மூன்று அறிமுக வீரர்களுடன் முக்கோண ஒருநாள் தொடரில் ஆடவுள்ள பங்களாதேஷ்

187

முக்கோண ஒருநாள் தொடரில் பங்குபற்றுவதற்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கமைய மூன்று வீரர்களுக்கு ஒருநாள் குழாமில் அறிமுகம் வழங்கப்பட்டுள்ளதுடன், அனுபவ வீரர் சகீப் அல் ஹசன் அணிக்கு திரும்பியுள்ளார்.  

பங்களாதேஷ் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு: சகீபுக்கு அவசர அழைப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப்…

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாகுவதற்கு இன்னும் ஒன்றறை மாதகாலம் எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் அதற்கான தயார்படுத்தலுக்கான பல்வேறு போட்டிகளில் ஈடுபட்டு ஆடி வருகின்றன.

அந்த அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்று அயர்லாந்து கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முக்கோண ஒருநாள் தொடரானது அடுத்த மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இறுதிப் போட்டியுடன் சேர்த்து மொத்தமாக 7 ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ளது.

அயர்லாந்து அணி உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெறாவிடாலும் இந்த தொடர் உலகக் கிண்ண தொடரில் பங்குகொள்ளும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை.

உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர்…

குறித்த முக்கோண ஒருநாள் தொடரில் பங்குபற்றுவதற்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் 14 பேர் அடங்கிய ஒருநாள் குழாம் கடந்த சனிக்கிழமை (13) வெளியிடப்பட்டிருந்த நிலையில், அத்தொடரில் பங்குபற்றுவதற்கான பங்களாதேஷ் அணியின் 17 பேர் அடங்கிய குழாம் நேற்று (16) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பங்களாதேஷ் அணியின் உலகக் கிண்ண தொடருக்கான குழாமும் நேற்றைய நாளில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் முக்கோண ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணியின் தலைவராக வேகப்பந்துவீச்சாளரான மஷ்ரபி மொர்தஸா செயற்படவுள்ளார். நான்கு துடுப்பாட்ட வீரர்கள், ஏழு சகலதுறை வீரர்கள், மூன்று விக்கெட் காப்பாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளடங்களாக 17 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.   

ஒருநாள் சர்வதேச அரங்கிற்கு அறிமுக வீரராக யாஸிர் அலி எனப்படும் 23 வயதுடைய துடுப்பாட்ட வீரர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள் அரங்கிற்கு மற்றுமொரு அறிமுக வீரராக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகம் பெற்று விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அபூ ஜெயிட் ராஹி குழாமில் அழைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் இளையோர் அணி மே மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும்…

இதேவேளை, கடந்த வருட இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனது 18ஆவது வயதில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற சுழற்பந்துவீச்சாளர் நயீம் ஹசன் தற்போது அதே வயதில் ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெறவுள்ளார்.

இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான தொடரின் போது தவறவிடப்பட்டு தற்போது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள அதேவேளை அவருக்கு உபதலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சகலதுறை வீரரான மொஸாதிக் ஹுசைனும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

வெளியிடப்பட்ட 17 பேர் அடங்கிய பங்களாதேஷ் குழாம்.

மஷ்ரபி மொர்தஸா (அணித்தலைவர்), சகீப் அல் ஹசன் (உப தலைவர்), தமிம் இக்பால், லிடன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ், முஹம்மட் மிதுன், சபீர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் மிராஸ், சௌமியா சர்கார், ரூபல் ஹுசைன், முஹம்மட் சைபுதீன், மொஸாதிக் ஹுசைன், முஸ்தபீசுர் ரஹ்மான், அபூ ஜெயிட், யாஸிர் அலி, நயீம் ஹசன்   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<