திசரவை புகழ்ந்த சந்திமாலுக்கு வெற்றியில் முழுத் திருப்தியில்லை

1033
Chandimal

ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடத் தவறியதன் காரணமாகவே போனஸ் புள்ளியை இழக்க நேரிட்டது என இலங்கை ஒரு நாள் அணியின் இடைக்காலத் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

எனவே, இந்த வெற்றியானது அணி மீதான நம்பிக்கையை அதிகரித்த போதிலும், தனிப்பட்ட முறையில் தனக்கு இந்த வெற்றியானது திருப்தியை கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.  

பெரேரா சகலதுறைகளிலும் அசத்த முக்கோண தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள்..

பங்களாதேஷின் மிர்பூரில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று(22) நடைபெற்ற தீர்மானமிக்க ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் இலங்கை தோல்வியை சந்தித்திருந்தது. எனவே, இப்போட்டி இலங்கை அணிக்கு இவ்வாண்டில் பெறப்பட்ட முதலாவது வெற்றி என்பதுடன், புதிய பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க அணியை பெறுப்பெடுத்த பின்னர் பெறப்பட்ட முதலாவது வெற்றி என்பதும் முக்கியமானது.   

இந்நிலையில் குறித்த போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தினேஷ் சந்திமால் கருத்து தெரிவிக்கையில், உண்மையில் முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய பின்னர் இந்தப் போட்டியில் எந்தவொரு எதிரணியுடன் நாம் விளையாடினாலும் அந்தப் போட்டி எமக்கு மிகப் பெரிய சவாலாகவே அமைந்திருக்கும். எமக்கு இப்போட்டித் தொடரில் 4 போட்டிகள் உள்ளன. முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த இலக்கை அடைய முடியாமல் போனது.  

எனினும், இந்த தொடரில் தொடர்ந்து நாங்கள் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் இந்தப் போட்டிக்கு முன்னர் நாங்கள் நிறைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். ஆனால் வெற்றியைப் பெற்றுக்கொள்வதுதான் எமது பிரதான குறிக்கோளாக இருந்தது.  

ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம்

இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள..

குறிப்பாக இந்த ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவது மிகவும் கடினமாக இருந்தது. 2 இன்னிங்ஸிலும் பந்துவீச்சின் போது மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. எனவே, 40 ஓவர்களுக்குள் போட்டியை நிறைவுக்கு கொண்டு வந்து மேலதிக புள்ளிகளுடன் (போனஸ்) வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் களமிறங்கிய போதிலும், ஆடுகளத்தின் தன்மைக்கு அமைய எம்மால் அந்த இலக்கை அடைய சிறந்த முறையில் துடுப்பாட முடியாமல் போனது.   

ஆனால் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டனர். அவர்களுக்குத் தான் அனைத்து கௌரவமும் செல்ல வேண்டும். அத்துடன் எமது துடுப்பாட்டம் ஆரம்பத்தில் சிறப்பாக இருந்த போதிலும், போட்டியை நிறைவு செய்வதில் மத்திய வரிசை வீரர்கள் இன்னும் அதிகம் பொறுப்புடன் விளையாட வேண்டும்.

இந்நிலையில் திசர பெரேராவின் சகலதுறை ஆட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தினேஷ் சந்திமால், எமது அணியில் இருந்த அனுபவமிக்க வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காரணமாக முதல் போட்டியுடன் வெளியேறினார். ஆனால் அனுபவமிக்க வீரராக திசர பெரேராவினால் அணிக்கு கிடைத்து வருகின்ற பங்களிப்பு தொடர்பில் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் விளையாடிய அனுபவம் மாத்திரமல்லாது, பங்களாதேஷிலும் விளையாடிய அனுபவம் அவருக்கு இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு முக்கிய காரணியாக அமைந்ததுஎன்றார்.

18 இலங்கை வீரர்களுக்கே ஐ.பி.எல் இறுதி ஏலத்திற்கு வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்டு வருகின்ற ஐ.பி.எல்..

இதேநேரம் புதிய பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், உலகின் முதல்தர பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான ஹத்துருசிங்கவுடன் பணியாற்ற கிடைத்தமை பெருமையளிக்கிறது. அவரிடம் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். எனவே வீரர்களாக ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து பல விடயங்களை கற்றுக்கொள்கின்றோம். எனவே எதிர்வரும் காலங்களில் எமது வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக சந்திமால் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு நாள் அணியின் தலைவராக மீண்டும் செயற்படக் கிடைத்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், ஒரு தலைவராக செயற்படுவதென்பது எப்போதும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். ஆனால் அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றியைக் கொடுப்பதற்குத்தான் எனது நோக்கமும் முயற்சியும். எனவே, எனக்கு கிடைத்த பொறுப்பை எதிர்காலத்திலும் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.