பார்சிலோனா தீர்க்கமான வெற்றி: லிவர்பூல் த்ரில் வெற்றி

50

சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய இரண்டு ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பார்சிலோனா மற்றும் நடப்புச் சம்பியன் லிவர்பூல் அணிகள் வெற்றியீட்டின. இலங்கை நேரப்படி இன்று (03) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, 

ஹொட்ஸ்பர், ரியல் மெட்ரிட்டுக்கு சொந்த மைதானத்தில் ஏமாற்றம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் ஆரம்ப ……..

லுவிஸ் சுவாரஸ் பெற்ற அபார இரட்டை கோல் மூலம் இன்டர்மிலான் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியில் வெற்றியீட்டி பார்சிலோனா தீர்க்கமான புள்ளிகளை பெற்று F குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்தது. 

தனது சொந்த மைதானமான கேம்ப் நூவில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே இன்டர் மிலான் கோல் பெற்று அதிர்ச்சி கொடுத்தது. லோடரோ மார்டினஸ் பார்சிலோனா பாதுகாப்பு அரணை முறியடித்து அந்த கோலை பெற்றார். 

இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் 1-0 என இத்தாலி காழத்திற்கு சாதகமாகவே முடிந்தது. 

எனினும், 58 ஆவது நிமிடத்தில் அர்டுரோ விடால் பரிமாற்றி பந்தைக் கொண்டு சுவாரஸ் பதில் கோல் திருப்பினார். தொடர்ந்து காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய லியோனல் மெஸ்ஸி 84 ஆவது நிமிடத்தில் வைத்து சுவாரஸிடம் பந்தை கொடுக்க அவர் எதிரணி பின்கள வீரர் டிகோ கோடினை சமாளித்து பந்தை வலைக்குள் புகுத்தினார்.  

சுவாரஸ் சடந்த மூன்று ஆண்டுகளில் சம்பியன்ஸ் லீக் குழுநிலை சுற்றில் பெற்ற முதல் இரு கோல்களாகவும் இது இருந்தது.  

தனது சொந்த மைதானத்தில் 33 சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக இருக்கும் பார்சிலோனா தனது குழுவில் ப்ருசியா டோர்ட்முண்ட் கழகத்துடன் முதலிடத்தில் புள்ளிகளை பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த இரு அணிகளும் பரஸ்பரம் ஆடிய ஆரம்பப் போட்டி கோலின்றி சமநிலை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

லிவர்பூல் எதிர் எப்.சி. ரெட் புல் சல்ஸ்பேர்க்

மொஹமட் சலாஹ்வின் இரட்டை கோலுடன் ரெட் புல் சல்ஸ்பேர்க் அணிக்கு எதிராக லிவர்பூல் அணி 4-3 என த்ரில் வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது.  

நடப்புச் சம்பியனான லிவர்பூல் தனது சொந்த மைதானமான அன்பீல்ட்டில் ஆஸ்திரியாவின் ரெட் புல் சல்ஸ்பேர்க் அணியை எதிர்கொண்ட இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி கோல் புகுத்தியதால் கடைசி வரை பரபரப்பு நீடித்தது.  

எனினும், போட்டியின் முதல் பாதியில் லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தி 3-0 என முன்னிலை பெற்றபோதும் வருகை அணி தொடர்ச்சியாக கோல்களை புகுத்தி 3-3 என போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது. இந்நிலையில் சலாஹ் 69 ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை புகுத்தினார். 

மெஸ்ஸியின் காயத்திற்கு இடையே பார்சிலோனா வெற்றி

ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A ……

லிவர்பூல் தனது E குழுவின் ஆரம்பப் போட்டியில் நெபோலி அணியிடம் தோற்ற நிலையில் இந்தப் போட்டியின் 9ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியது. சாடியோ மானே நெருங்கிய தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார். 

தொடர்ந்து 25ஆவது நிமிடத்தில் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்ட் பரிமாற்றிய பந்தைக் கொண்டு அன்ட்ரூ ரொபட்சன் கோல் புகுத்தியதோடு 11 நிமிடங்களின் பின் சலாஹ் லிவர்பூல் அணி சார்பில் மூன்றாவது கோலை பெற்றார். 

எனினும், 39ஆவது நிமிடத்தில் ஹடவாங் ஹீ சான் மூலம் கோல் பெறுவதை ஆரம்பித்த ரெட் புல் சல்ஸ்பேர்க் 56 மற்றும் 60 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பெற்றது. 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<