சந்திமாலுக்கு போட்டித் தடை : பயிற்சியாளர், முகாமையாளர் மீது குற்றச்சாட்டு

2621

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியினர் விளையாட்டின் மகத்துவத்திற்கு மாறாக செயற்பட்டுள்ளதாக   குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், பந்தின் தன்மையை மாற்றியமைக்காக அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தன்மீது சாட்டப்ட்டுள்ள பந்து சேதப்படுத்தல் குற்றச்சாட்டினை மறுக்கும் தினேஷ் சந்திமால்

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மீது சர்வதேச..

தற்பொழுது மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக சென். லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் ஆடும்பொழுது, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் பந்தின் தன்மைகளை மாற்றி சேதப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டார் என ஐ.சி.சி குற்றம் சுமத்தியிருந்தது.

இதனால், குறித்த போட்டியில் நடுவர்களாக இருந்த அலீம் தார் மற்றும் இயன் கூல்ட் ஆகியோர், ஐந்து மேலதிக ஓட்டங்களை (Penalty Runs) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கொடுத்ததுடன், மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்னர் வேறு பந்தினை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

எனினும், இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த இலங்கை வீரர்கள் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்காக மைதானத்திற்குள் வர மறுத்தனர். அதேவேளை, இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, மற்றும் அணி முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஸ்ரீநாத்துடன் இது தொடர்பில் விவாதத்திலும் ஈடுபட்டனர்.

எவ்வாறிருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர், இலங்கை வீரர்கள் மைதானத்திற்குள் நுழைய போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

மேற்கிந்திய டெஸ்ட்டை புறக்கணிக்க இருந்த இலங்கை அணிக்கு என்ன நடந்தது?

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில்…

இவ்வாறான நிகழ்வுகளின் பின்னர், இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர், ‘விளையாட்டின் மகத்துவத்திற்கு மாறான நடத்தையில் ஈடுபடுவதுதொடர்பான சரத்து 2.3.1 இன் 3ஆவது நிலையை மீறியிருப்பதாக .சி.சி. தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சட்சன் செவ்வாய்க்கிழமை (19) குற்றச்சாட்டு பதிவு செய்தார்.  

பின்னர், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் காணொளி ஆதாரத்தின் மூலம்,தினேஷ் சந்திமால் பந்தின் தன்மையை மாற்ற செயற்கை பதார்த்தம் ஒன்றினை பிரயோகிப்பதும், அதற்கு முன்னர் தனது இடதுகைப்பைக்குள் இருந்து இனிப்பு பண்டங்களை எடுத்து வாயில் போடுவது பதிவாகியிருக்கின்றது. எனவே, ஐ.சி.சி. சந்திமால் மீதான குற்றத்தை நிரூபித்துள்ளது.

இதன்படி, சந்தமால் பந்தின் தன்மையை மாற்றியமைக்காக இரண்டு குற்றப் புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு, குறித்த போட்டியின் நூறு சதவீத போட்டிச் சம்பளத்தை அபராதமாக செலுத்தவும் வேண்டும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இரண்டு குற்றப் புள்ளிகள் எனும்போது, அடுத்து வரும் ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு சர்வதேச ஒரு நாள் போட்டிகள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான தடையாக அமையும்.

சந்திமால் அடுத்த ஆடும் போட்டியாக பார்படோசில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான பகலிரவு டெஸ்ட் ஆட்டம் உள்ளது. எனவே, சந்திமாலுக்கு குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவரில் ஒருவரேனும் குற்றவாளி இல்லை என்றால், .சி.சி. ஒழுங்கு விதியின் சரத்து 5.2 இன் அடிப்படையில் விடயம் தொடர்பில் கண்டறிய ஒழுங்கு விதி ஆணையத்தில் இருந்து நீதித்துறை ஆணையாளர் ஒருவரை .சி.சி. நியமிக்கும்.  

அனைத்து 3ஆம் நிலை விதி மீறல்களும் நான்கு மற்றும் எட்டுக்கு இடைப்பட்ட இடைநீக்கப் புள்ளிகளைக் கொண்டதாக அமையும் என்பதும் இங்கு நினைவுகூறத் தக்கது.          

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<