வீசா காலாவதியாகி இந்தியாவில் தங்கிய பங்களாதேஷ் வீரருக்கு அபராதம்

80
©bdcrictime

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சயிப் ஹசன் வீசா காலாவதியாகியும் இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்துக்காக இந்திய ரூபாயில் 21,600 ரூபாவை அபராதமாக செலுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 3 T20I போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், T20I தொடரை 2-1 என இழந்த பங்களாதேஷ் அணி, டெஸ்ட் தொடரையும் 2-0 என இழந்தது. 

வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி

கொல்கத்தாவில் நடைபெற்ற பங்களாதேஷ் ………

இறுதியாக, கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணியின் சில வீரர்கள் போட்டி முடிவடைந்ததுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர்.

எனினும், இன்னும் சில வீரர்கள் அடுத்த நாள் காலை பங்களாதேஷ் புறப்பட தயாராகியிருந்தனர். டிக்கெட்டுகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், வீரர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு சென்று காத்திருந்துள்ளனர். 

விமான நிலையத்தில் வீரர்களின் வீசாக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், சயிப் ஹசனின் வீசா, 2 நாட்களுக்கு முன்னர் காலாவதியாகியுள்ளமை கண்டறியப்பட்டது. இதனால், அவரை விமானத்துக்கு செல்ல அதிகாரிகள் மறுத்துள்ளனர். 

இதன் காரணமாக ஏனைய வீரர்கள் நாட்டுக்கு திரும்பிய போதும், சயிப் ஹசன் அன்றைய தினம் நாடு திரும்பவில்லை. பங்களாதேஷ் அணியின் வீரர்கள் அனைவருக்கும் கிரிக்கெட் சபை வீசா பெற்றுக்கொடுத்திருந்த போதும், சயிப் ஹசன் 6 மாதங்களுக்கு முன்னரே வீசா பெற்றிருந்ததால், அவருக்கு கிரிக்கெட் சபை வீசா பெற்றுக்கொடுத்திருக்கவில்லை.

எவ்வாறாயினும் இதன் பின்னர் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம், இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, சயிப்புக்கான வீசாவினை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனையடுத்து, கடந்த புதன்கிழமை சயீப் பங்களாதேஷை சென்றடைந்துள்ளார்.

சயிப் ஹசன் தொடர்பில் குறிப்பிட்ட பங்களாதேஷ்  உயர் ஸ்தானிகர் டபிகு ஹசன், “சயிப் ஹசனின் வீசா இரண்டு நாட்களுக்கு முன்னர் காலாவதியாகியுள்ளது. எனினும், அவர் விமான நிலையத்துக்கு வந்த பின்னரே அறிந்துக்கொண்டுள்ளார். அவர் பதிவுசெய்த விமானத்தில் அவரால் செல்ல முடியவில்லை. புதிய விதிமுறையின் படி, வீசா முடிவடைந்தும் இந்தியாவில் தங்கியதற்காக அவர் அபாரதம் செலுத்த வேண்டியிருந்தது.

எனினும், இந்திய உயர் ஸ்தானிகராலயம் சயிப் ஹசனின் வீசாவுக்கான அனுமதியை விரைவில் வழங்கியதன் காரணமாக அவரால் புதன்கிழமை (27) நாடு திரும்ப முடிந்தது” என்றார்.

சயிப் ஹசன் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேலதிக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இணைக்கப்பட்ட போதும், அவர் இரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<