அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்கவுள்ள உசைன் போல்ட்

769
@Getty Images

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் நடைபெறவிருக்கும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் தமது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் பெறும் போது துரித கதியில் செயற்படுவதற்கு பயிற்சிகளை வழங்க “ குறுந்தூர ஓட்ட வீரர்களின் ராஜா” என அழைக்கப்படும் உசைன் போல்ட்டினை அழைத்துள்ளது.  

DRS சர்ச்சையை தில்ருவான் பெரேராவுக்காக தெளிவுபடுத்த விரும்பும் ஹேரத்

இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரரான ரங்கன ஹேரத்..

ஜமெய்க்காவின் தடகள நட்சத்திரமான போல்ட், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் உலக சாதனையினை பதிவு செய்தவர் என்பதோடு, எட்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுந்தூரப் போட்டிகளின் சம்பியனான போல்ட் தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து அவர்கள் விக்கெட்டுக்களுக்கு இடையில் அதி விரைவாக ஓட்டங்கள் சேர்க்க உதவப் போகின்றார்.

எல்லாம் துரிதகதியிலேயே தங்கியிருக்கின்றது. இது மட்டும் தான் கிரிக்கெட் போட்டிகளில் அவதானித்த ஒரு விடயம். (கிரிக்கெட் வீரர்களாகிய) அவர்கள் ஓடும் போது அந்த துரித கதியினை வெளிப்படுத்துவதற்கான அனுபவங்களை குறைவாகவே கொண்டிருக்கின்றனர். “ என உசைன் போல்ட் ஹேரால்ட் சன் செய்தி தாளுக்கு தெரிவித்திருந்தார்.

அவர்கள் (கிரிக்கெட் வீரர்கள்) மந்த கதியிலேயே விக்கெட்டுக்களுக்கு இடையில் ஓடுகின்றனர். அதை சரியாக்குவது நிச்சயமாக மக்களுக்கு உதவும்என்றும் போல்ட் தெரிவித்தார்.

துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டுக்களுக்கு இடையில் ஓடும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் போல்ட் தற்போது அறிவுறுத்தியிருக்கின்றார்.

31 வயதாகும் போல்ட் லண்டனில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுடன் ஓய்வினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்காக விளையாடும் உசேன் போல்ட்

உலகின் அதிவேக வீரரும், கடந்த வாரம் சர்வதேச..

போல்ட்டின் வருகையின் மூலம் கிடைத்த ஆலோசனைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் சந்தோசமடைவதாக தெரிவித்துள்ளார்.

அவர் எமக்கு வழங்கிய சிறுகுறிப்புக்கள் மூலம், எவ்வாறு வேகத்தை சிறிது அதிகரிப்பது என்பது தெரியவந்துள்ளது. இருக்கும் மனிதர்களில் மிக வேகமானவர் அவர் என்பதால், அவர் எம்முடன் இருப்பது நல்ல விடயம்என ஹேன்ட்ஸ்கோம்ப் கூறியிருந்தார்.

போல்ட் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் தனது ஓய்வுக்குப் பிறகு, கால்பந்துப் போட்டிகளில் விளையாடுவதற்கான பயிற்சிகளைப் பெறுவதில் தன் நாட்களை கழித்திருந்தார். (B)பண்டஸ்லீகா (Bundasliga) கால்பந்து தொடரில் விளையாடும் பொருஸ்யா டோர்ட்மன்ட் (Borussia Dortmund) அணியுடன் இணைந்து போல்ட் பயிற்சிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<