முக்கோண டி20 தொடருக்காக பங்களாதேஷ் செல்லும் ஜிம்பாப்வே

788
Indiatvnews.com

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கிரிக்கெட் விளையாட்டிலிருந்து இடைக்கால தடைக்கு உள்ளாகிய ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது தற்போது பங்களாதேஷூக்கு சென்று முக்கோண டி20 சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது. 

குறித்த முக்கோண டி20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் பங்களாதேஷ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் வரலாற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளது. 

பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் அதிரடியாக நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒற்றை டெஸ்ட் தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முக்கோண டி20 தொடர் போன்றவற்றுக்கான தொடர் அட்டவணையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 

டெஸ்ட் தொடர்

கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற அனைத்து அணிகளும் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது இல்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்ற சில அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவது இல்லை.

அந்த அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு 11 ஆம் மற்றும் 12 ஆம் அணிகளாக முறையே டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இவ்வாறு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் ஆப்கானிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளது. 

இந்திய அணியுடன் ஒற்றை போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி அதில் தோல்வியையும், அயர்லாந்து அணியுடன் மற்றுமொரு ஒற்றை டெஸ்ட் தொடரில் விளையாடி அதில் வெற்றியையும் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் தற்போது பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் ஒற்றை டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (8)…

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டதன் பின்னர் தற்போது பங்களாதேஷ் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதனால் குறித்த போட்டி இரு அணிகளுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 5 9 ஆம் திகதி வரை சிட்டகொங்கில் நடைபெறவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான ஆப்கானிஸ்தான் அணி இம்மாதம் 30 ஆம் திகதி பங்களாதேஷ் சென்றடையவுள்ளது.

மேலும் குறித்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் பங்களாதேஷ் கட்டுப்பாட்டு சபை பதினொருவர் அணிக்கும் இடையில் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கோண டி20 சர்வதேச தொடர் 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது அண்மையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இடைக்கால தடைக்கு உள்ளானது. இதனால் எதிர்கால சுற்றுலா திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்த ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தான் தொடர் ஐ.சி.சி யினால் நிராகரிக்கப்பட்டது. 

பங்களாதேஷ் செல்லும் இலங்கை வளர்ந்து வரும் அணி

தென்னாபிரிக்க மண்ணில் முக்கோண…

இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தற்போது முக்கோண டி20 தொடரில் விளையாடுவதற்கு ஜிம்பாப்வே அணியை இணைத்துள்ளது. ஜிம்பாப்வே அணியுடன் சேர்ந்து ஒற்றை டெஸ்ட் போட்டிக்காக பங்களாதேஷ் வரும் ஆப்கான் அணியும் முக்கோண டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி முன்னதாகவே பங்களதேஷ் சென்றடையவுள்ள நிலையில் முக்கோண டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான ஜிம்பாப்வே அணி செப்டம்பர் 8 ஆம் திகதி பங்களாதேஷ் சென்றடையவுள்ளது. லீக் சுற்றில் ஒரு அணி இன்னொரு அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். குறித்த முக்கோண தொடரில் இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தமாக 7 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

முக்கோண டி20 சர்வதேச தொடர் அட்டவணை

  • 13 செப். – பங்களாதேஷ் எதிர் ஜிம்பாப்வேமிர்பூர், டாக்கா
  • 14 செப். – ஆப்கானிஸ்தான் எதிர் ஜிம்பாப்வே – மிர்பூர், டாக்கா
  • 15 செப்.பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் – மிர்பூர், டாக்கா
  • 18 செப். – பங்களாதேஷ் எதிர் ஜிம்பாப்வே சிட்டகொங்
  • 20 செப். – ஆப்கானிஸ்தான் எதிர் ஜிம்பாப்வேசிட்டகொங்
  • 21 செப். – பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் – சிட்டகொங்
  • 24 செப். – இறுதிப்போட்டி – மிர்பூர், டாக்கா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<