நான்காவது ஒரு நாள் போட்டியில் கபுகெதர பங்கேற்பதில் சந்தேகம்

560

பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியின் போது எதிர்பாராத விதமாக உபாதைக்குள்ளான இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான சாமர கபுகெதர இன்று (20) நடைபெறவுள்ள நான்காவது ஒரு நாள் போட்டியில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லாஹூர் T-20 அணிக்கான பரிந்துரை விளையாட்டு அமைச்சரால் நிராகரிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் T-20..

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் 3ஆவது போட்டியின்போது சாமர கபுகெதரவின் முகத்தில் பந்து தாக்கி உபாதை ஏற்பட்டது.

களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல எறிந்த பந்து கபுகெதரவின் முகத்தை பதம் பார்த்தது. இதனையடுத்து உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறிய கபுகெதரவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பார்வைக்கு சிக்கலில்லை என வைத்தியர்கள் தெரிவித்தாலும், கபுகெதர தீவிர கண்கானிப்பின் கீழ் தற்போது அபுதாபியில் உள்ள வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கபுகெதரவின் வலது கண்ணின் கீழ்ப்பகுதியில் பாரிய கட்டியொன்று ஏற்பட்டுள்ளதாகவும், அதிஷ்டவசமாக கண்ணுடன் தொடர்புடைய எந்தவொரு உபாதையும் அவருக்கு ஏற்படவில்லை எனவும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, இந்தியாவின் கிரிக் பஸ் இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், இன்று சார்ஜாவின் நடைபெறவுள்ள 4ஆவது ஒரு நாள் போட்டியில் கபுகெதர விளையாடமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக இலங்கை ஒரு நாள் குழாமுக்கு முதற்தடவையாக அழைக்கப்பட்டுள்ள இளம் வீரர் சதீர சமரவிக்ரம ஒரு நாள் வரம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள 5ஆவது ஒருநாள் போட்டியில் கபுகெதர விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.