பந்தை சேதப்படுத்திய வீரர்களுக்காக வருந்தும் ஏபி. டி. விலியர்ஸ்

1100

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தடைக்கு உள்ளான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்காக வருந்துவதாக தென்னாபிரிக்க நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபி. டி. விலியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின்போது இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியின் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதோடு சர்ச்சை இடம்பெற்ற டெஸ்ட் தொடரையும் ஆஸி. அணி 1–3 என பறிகொடுத்தது.

தடைக்கு எதிராக மேல் முறையீடு செய்யாமல் இருக்க ஸ்மித் முடிவு

தம்மீது சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு ஓர் ஆண்டு தடை விதித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ……….

இந்த பந்தை சேதப்படுத்திய சர்ச்சை குறித்து தென்னாபிரிக்க முன்னணி வீரர் ஏபி. டி. விலியர்ஸ் கூறும்போது, ‘இந்த விடயம் ஊதிப்பெருக்கப்பட்டது’ என்று வருந்தியுள்ளார்.

‘ஆம்! மணல் காகிதம், பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஊதிப்பெருக்கப்பட்டது. இது பொறுப்பான விடயம்தான், ஆனால் அதற்காக அதைப் பெருக்கிய விதம் 3 வீரர்களின் சொந்த வாழ்க்கையையே பாதித்து விடும் அளவுக்குப் போகக்கூடாது. அவர்களுக்காக நான் வருந்துகிறேன்’ என்றார்.

இந்த சர்ச்சையில் சிக்கிய ஆஸி. அணித்தலைவர் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னருக்கு ஓர் ஆண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டதோடு பந்தை சேதப்படுத்திய கெமரூன் பான்க்ரொப்டுக்கு ஒன்பது ஆண்டு போட்டித்தடை விதிக்கப்பட்டது.

தி கார்டியன் இதழுக்கு பேட்டி அளித்த டி விலியர்ஸ், ‘உண்மையில் இது தீவிரமான விடயம் தான். ஆனால் அவர்களை தனிப்பட்ட முறையில் நோவிக்கும் அளவுக்கு நாம் இதனை எடுத்துச் சென்றுவிட்டோம்’ என்று தெரிவித்தார்.

‘குறிப்பாக ஸ்மித் தனது அணிக்காக சரியானதை செய்வதாக நினைத்தே முன்னின்றார். அவர் தண்டிக்கப்பட்ட விதம் கடுமையானது. தவறு தவறுதான். பந்தை ரிவர்ஸ் செய்ய வழிகளை தேடினார்கள் ஆனால் விதிக்குள் செயற்பட வேண்டும். மணல்காகிதம்? (சிரிக்கிறார்), எனக்குத் தெரியாது. எனது பையிலும் அது இருக்கிறது. ஆனால் எனது துடுப்பை சுத்தம் செய்யவே பயன்படுத்துகிறேன்’ என்றார் டிவிலியர்ஸ்.

கிரிக்கெட் நாடகமாக மாறியுள்ள ஆஸி வீரர்களின் சூழ்ச்சி

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதால் அதில் சில சம்பிரதாயங்களை மதிப்பது அவசியம். கிரிக்கெட் சட்டங்களின் 41…….

தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த டெஸ்ட் தொடரில், பந்தை சேதப்படுத்திய சர்ச்சை மாத்திரம் அன்றி வீரர்கள் திட்டிக் கொண்டது, உடலால் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டது என்று பல சர்ச்சைகளைக் கொண்ட தொடராக அது இருந்தது. இதில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட ஜெப் குரோவின் செயற்பாடு விமர்சனத்திற்கு உள்ளானது.

எனினும் இந்த பரபரப்பான சூழல் பற்றி டி விலியர்ஸ் எந்த முறைப்பாடும் செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் இவ்வாறு பரபரப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘அது கடினமாக இருந்தது’ என்று குறிப்பிட்ட டிவிலியர்ஸ், ‘ஆனால் இது நான் பங்கேற்ற மிகச் சிறந்த தொடராகும். மோசடிகள் நடந்தன, ஆனால் கிரிக்கெட் ஆட்டம், நாங்கள் செலுத்திய ஆதிக்கம் நினைவுகொள்ளத் தக்கது.

சில வேளைகளில் நாம் திரும்பிப் பார்க்கும் போதுதான் நம் சாதனைகள் நமக்குப் புரியவரும். டர்பன் போலவே நாங்கள் வீழ்ந்திருப்போம். ஆனால் அப்போது சிறப்பான ஒரு சதம் எடுத்தது, அதனால் அணி வெற்றிபெற்றது நம்பமுடியாத தருணமாக இப்போது தோன்றுகிறது. என்னுடைய சதங்களில் சிறந்தது அது.

வீரர்களின் நடத்தைகள் குறித்து பொதுக் கூட்டத்தில் ஆராயவுள்ள ஐ.சி.சி

ஐ.சி.சி. இன் இந்த காலாண்டுக்கான (2018) பொதுக் கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில் (26) கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது…….

கடினமான கிரிக்கெட் தான், ஆனால் டெஸ்ட் போட்டிகள் அதன் அனைத்து தன்மைகளுடன் ஆடப்படவேண்டும், வாக்குவாதம் உட்பட இன்னும் கூட தனிநபர் தாக்குதலுக்குச் செல்லாத கோடு ஒன்று உள்ளது என்று பேசுகின்றனர். ஆனால் தொடர் நடக்கிறது அதனை நாம் இழக்கவும் முடியாது.

இவுஸ்திரேலியர்கள் மிகவும் தனிநபர் அந்தரங்கத் தாக்குதல் தொடுப்பவர்கள். எங்கள் வீரர்களில் ஒருவரும் அப்படிச் செய்தார் (டி காக்), இது ஒரு பெரிய கதை. ஆனால் கிரிக்கெட்டை சவாலாக ஆடுவது எனக்குப் பிடிக்கும். மீதியெல்லாம் தேவையற்றது’ என்றார்.

34 வயதான டி விலியர்ஸ் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டி பற்றியும் கருத்து வெளியிட்டிருந்தார்.

‘2015இல் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம், உலகக் கிண்ணம் என்பது ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடாது என்பதாகும். அரையிறுதிக்குப் பின்னர் மனம் உடைந்து போனேன். விடைகள் தேடியலைந்தேன். இப்போது மாறிவிட்டேன், 2019இல் உலகக் கிண்ணத்தை வெல்லும் தென்னாபிரிக்க அணியில் வீரராக இருக்க விரும்புவேன். இல்லையென்றால் அது என் கிரிக்கெட் வாழ்வை தீர்மானிக்காது என்று முடிவுக்கு வந்துள்ளேன்’ என்றார் தென்னாபிரிக்க அணியின் அதிரடி நட்சத்திரம் டி விலியர்ஸ்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க