உலகக் கிண்ணத்துக்கு முன்னரே ஆஸி. அணியை கலாய்க்கும் பார்மி ஆர்மி

228
Image Courtesy - @TheBarmyArmy Tweet

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரையே இரு நாட்டு ரசிகர்களும் மிகத் தீவிரமாகப் பார்த்துவருகிறார்கள். இந்த நிலையில்தான், இம்முறை உலகக் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இலங்கை அணி

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 10 அணிகளில் அதிக வயதுகொண்ட சிரேஷ்ட

எனவே, உலகக் கிண்ணம் மற்றும் அதைத் தொடர்ந்து ஆரம்பமாகவுள்ள ஆஷஸ் கிண்ண தொடர்கள் என்பன இங்கிலாந்து மண்ணில் நடைபெறவுள்ளதால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிர்வரும் மாதங்கள் மிகவும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலியா வீரர்கள் கால் வைப்பதற்கு முன்பே இங்கிலாந்து ரசிகர்கள் அவர்களை டுவிட்டர் சமூகவலைத்தளம் மூலம் சீண்டியுள்ளனர்.

England’s Barmy Army என்ற பெயரில் உள்ள சமூகவலைத்தள அமைப்புதான் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள். இங்கிலாந்து அணியை நிழல் போல் தொடர்வதுதான் இவர்களின் பணி. இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகின் எந்த நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் இந்த ரசிகர்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.

இந்த நிலையில், தங்களது டுவிட்டர் பக்கத்தில் அவுஸ்திரேலியா வீரர்களான டேவிட் வோர்னர், பென்கிராப்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை கேலி செய்கின்ற விதத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வம்புக்கு இழுத்துள்ளனர்.  

டேவிட்  வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டதன் பின்னர் அணிக்கு திரும்பி உலகக் கிண்ண அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்க, ஆஸி உலகக் கிண்ண குழாம்களில் புதிய வீரர்கள்

தென்னாபிரிக்க வீரர் அன்ரிச் நோர்ட்டிச் மற்றும் அவுஸ்திரேலிய வீரர் ஜெய் ரிட்சர்ட்சன் /p>

இந்நிலையில், பார்மி ஆர்மி குழுவினரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இம்முறை உலகக் கிண்ணத்துக்காக அறிமுகப்படுத்தியுள்ள அவுஸ்திரேலிய சீருடையுடன் டேவிட் வோர்னர் இருக்கும் புகைப்படத்தில் அவுஸ்திரேலியாவின் பெயர் எழுதப்பட்டுள்ள இடத்தில்ஏமாற்றுக்காரர்கள்என்று மாற்றி எழுதி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மேலும், நெதன் லையன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது புகைப்படங்களில் உப்புக் காகிதத் தாளை வைத்து அந்தப் புகைப்படங்களை மீளவும் பதிவிட்டுள்ளது.

டேவிட்  வோர்னர் ஸ்டீவ் ஸ்மித், பேன்கிராப்ட் ஆகியோர் கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உப்புத்தாளை கொண்டு பந்தை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பார்மி ஆர்மியின் விமர்சனங்களுக்கு உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாகவே அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், நாங்கள் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். உலகக் கிண்ணத்தைவிட ஆஷஸ் போட்டிகளின் போது இதுபோன்ற விமர்சனங்கள் அதிகம் இருக்கும். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

இதேவேளை, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் இருவரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்கு பின் இம்முறை .பி.எல் தொடரில் தமது உடற்தகுதிகளை நிரூபித்துக் காட்டிய பிறகு மீண்டும் அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பியிருந்தனர்.

ஐ.பி.எல் தொடரிலிருந்து அனைத்து ஆஸி. வீரர்களும் வெளியேற்றம்

உலகக்கிண்ண தொடருக்கான ஆஸி. குழாமில் இடம்பெற்ற வோர்னர், ஸ்மித், ஸ்டொய்னிஸ் மற்றும்

அத்துடன், நியூசிலாந்து பதினொருவர் அணியுடன் நேற்று (10) நிறைவுக்கு வந்த 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தனர். இதில் வோர்னர் முதல் போட்டியில் 39 ஓட்டங்களைக் குவித்தார். 2ஆவது போட்டியில் டக்அவுட் ஆன அவர், நேற்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், டேவிட் வோர்னர் இம்முறை .பி.எல் தொடரில் அசத்தி லீக் போட்டிகள் வரை அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்மித், முதல் போட்டியில் 22 ஓட்டங்களையும், 2ஆவது போட்டியில் 89 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார். அதேபோல, 3ஆவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களை விளாசி தனது திறமையை மீண்டும் நிரூபித்துக் காட்டினார்.

எதுஎவ்வாறாயினும், உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இவ்வாறான புகைப்படங்களை பதிவிட்டு இங்கிலாந்து ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க