எவரெஸ்டுகள் சமரின் இம்முறை சம்பியனாக பெரிய கல்லாறு மத்திய கல்லூரி

429
Battle of the Everest

எவரெஸ்டுகளின் சமர் (Battle of the Everest) என அழைக்கப்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி என்பவற்றுக்கு இடையிலான 8 ஆவது பருவகாலத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் (50) கொண்ட பெரும் கிரிக்கெட் போட்டியில் (BIG MATCH) பெரிய கல்லாறு மத்திய கல்லூரி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து…

இந்த வெற்றியுடன் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி எவரெஸ்டுகளின் சமரினை நான்காவது தடவையாக வென்ற அணியாகவும் மாறுகின்றது.

2011 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்றுவருகின்ற இந்த பாடசாலை கிரிக்கெட் சமரில் முன்னதாக நான்கு தடவைகள் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணியும், மூன்று தடவைகள் பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணியும் வெற்றிகளை பெற்றிருந்ததன.

இப்படியான ஒரு நிலையிலேயே 8 ஆவது பருவகாலத்திற்கான பெரும் போட்டி நேற்று முன்தினம் (26) மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பெரிய கல்லாறு அணியின் தலைவரான R. தனுஷ் முதலில் தனது அணிக்காக துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டார்.

இதன்படி முதலில் ஆடிய பெரிய கல்லாறு மத்திய கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 175 ஓட்டங்களினைக் பெற்றுக் கொண்டது. பெரிய கல்லாறு அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரராக வந்திருந்த T. லுக்சாந்த் 9 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 60 ஓட்டங்களினையும், மத்திய வரிசையில் ஆடிய அணித் தலைவர் R. தனுஷ் 47 ஓட்டங்களினையும் பெற்று வலுச்சேர்த்திருந்தனர்.

>> இப்போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

இந்த பெரும் போட்டியின் நடப்புச் சம்பியன்களான மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சில் அவ்வணியின் தலைவர் M. சாருகன் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், S. அபினேஷ் மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 176 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு ஆடிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணி எதிரணியின் பந்துவீச்சினை எதிர்கொள்வதில் ஆரம்பத்தில் இருந்தே சிரமப்பட்டிருந்தது.

இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் கூட 20 ஓட்டங்களினைக் கூட தாண்டாத நிலையில், ஆட்ட முடிவில் முடிவில் 39.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் 72 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியிருந்ததது.  

முதல் இன்னிங்சில் குறைவான ஓட்டங்களினை பெற்ற போதிலும் சிறப்பான பந்துவீச்சினைக் காட்டிய பெரிய கல்லாறு அணியில் ஜினோஜன் வெறும் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஓஜன், லிபன்ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.   

வெளி சிங்கங்களின் சமரை வெற்றிகொண்ட ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலயம்

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் மற்றும்…

பெரிய கல்லாறு அணியின் தலைவர் R. தனுஷ் தனது துடுப்பாட்டத்திற்காகவும் விக்கெட் ஒன்றினை கைப்பற்றியதற்காகவும் இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டிச் சுருக்கம்

பெரிய கல்லாறு மத்திய கல்லூரி – 175 (50) T. லுக்சாந்த் 60, R. தனுஷ் 47, M. சாருகன் 4/29,  S. அபினேஷ் 3/38

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி – 103 (39.1) S. அபினேஷ் 13, ஜினோஜன் 4/21, ஓஜன் 2/09, லிபன்ராஜ் 2/15

முடிவு – பெரிய கல்லாறு மத்திய கல்லூரி 73 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<