24ஆவது தடவையாக சம்பியனானது பார்சிலோனா அணி

248
BARCA

‘லா லிகா’கால்பந்தாட்ட லீக் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இப்போட்டியில் பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகம் கிரேனடா கால்பந்தாட்டக் கழகத்தை எதிர்த்து விளையாடியது.  

போட்டியின் முதல் பாதியின் 22ஆவது மற்றும் 38ஆவது நிமிடங்களில் சுவாரஸ் 2 கோல்களை மிக அருமையான முறையில் போட்டார்.  இதன் மூலம் முதல் பாதி முடிவில் பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகம் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்துக் காணப்பட்டது.

அதன் பின் இரண்டாவது பாதியிலும் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய  பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகம் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டது. அந்த கோலும் சுவாரஸாலே போடப்பட்டது. இது இந்தப் போட்டியில் அவர் போட்ட “ஹெட்ரிக் கோல்” ஆகும்.

இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் 3 -0 என்ற அடிப்படையில் பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகம் வெற்றிபெற்று ரியல் மெட்ரிட் அணியை பின் தள்ளி 24ஆவது தடவையாக சம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.

இந்த பார்சிலோனா வெற்றிக்கு முழுக் காரணியாக அணியின் முன்னணி வீரர் சுவாரஸ் மெஸ்சி, ரொனால்டோவின் 7 ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் அவர் அடித்த 3 கோல்களின் மூலம் ‘லா லிகா’ லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சுவாரஸ் 2016 பருவகாலத்தில்  40 கோல்கள் அடித்துள்ளார். அடுத்து பி.எஸ்.ஜி அணியின் இப்ராஹிமோவிக் 36 கோல்கள் அடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 35 கோல்களையும் , மெஸ்சி 26 கோல்களையும் அடித்துள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் மெஸ்சி மற்றும் ரொனால்டோ ஆகியோர் தான் அதிக கோல்கள் அடித்து தங்கப் பாதணியை கைப்பற்றி வந்தனர். 7 ஆண்டுகள் வரை முறியடிக்க முடியாத இந்த சாதனையை நேற்று சுவராஸ் முறியடித்தார். இதனால் மெஸ்சி மற்றம் ரொனால்டோ ஆகியோரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்