இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ள இருதரப்பு தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு

230
Image Courtesy - BCCI

இன்றைய கிரிக்கெட் உலகில் மிகவும் பலம் பொருந்திய அணியாகவும் அதிக ரசிகர்களை கொண்ட அணியாகவும் காணப்படும் இந்திய கிரிக்கெட் அணியினுடைய சொந்த நாட்டில் விளையாடவுள்ள எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதிக்கான இருதரப்பு தொடர்களினுடைய அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நேற்று (03) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி இந்திய அணியானது தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பலம்பொருந்திய அணிகளுடனும் ஜிம்பாப்வே அணியையும் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது.

தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் – மாலிங்க

குறித்த அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடர்களானது இவ்வருடம் (2019) செப்டம்பர் மாதம் தொடக்கம் அடுத்த வருடம் (2020) மார்ச் மாதம் வரையில் நடைபெறவுள்ளதன் அடிப்படையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா எதிர் இந்தியா இருதரப்பு தொடர்

இந்திய அணியானது தென்னாபிரிக்க அணியை அழைத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் போன்ற இரு தொடர்களில் விளையாடவுள்ளது.

குறித்த தொடரானது செப்டம்பர் மாதம் 15 தொடக்கம் ஒக்டோபர் மாதம் 23 வரை நடைபெறவுள்ளது. இதில் நடைபெறவுள்ள ஆறு போட்டிகளும் ஆறு மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர் அட்டவணை

  • 15 செப்டம்பர் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – தரம்சாலா
  • 18 செப்டம்பர் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – மொஹாலி
  • 22 செப்டம்பர் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – பெங்களுரூ
  • 2 – 6 ஒக்டோபர் – முதலாவது டெஸ்ட் போட்டி – விசாகப்பட்டினம்
  • 10 – 14 ஒக்டோபர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ராஞ்சி
  • 19 – 23 ஒக்டோபர் – மூன்றாவது டெஸ்ட் போட்டி – பூனே

பங்களாதேஷ் எதிர் இந்தியா இருதரப்பு தொடர்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இந்தியாவுக்கு வருகைதந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

குறித்த தொடரானது நவம்பர் மாதம் 3 தொடக்கம் நவம்பர் மாதம் 26 வரை நடைபெறவுள்ளது. பங்களாதேஷ் அணியானது அண்மைக்காலங்களில் மிகத்திறமையாக வெற்றிகளை குவித்து வருகின்ற நிலையில் இந்திய அணிக்கு சவாலாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர் அட்டவணை

  • 3 நவம்பர் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – டெல்லி
  • 7 நவம்பர் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – ராஜ்கொட்
  • 10 நவம்பர் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – நக்பூர்
  • 14 – 18 நவம்பர் – முதலாவது டெஸ்ட் போட்டி – இன்டோர்
  • 22 – 26 நவம்பர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – கொல்கத்தா

ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்களுடன் சாதனை படைத்த சகீப்

மேற்கிந்திய தீவுகள் எதிர் இந்தியா இருதரப்பு தொடர்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது இவ்வருட இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் விளையாடவுள்ளது.

மேலும் குறித்த இரு தொடர்களிலும் நடைபெறவுள்ள ஆறு போட்டிகளும் ஆறு வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளது.

தொடர் அட்டவணை

  • 6 டிசம்பர் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – மும்பை
  • 8 டிசம்பர் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – திருவாணந்தபுரம்
  • 11 டிசம்பர் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ஹைதராபாத்
  • 15 டிசம்பர் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சென்னை
  • 18 டிசம்பர் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – விசாகப்பட்டினம்
  • 22 டிசம்பர் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – கட்டக்

ஜிம்பாப்வே எதிர் இந்தியா இருதரப்பு தொடர்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது ஜனவரி (2020) முதல் வாரத்தில் குறுகிய கால சுற்றுப்பயணம் ஒன்றினை இந்தியாவுக்கு மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

தொடர் அட்டவணை

  • 5 ஜனவரி – முதலாவது டி20 சர்வதேச போட்டி – குவாஹடி
  • 7 ஜனவரி – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – இன்டோர்
  • 10 ஜனவரி – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – பூனே

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா இருதரப்பு தொடர்

ஜிம்பாப்வே அணியை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியும் குறுகிய கால சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

தொடர் அட்டவணை

  • 14 ஜனவரி – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – மும்பை
  • 17 ஜனவரி – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ராஜ்கொட்
  • 19 ஜனவரி – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – பெங்களுரூ

தென்னாபிரிக்கா எதிர் இந்தியா இருதரப்பு தொடர்

செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போன்ற இரு தொடர்களிலும் விளையாடுகின்ற தென்னாபிரிக்க அணி மீண்டும் மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

தொடர் அட்டவணை

  • 12 மார்ச் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – தரம்சாலா
  • 15 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – லக்நொவ்
  • 18 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – கொல்கத்தா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<