Home Tamil இலங்கை – பங்களாதேஷ் வளர்ந்துவரும் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

இலங்கை – பங்களாதேஷ் வளர்ந்துவரும் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

79
Daily-sun.com

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கோக்ஸ் பசார் நகரில் நடைபெற்று வந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 

பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய ஆபிப் ஹொசைன்

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்துவரும்….

பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருந்தது.   

கடந்த செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமாகிய இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது

இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி ஆட்டமும் மழையினால் பாதிக்கப்பட்ட நிலையில், 23 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டது

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, போட்டியின் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களை பெற்றிருந்தது

இலங்கை வீரர்களுக்கு மின்னொளியில் அதிக பயிற்சி கொடுங்கள் – மாலிங்க

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு T20i போட்டிகளிலும் வெற்றியின் விளிம்புவரை….

இந்த நிலையில், போட்டியின் மூன்றாவது நாளான நேற்றைய தினமும் (05) சீரற்ற காலநிலை நிலவியதால் போட்டி மதியபோசன இடைவெளியின் பிறகு ஆரம்மாகியது.  

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி, ஆபிப் ஹொசைனின் சதம் மற்றும் அணித் தலைவர் நஜ்முல் ஹஸன் சான்டோவின் அரைச் சதத்தின் உதவியுடன் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

இதில் ஆபிப் ஹொசைன் சதமடித்து 100 ஓட்டங்களையும், நஜ்முல் ஹஸன் சான்டோ 88 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, போட்டியின் இறுதியும், நான்காவதும் நாளான இன்றைய தினமும் சீரற்ற காலநிலையின் குறுக்கீட்டினால் போட்டியை ஆரம்பிக்க முடியாமல் போக இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

>>இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெஹான் டேனியல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஸ் 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்

இதன்படி, இரண்டு போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் 0-0 என சமநிலையில் நிறைவுக்கு வந்ததுடன், முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 2-1 என கைப்பற்றியது

Result

Match drawn

Sri Lanka Emerging Team

Bangladesh Emerging Team
208/3 (66)


Batsmen R B 4s 6s SR
Saif Hassan c Nishan Peiris b Mohamed Shiraz 4 10 1 0 40.00
Aminul Islam b Jehan Daniel 9 31 1 0 29.03
Najmul Hossain Shanto not out 88 173 10 3 50.87
Yasir Ali c Minod Bhanuka b Jehan Daniel 0 4 0 0 0.00
Afif Hossain not out 100 180 11 2 55.56


Extras 7 (b 1 , lb 3 , nb 2, w 1, pen 0)
Total 208/3 (66 Overs, RR: 3.15)
Fall of Wickets 1-6 (1.6) Saif Hassan, 2-21 (11.2) Aminul Islam, 3-21 (11.6) Yasir Ali,

Bowling O M R W Econ
Asitha Fernando 14 4 31 0 2.21
Mohamed Shiraz 18 4 41 1 2.28
Jehan Daniel 11 6 28 2 2.55
Nishan Peiris 13 1 63 0 4.85
Amila Aponso 10 0 41 0 4.10



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<