ரியல் மெட்ரிட் தீர்க்கமான வெற்றி: இங்கிலாந்து கழகங்களுக்கு இலகு வெற்றி

72

ஐரோப்பிய சம்பியன்ஸ்  லீக் தொடரின் குழு நிலை போட்டிகள் சில இலங்கை நேரம்படி இன்று (23) அதிகாலை நடைபெற்றன. அதன் முக்கிய சில போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் கலடாசராய்

நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கிய ரியல் மெட்ரிட் அணி துருக்கி கழகமான கலடாசராய்க்கு எதிராக 1-0 என வெற்றி பெற்று ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது

ஷெபீல்ட் அணியிடம் ஆர்சனலுக்கு அதிர்ச்சித் தோல்வி

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணிக்கு ……..

சினேடின் சிடேனின் ரியல் மெட்ரிட் இந்த வாரம் நடந்த மல்லோர்கா அணியுடனான லாலிகா போட்டியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததோடு சம்பியன் லீக்கின் முதல் இரு குழு நிலை போட்டிகளிலும் வெற்றிபெறத் தவறியது. இந்நிலையில் ஸ்தன்பூலில் நடைபெற்ற போட்டியிலும் அந்த அணி தோற்றால் சிடேன் முகாமையாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் பரவிய நிலையிலேயே இந்த போட்டி நடைபெற்றது

எனினும், போட்டி ஆரம்பித்து 18ஆவது நிமிடத்தில் ஈடன் ஹசார்ட் பரிமாற்றிய பந்தைக் கொண்டு டோனி க்ரூஸ் பெற்ற கோல் மூலம் ரியல் மெட்ரிட்டால் வெற்றியை உறுதி செய்ய முடிந்தது

இதன்படி சம்பியன்ஸ் லீக்கில் A குழுவில் ஆடும் ரியல் மெட்ரிட் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த குழுவில் உள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி கிளப் பேர்கஸ் அணியுடனான போட்டியை 5-0 என இலகு வெற்றியீட்டி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகிறது.   

ஜுவன்டஸ் எதிர் லொகொமோடிவ் மொஸ்கோ

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற லொகொமோடிவ் கழகத்திற்கு எதிரான போட்டியில் போல் டிபாலா பிந்திய நேரத்தில் போட்ட இரண்டு கோல்கள் மூலம் இத்தாலியின் ஜுவன்டஸ் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது

முன்னாள் ஆர்சனல் கோல்காப்பாளர் வொசிச் சன்சியை முறியடித்து 30 ஆவது நிமிடத்தில் அலெக்சி மிரன்சுக் பெற்ற கோல் மூலம் லொகொமோடிவ் முதல் பாதியில் முன்னிலை பெற்றது.  

ரஷ்ய ப்ரீமியர் லீக் வெற்றி அணி இத்தாலி லீக் சம்பியனான ஜுவன்டசுக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் 77 ஆவது நிமிடத்திலேயே அந்த அணியால் பதில் கோல் திருப்ப முடிந்தது. டிபாலா வளைவாக தனது இடதுகாலால் உதைத்த கோல் மூலம் ஜுவன்டஸ் போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தது.  

இரண்டு நிமிடங்கள் கழித்து மிண்டும் செயற்பட்ட ஆர்ஜன்டீன முன்கள வீரரான டிபாலா மற்றொரு கோலை திருப்பி ஜுவன்டஸ் அணி மொத்த புள்ளிகளையும் அள்ள உதவினார்

இதன்படி சம்பியன்ஸ் லீக் D குழுவில் ஜுவன்டஸ் ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட்டுடன் 7 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது. பயேர்ன் லெவர்குசன் அணியை எதிர்கொண்ட அட்லடிகோ மெட்ரிட் அந்தப் போட்டியை 1-0 என வெற்றியீட்டியது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் அட்லண்டா

பதினொரு நிமிட இடைவெளியில் ரஹீம் ஸ்டர்லிங் ஹட்ரிக் கோல் அடிக்க இத்தாலி கழகமான அட்லண்டாவுக்கு எதிராக மன்செஸ்டர் சிட்டி 5-1 என்ற கோல் வித்தியாசத்தி அபார வெற்றியீட்டியது.  

ஹிலாலின் இரட்டை கோலினால் லெபனானிடம் வீழ்ந்த இலங்கை

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண ……….

மன்செஸ்டர் அரங்கில் நடைபெற்ற போட்டியில் செர்கியோ அகுவேரா முதல் பாதியில் இரண்டு கோல்களை பெற்றதன்மூலம் சிட்டி முன்னிலை பெற்ற நிலையில் இங்கிலாந்து முன்கள வீரரான ஸ்டர்லிங் எதிரணியை திணறடித்தார். 58, 64ஆவது நிமிடங்களில் கோல் பெற்ற அவர் ஐந்து நிமிடங்களில் மற்றொரு கோலை புகுத்தினார்

மறுபுறம் மிலனோஸ்கி 28 ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் பெற்ற கோல் அட்லாண்டாவுக்கு ஆறுதல் கோலாக இருந்தது.  

எனினும் பதின்ம வயது வீரர் பில் போடன் 83 ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றதால் சிட்டி அணிக்கு கடைசி நிமிடங்களில் 10 வீரர்களுடனேயே ஆட வேண்டி இருந்தது

சம்பியன்ஸ் லீக்கில் C குழுவில் ஆடும் சிட்டி தனது முதல் மூன்று போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் ரெட் ஸ்டார் பெல்கிரேட்

ஹரி கேன் மற்றும் சொன் ஹியுங் மின் தலா இரண்டு கோல்களை பெற்ற நிலையில் ஹொட்ஸ்பர் அணி செர்பிய நாட்டு கழகமான ரெட் ஸ்டாரை 5-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது.    

கடந்த போட்டியில் பயேர்ன் முனிச்சிடம் 7-2 என்ற கோல் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த ஹொட்ஸ்பர், இந்த போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணி சம்பியன்ஸ் லீக்கில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்

எரிக் லமாலாவின் கோணர் கிக்கை பயன்படுத்தி கேன் ஒன்பதாவது நிமிடத்தில் கோல் புகுத்தியதோடு மீண்டும் லமாலா உதவ 16 ஆவது நிமிடத்தில் சொன் பெற்ற கோல் மூலம் ஹொட்ஸ்பர் 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சொன் 44 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை புகுத்தினார்

இதேவெளை, தனது 200 ஆவது போட்டியில் களமிறங்கி சிறப்பாக ஆடிய லமாலா 57 ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் உதவியோடு ஹொட்ஸ்பர் 4-0 என முன்னிலை பெற்றது. 72 ஆவது நிமிடத்தில் கேன் பெற்ற மற்றொரு கோல் மூலம் அவர் இதுவரை ஆடிய 22 சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை 18 ஆக அதிகரித்துக்கொண்டார்.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<