பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தேசிய சாதனையுடன் பதக்கம்

377

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்றைய தினம் நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர் சதுரங்க லக்மால் ஜயசூரிய வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்தார்.

வீரர்களுக்கான சம உரிமையை வழங்கவுள்ள கோல்ட் கோஸ்ட் ஆரம்ப விழா

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்… அமெரிக்காவில் வசித்து …

21ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா நேற்று(04) அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்ட்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்நிலையில், இம்முறை விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று பளுதூக்கல், நீச்சல், பெட்மிண்டன், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக் மற்றும் உள்ளக சைக்கிளோட்டம் உள்ளிட்ட போட்டிகள் ஆரம்பமாகின.

இதில் இலங்கைக்காக பதக்கங்களை பெற்றுக்கொடுக்கின்ற முக்கிய போட்டியாக அமைந்த பளுதூக்கல் போட்டிகளில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட சதுரங்க லக்மால் ஜயசூரிய, மொத்தமாக 248 கிலோகிராம் பாரம் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் படைத்தார்.

எனினும், ஒரு கிலோ கிராம் வித்தியாசத்தில் சதுரங்க லக்மால், வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

இவர் ஸ்னெச் முறையில் 114 கிலோகிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் 134 கிலோகிராம் எடையையும் தூக்கி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பரிதி வட்டம் எறிதலில் எம்மாவின் மற்றுமொரு தேசிய சாதனை

பூட்டானில் இன்று (27) இடம்பெற்று முடிந்திருக்கும், தெற்காசிய நாடுகளுக்கான …

இப்போட்டியல், மலேஷியாவின் மொஹமட் அஸ்ரோய் ஹசல்வா, 261 கிலோகிராம் பாரம் தூக்கி பொதுநலவாய விளையாட்டு விழா சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், இந்தியாவின் குரு ராஜா 248 கிலோகிராம் பாரம் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

தனது வெற்றி குறித்து போட்டியின் பிறகு சதுரங்க லக்மால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் தங்கப் பதக்கத்தை வென்றதைப் போல உணர்கிறேன். சுமார் 5 மாதங்களாக இதற்காக மும்முரமாக பயிற்சிகளை முன்னெடுத்தேன். சோறு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பாண் மற்றும் முட்டைகளை மாத்திரம் உட்கொண்டுதான் இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டேன்.  

இலங்கை இராணுவத்தில் கொமாண்டோ படைப்பிரிவில் இணைந்துகொண்ட பிறகுதான் நான் பளுதூக்கல் விளையாட்டில் இணைந்து கொண்டேன். என்னுடைய முதல் பயிற்சியாளர் சாயன்ட் மேஜர் ஜயதிலக ஆவார். அவருடைய முயற்சியினால் தான் நான் இந்த இடத்துக்கு வந்தேன். அதேபோல இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவிலும் பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மற்றும் ஓஷியானா பளுதூக்கல் போட்டித் தொடரில் பங்கேற்ற சதுரங்க லக்மால் ஜயசூரிய, ஆண்களுக்கான 56 கிலோகிராம் எடைப் பிரிவில் மொத்தமாக 247 கிலோகிராம் பாரம் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் நிகழ்த்தியிருந்தார்.

இதில் ஸ்னெச் முறையில் 117 கிலோகிராம் எடையையும், ஜேர்க் முறையில் 130 கிலோகிராம் எடையையும் தூக்கி, அவர் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.