வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற பிரபல பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்

169
School cricket

கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் பிரதான பாடசலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் கிரிக்கெட் சமரின் இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு எதிர் மஹாநாம கல்லூரி, கொழும்பு  

கொழும்பு D.S. சேனநாயக கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெறும் தங்கச்சமர் என அழைக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் சமரின் இவ்வருடத்திற்கான போட்டி சமநிலையில் முடிவுற்றது .12வது அத்தியாயமாக நடைபெற்றி இப்போட்டி நேற்று காலை பி சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய D.S. சேனாநாயக கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சமர்

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மஹாநாம கல்லூரி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய D.S. சேனாநாயக கல்லூரி அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது   

போட்டியின் சுருக்கம்

D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 156 (59) – செனால் சந்திரசேகர 56, விஹான் குணசேகர 45, ஹேஷான் ஹெட்டியாராச்சி 4/49, ஹஷான் சந்தீப 2/45, சொனால் தினுஷ 2/18.

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 217/9d (87.2) – பத்தும் போதேஜு 93, சொனால் தினுஷ 44, மெதுசான் குமார 3/31, அபினாஷ் கோபுல் 3/41

D.S. சேனநாயக கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76/5 (31) – லஹிரு விதான 2/08, ஹஷான் சந்தீப 2/16

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி   

கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி அணிக்கும் தர்மராஜ கல்லூரி அணிக்கும் இடையில் இடம்பெறும் மெரூன்களின் சமர் என் வர்ணிக்கப்படும் கிரிக்கெட் சமரின் 112ஆவது போட்டி சமநிலையில் முடிவுற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மராஜ கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை கிங்ஸ்வுட் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வுட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வுட் கல்லூரி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. அதனைத்தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது. 

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 166 (53) – தனஞ்சய மதுரங்க 42, துளின் விஜெனாராயண 40, யசித்த சமரரத்ன 3/49, விரஜித் எஹலபோல 2/47, உபேந்திர வர்ணகுலசூரிய 2/35.

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 111 (51) – பவந்த பனங்கமுவ 30. லக்மால் டி சில்வா 3/40

கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184/5d (40.4) – கனிந்து கம்புருகமுவ 58, சௌம்ய பியசேன 60, விராஜித் எஹலபோல 2/38

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 122/8 (45) – சச்சின்த சேனாநாயக்க 52, இசுருன் தயானந்த 31, லக்மால் டி சில்வா 3/48, கனிந்து கம்புருகமுவ 3/21

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது


ரிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் மஹிந்த கல்லூரி, காலி  

காலி ரிச்மண்ட் மற்றும் மஹிந்த கல்லூரி அணிகளுக்கிடையிலான 113ஆவது அன்பர்களின் சமர் சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டி நேற்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை ரிச்மண்ட் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி ரிச்மண்ட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.

அசிங்கமான நடத்தைக்காக சகிப், நூருலுக்கு ஐ.சி.சி அபராதம்

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுபெடுத்தாடிய மஹிந்த கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்டது

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 170 (62.4) – துவின் கலன்சூரிய 42, தனஞ்சய லக்ஷான் 31, பசான் பெதனகொட 5/46, நவோத் பரணவிதான 3/20

மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 118 (53.4) – நவோத் பரணவிதான 27, ஹன்சிக வெளிஹிந்த 26, திலும் சுதீர 5/29, சந்துன் மென்டிஸ் 5/38

ரிச்மண்ட் கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 150/4d (33) – தவீஷ அபிஷேக் 71, நிபுன் மலிங்க 2/50

மஹிந்த கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 20/2 (15)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது