இலங்கையில் அறிமுகமாகவிருக்கும் புதுவித கூண்டு கிரிக்கெட்

589
Cage cricket

கூண்டு கிரிக்கெட் (Cage Cricket) என அழைக்கப்படும், முற்று முழுதான புது விதமான கிரிக்கெட் விளையாட்டானது இலங்கையின் பாடசாலை மாணவர்களிடமும், கிரிக்கெட் கழகங்கள் இடையிலும் பலத்த வரவேற்பினை பெற்றிருப்பதால் இவ்விளையாட்டு இத்தீவில் பிரபல்யமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

2004ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவ்விளையாட்டு, அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே அனைவருக்கும் ஆர்வம் தரக்கூடிய ஒரு விளையாட்டாக இருக்கும் என்பதில் அதனை உருவாக்கிய ட்ரவர் மெக்அர்ட்லே நம்பிக்கை கொண்டிருந்தார்.

உபுல் தரங்கவின் அதிரடி சதம் வீண்: 40 ஓட்டங்களால் இலங்கை அணி மீண்டும் தோல்வி

கேப்டவுன், நியூலன்ட்ஸில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது போட்டியில்…

இலங்கையில் இந்த புதிய வகை விளையாட்டினை அறிமுகம் செய்யும் நோக்கோடு, கடந்த மூன்று வாரங்களாக பல வேலைத் திட்டங்களை மேற்கொண்ட லண்டன் கூண்டு கிரிக்கெட் அமைப்பின் தலைமை பொறுப்பாளர் சைறோமி ப்ரெவ்ஸ்டர், இந்த விளையாட்டிற்கு இலங்கை மக்களிடையே பலத்த வரவேற்பு காணப்படுவதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் இந்த புதிய வகை விளையாட்டினை கிரிக்கெட் கழகங்களான SSC, NCC இற்கும் மஹாமாய கல்லூரிற்கும் பிலியந்தலை நகர விளையாட்டுக் கழகம் (கிரிக்கெட் அகடெமி) ஆகியவற்றிற்கும் அறிமுகம் செய்திருந்தோம். அவர்கள் இவ்விளையாட்டிற்கு எதிர்பாராத வரவேற்பினை அளித்தனர். அத்தோடு இந்த விளையாட்டினை இலங்கையின் கிராமப் புறங்களிலும் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளோம். “

என தனது மகிழ்ச்சியை அவர் வெளியிட்டார்.

ப்ரெவ்ஸ்டரை ThePapare.com சந்தித்த போது, இந்த விளையாட்டின் பாங்குகள் பற்றிய கேள்வி ஒன்று அவரிம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் இவ்விளையாட்டினை எந்த வயது பிரிவினரும் விளையாடலாம். அணிக்கு ஆறு பேர் கொண்டதாக இவ்விளையாட்டு வழமையான பயிற்சி வலைக்கு (Practice Net) தேவைப்படும் இடத்திற்கு போதுமான அளவுடைய இரண்டு மடங்கு இடத்தில்  விளையாட முடியும்” என்று கூறி இருந்தார்.

கூண்டு கிரிக்கெட் என்பது என்ன ?

13 விதிமுறைகளை மாத்திரம் கொண்ட, கூடைப்பந்திற்கு நெருங்கிய தொடர்பினை காட்டும் இலகு விளையாட்டான இது, கிரிக்கெட் விளையாட்டின் சாயலையே அதிக இடங்களில் காண்பிக்கின்றது.

ஆறு வகையான நிற வலயங்கள் காணப்படும் மைதானத்தில் துடுப்பாட்ட வீரர் வெள்ளை வலயத்தினுள் நிற்க, பந்து வீச்சாளர் பழுப்பு நிற வலயத்தில் இருந்து பந்தினை வீச, போட்டியில் ஓட்டங்கள் பெறப்படாது பந்து அடிக்கப்படும். ஒவ்வொரு குறிப்பிட்ட நிற வலயத்திற்கும் ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும்.

இதில் களத்தடுப்பாளர்களாக செயற்படும் வீரர்கள் தங்களிற்குரிய ஒரு  குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றே பந்துகளை தடுக்க வேண்டும் என்கிற விதி இந்த விளையாட்டில் முக்கியமானது.  உள்ளரங்கு கிரிக்கெட்டினை ஒரு வகையில் ஒத்திருந்து ஓட்டங்கள் பெறுவதில் மாத்திரம் வித்தியாசப்படும் கூண்டு கிரிக்கெட் விளையாட்டானது,  விளையாடும் வீரர்களிற்கு அதிக மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது.

அத்துடன் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களும் இவ்விளையாட்டிற்கு தமது ஆதரவுகளை வழங்கி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.