Home Tamil பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய ஆபிப் ஹொசைன்

பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்காக சதமடித்து அசத்திய ஆபிப் ஹொசைன்

78
Getty Images

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்ட நேர நிறைவில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கோக்ஸ் பசார் நகரில் நடைபெறும் நான்கு நாட்கள் கொண்ட இப்போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதி ஆட்டம் மழையினால் பாதிக்க்ப்பட்ட நிலையில், 23 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டது.

மழைக்கு மத்தியில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கு சவால் கொடுக்கும் இலங்கை

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட்………….

இதன்படி, பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களை பெற்றிருந்தது. பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை அதன் தலைவர் நஜ்முல் ஹஸன் சான்டோ 26 ஓட்டங்களுடனும், ஆபிப் ஹொசைன் 16 ஓட்டங்களுடன் களத்தில் நின்றனர்.

இந்த நிலையில், போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினமும் (05) மழை காரணமாக போட்டியை உரிய நேரத்தில் ஆரம்பிக்க முடியாமல் போனாலும், மதிய போசண இடைவேளையின் பிறகு போட்டி ஆரம்பமாகியது. 

நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து தமது இணைப்பாட்டத்தை முன்னெடுத்த நஜ்முல் ஹஸன் சான்டோ மற்றும் ஆபிப் ஹொசைன் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறந்த முறையில் எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர். 

இவர்கள் இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்காக 187 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இதில் ஆபிப் ஹொசைன் சதமடித்து 100 ஓட்டங்களையும், நஜ்முல் ஹஸன் சான்டோ 88 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெஹான் டேனியல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் சிராஸ் 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். 

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

ஸ்கோர் விபரம்

Result

Match drawn

Sri Lanka Emerging Team

Bangladesh Emerging Team
208/3 (66)


Batsmen R B 4s 6s SR
Saif Hassan c Nishan Peiris b Mohamed Shiraz 4 10 1 0 40.00
Aminul Islam b Jehan Daniel 9 31 1 0 29.03
Najmul Hossain Shanto not out 88 173 10 3 50.87
Yasir Ali c Minod Bhanuka b Jehan Daniel 0 4 0 0 0.00
Afif Hossain not out 100 180 11 2 55.56


Extras 7 (b 1 , lb 3 , nb 2, w 1, pen 0)
Total 208/3 (66 Overs, RR: 3.15)
Fall of Wickets 1-6 (1.6) Saif Hassan, 2-21 (11.2) Aminul Islam, 3-21 (11.6) Yasir Ali,

Bowling O M R W Econ
Asitha Fernando 14 4 31 0 2.21
Mohamed Shiraz 18 4 41 1 2.28
Jehan Daniel 11 6 28 2 2.55
Nishan Peiris 13 1 63 0 4.85
Amila Aponso 10 0 41 0 4.10



மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க