பிரேசிலிற்கு பாரிய வெற்றி

285
Brazil 7-1 Haiti: Copa América
Copa Photograph - Kim Klement USA Today Sports

கோபா அமெரிக்கக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பலவீனமான ஹெய்டி அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் கோல் மழை பொழிந்து 7–1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கோபா அமெரிக்கக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. ‘பிபிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான பிரேசில், ஹெய்டி அணியை எதிர்த்து  மோதியது. இதில் 7–1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி பெற்றது.

பிரேசில் அணியில் பிலிப்பி கவுடினகோ 3 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார். அவர் 14ஆவது நிமிடம், 29ஆவது  நிமிடம் மற்றும் 92ஆவது  நிமிடங்களில் கோல் அடித்தார். அகுஸ்டோ 2 கோலும் (35 மற்றும் 86ஆவது  நிமிடம்) கேப்ரியல் (59ஆவது  நிமிடம்), லுகாஸ் லிமா (67ஆவது  நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஹெய்டி அணியின் மார்சிலன் (70ஆவது  நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.

கொஸ்டரிக்காவுக்கு எதிராக அமெரிக்காவிற்கு அபார வெற்றி

2016 கோபா அமெரிக்கக் கிண்ணத்தில் பிரேசில் அணி பெற்ற முதலாவது வெற்றி இதுவாகும். ஈகுவடாருடன் நடைபெற்ற தனது முதலாவது போட்டியில் பிரேசில் அணி, கோல் எதுவுமின்றி போட்டி சமநிலையில் முடிந்தது. ஹெய்டி அணி 2ஆவது  தோல்வியை தழுவி போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பேருஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில்சமநிலையில் முடிந்தது. ஈக்வடார் அணியில் ஹலன்சியா (39ஆவது நிமிடம்), போலோன்ஸ் (48ஆவது நிமிடம்) ஆகியோரும், பேரு அணியில் கியூவா (5ஆவது நிமிடம்), புளோரஸ் (13ஆவது நிமிடம்) ஆகியோரும் கோல் அடித்தனர்.

பேரு அணி ஆரம்ப  ஆட்டத்தில் ஹெய்டியை வென்று இருந்தது. இதனால் 4 புள்ளிகளுடன் பிரேசிலுடன் இணைந்து இருக்கிறது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தில் பிரேசிலுடன் பின்தங்கியே இருக்கிறது.

சிபிரிவில் நாளை நடைபெறும் ஆட்டங்களில் உருகுவேவெனிசூலா, மெக்சிகோஜமைக்கா அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்