின் 17வது போட்டி ராஜஸ்தானுடனானது. ஆரம்பத்தில் மிக நிதானத்தை கையாண்ட வொட்ஸன் திடீரென ஆக்ரோஷம் ஆனார். 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் சென்னை 204 ஓட்டங்கள் குவிக்க ராஜஸ்தான் 140 ஓட்டங்களுக்கே சுருண்டுவிடும்.

மாலிங்கவுடன் மும்பை அணியில் இணைந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடிவரும் மும்பை….

2018 .பி.எல்லின் மிகச்சிறந்த தலைவன் என்று போற்றப்பட்ட கேன் வில்லியம்சன் சென்னையை சந்தித்த 4 சந்தர்ப்பங்களும் தோல்வியை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. முதலாவது தகுதிகாண் போட்டியிலே ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்து செல்ல டு ப்ளெசிஸ் மட்டும் தனிமனிதனாய் சாகசம் புரிவார். புவனேஷ்வர் குமாரின் இறுதி ஓவரில் 6 ஓட்டங்கள் தேவைப்பட முதல் பந்தையே சிக்ஸராக்கி சாதிப்பார் டு ப்ளெஸிஸ்.

அடுத்தது இறுதிப்போட்டி. எங்களின் இரண்டு வருட ஏக்கங்களிற்கு பலன் கிடைத்த நாள். முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 178 என்ற சிறந்த இலக்கை வைத்தாலும் வொட்ஸனின் சதம் அதை மிகவும் இலகுவாக்கியது. சாதாரண போட்டிகளையே மாரடைப்பு வருமளவுக்கு கொண்டு செல்லும் சென்னை இந்த போட்டியை இப்படி முடித்தது சந்தோஷத்தின் இரட்டிப்பு.

இரண்டு வருடத்தின் பின்னர் வந்தாலும் கூட ராஜா ராஜாதான் என்று சொல்லி அடித்து தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது. ஆனபோதும் சென்னையின் தனித்துவம்  சேப்பாக்கம் எம். . சிதம்பரம் விளையாட்டு மைதானம் தான். சென்ற வருடம் அரசியல் காரணங்களால் முதல் போட்டி மட்டுமே அங்கு நடைபெற்றது. இந்த வருடம் அந்தக்குறையும் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிங்கத்தோட கோட்டைக்குள்ள புகுந்து வேட்டையாட ஒரு தனி தில் இருக்க வேண்டும்.

போட்டியில் மட்டுமல்ல கண்ணியத்திலும் முதலிடம் எப்போதும் சென்னைதான். இரண்டு தொடர்களில் விளையாட முடியாமல் போனாலும்கூட இன்றுவரை அதிக fairplay விருதுகளை தன்னகத்தே கொண்ட அணி சென்னை மட்டும்தான். ஒவ்வொரு போட்டியும் கடைசி ஓவர்வரை போனாலும் கூட தோனி களத்தில் இருந்தால் என்றும் எங்கள் கண்களில் பயம் தெரிவதில்லை. தென்னாபிரிக்க மண்ணில் ஒரு பந்துவீச்சு சகலதுறை ஆட்டவீரனாக பார்க்கப்பட்ட அல்பி மோர்க்கலை .பி.எல்லின் மிகப்பெரிய சிக்ஸருக்கு சொந்தக்கரானாக்கிய அணி எங்கள் சென்னை.

பட்லரின் ஆட்டமிழப்பை வைத்து விழிப்புணர்வை ஆரம்பித்த பொலிஸார்

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் (25) நடைபெற்ற…..

எப்படி நாங்கள் சென்னை மேல் இவ்வளவு பாசம் கொண்டோமோ அதே போல் சென்னை அணியின் ஒவ்வொரு அணுவும் எங்கள் மேல் பாசம் வைத்திருக்கிறது. அதுவே ஒரு பள்ளிப்பாலகனாய் கண்டு வியந்த அணியை சமூகத்தில் ஒரு இளைஞனான பிறகும் காதலிக்க வைக்கிறது. அம்மா,அப்பா, அண்ணா, தம்பி, அக்கா, தங்கை, நண்பர்கள் என்று யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாரில்லாத ஒரு உறவு சி.எஸ்.கே.  சென்ற வருடம் வெற்றிக்களிப்பில் சென்னை வீரர்கள் அனைவரும் இருக்க தோனி மட்டும் ஸிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடுவதை பார்த்தவுடன் எங்கள் முகங்களில் எங்களை அறியாமலே புன்னகை படர்ந்து விட்டது.

ரெய்னாவும் தோனியும் மைதானத்தில் மோட்டார் சைக்கிள் ரவுண்ட்ஸ் வரும் போதெல்லாம் எதோ நாங்களே பின்னால் உட்காந்து செல்வது போல் ஆர்ப்பாட்டமில்லாத சந்தோஷமிருக்கம். அது தான் சி.எஸ்.கே. தோனிக்காகவோ முரளிக்காகவோ தமிழ்நாட்டிற்காகவோ ஆரம்பித்த ஒரு ஈர்ப்பு இன்று எவ்வளவு முயற்சித்தாலும் மறக்கமுடியாத முதல் காதலின் நினைவுகளாய் எங்களோடு ஒட்டி உறவாடுகிறது. என்னைப்போலவே அந்த நினைவுகள் உங்களையும் சிரிக்க வைத்தால், நமஸ்காரம் சி.எஸ்.கே.!

சென்னை சுப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க!

நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க!

#yellove #Whitslepodu

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<