பொறுப்பற்ற துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம் – ஜேசன் ஹோல்டர்

110

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டமும், தேவையான நேரத்தில் இணைப்பாட்டத்தை முன்னெடுக்காமையினால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண தொடரில் நேற்று (14) நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. தங்களை நிரூபிக்கவும், சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மற்றுமொரு அதிர்ச்சித் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

மேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்திய இங்கிலாந்து

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days…

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் 33.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை (213 ஓட்டங்கள்) எட்டியது.  

இதன்படி, இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி, 3 ஆவது வெற்றியை பெற்றுக்கொள்ள, மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஆவது தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், இங்கிலாந்துடனான தோல்வி குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது,

”இந்த தோல்வி உண்மையிலேயே நாணய சுழற்சியை இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. முக்கியமான தருணங்களில் நாங்கள் போதுமான ஓட்டங்களை எடுக்க தவறியிருந்ததுடன், விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தோம். இவ்வாறான சந்தரப்பங்களில் துடுப்பாட்ட வீரர்கள் நிலைமைகளை புரிந்துகொண்டு பொறுப்புடன் விளையாட வேண்டும்.

அனேகமாக நாங்கள் சிறிது உத்வேகத்தை காட்ட வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற சில துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டு ஆட்டமிழந்து விட்டோம். அதேபோன்று தேவையான நேரத்தில் இணைப்பாட்டங்களையும் பெற்றுக்கொள்ள தவறிவிட்டோம்” என்று  கூறினார்.

”அத்துடன், தொடர்ச்சியாக இரண்டு தடவையாக துடுப்பாட்டத்தில் நாங்கள் மோசமாக செயற்பட்டோம். மேலும், 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தியடிப்பது என்பது இலகுவான விடயம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் ஆரம்பத்திலே விக்கெட்டுக்களை கைப்பற்ற வேண்டும்.

எமது உடைமாற்றும் அறையில் ஒருசில முரண்பாடுகள் காணப்படுகின்றன. முதலில் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். அதேபோன்று, மூன்று துறைகளிலும் நாங்கள் பொறுப்பாக விளையாட” வேண்டும் என்றார்.

மேற்கிந்திய தீவகள் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி பங்களாதேஷ் அணியை சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<