இலங்கை வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

7532

இலங்கைக்கு இம்மாத பிற்பகுதியில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி, இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது.

பங்களாதேஷின் இந்த சுற்றுப் பயணம் மூலம் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறாத இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர் முதல்தடவையாக சர்வதேச தொடர் ஒன்றில் ஆடவிருக்கின்றன.

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் சகிப் பங்கேற்பதில் சந்தேகம்

பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரும், உதவித் தலைவருமான சகிப் அல் ஹசன்…

இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில், முதலாவது ஒருநாள் போட்டி இம்மாதம் 26ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி 28ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 31ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தீவிரவாதிகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், பாதுகாப்பு காரணங்கள் கருதி பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப் பயணம் இரத்துச் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், தற்போது பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம்  உறுதியாகியிருப்பதால் கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கவிருக்கும் பங்களாதேஷ் அணி இம்மாதம் 23ஆம் திகதி இலங்கை வருவதுடன், ஒகஸ்ட் மாதம் 01ஆம் திகதி இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர் தமது தாயகத்திற்கு செல்கின்றது.

கடைசியாக 2017ஆம் ஆண்டில் ஒருநாள் தொடர் ஒன்றுக்காக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியிருந்தது. இந்த ஒருநாள் தொடரில் ஒருபோட்டி மழையினால் கைவிடப்பட 1-1 என ஒருநாள் தொடர் சமநிலையில் நிறைவடைந்திருந்தது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த…

இதேநேரம், தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலும் பங்களாதேஷ் – இலங்கை அணிகள் மோதவிருந்த லீக் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டிருந்தது.

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணி, இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட், T20 என இரண்டு வகைப் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் ஆடுகின்றது.

தொடர் அட்டவணை

ஜூலை 26 – முதலாவது ஒருநாள் போட்டிஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

ஜூலை 28 – இரண்டாவது ஒருநாள் போட்டிஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

ஜூலை 31 – மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க