உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், வோனர்

415
CRICKET AUSTRALIA

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய அணிக்குழாம் இன்று (15) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் (CA) வெளியிடப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவர் பொறுப்பு யாருக்கு?

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 50 இற்கு குறைவான நாட்களே இன்னும்…

உலகக் கிண்ணத்திற்காக வெளியிடப்பட்டுள்ள இந்த அவுஸ்திரேலிய குழாத்தில் பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி ஒரு வருட போட்டித்தடையினைப் பெற்றுக் கொண்ட நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோனர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோனர் ஆகிய இருவரும் 2018ஆம் ஆண்டிற்கு பின்னர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடர் மூலம், மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஸ்மித், வோனர் ஜோடியின் மீள்வருகை காரணமாக உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்துறை  பலம்பெறுவதனால் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான பீட்டர் ஹேன்ஸ்கொம்பிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

“ ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோனர் ஆகியோர் அணிக்கு திரும்பியிருக்கின்றனர். இந்த இருவரும் உலகத் தரம்வாய்ந்த வீரர்களாக இருப்பதோடு இவர்கள் ஐ.பி.எல். போட்டிகளின் மூலம் தங்களது பழைய ஆட்டத்திற்கு திரும்பியிருப்பதை பார்ப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. “ என அவுஸ்திரேலிய அணியின் சிரேஷ்ட தேர்வாளரான ட்ரவர் ஹோன்ஸ் ஸ்மித், வோனர் ஆகியோரின் மீள்வருகை பற்றி பேசும் போது குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் பீட்டர் ஹேன்ஸ்கொம்ப் உடன் இணைந்து உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினை ஜோஸ் ஹேசல்வூடும் இழக்கின்றார்.

நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் உள்ளக்கப்படாமல் போனது, அவரது உபாதை ஆபத்தினை மேலும் அதிகரிக்காமல் இருக்கவென கூறப்படுகின்றது. ஜனவரி மாத ஆரம்பத்தில் உபாதைக்கு ஆளான ஹேசல்வூட் உலகக் கிண்ணத்தின் பின்னர் இடம்பெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான சோன் மார்ஸ், உஸ்மான் கவாஜா ஆகியோர் அண்மைக்காலமாக திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் உலகக் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலிய அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இதேநேரம் மார்கஸ் ஸ்டோனிஸ், கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் சகலதுறை துடுப்பாட்ட வீரர்களாக அவுஸ்திரேலிய அணிக்கு வலுச்சேர்க்கின்றனர்.

உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ச்சினால் வழிநடாத்தப்படவுள்ள நிலையில், இளம் துடுப்பாட்ட வீரர்களான அஸ்டன் டேனர் மற்றும் டி.ஆர்சி சோர்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ThePapare.com இன் உலகக் கிண்ண உத்தேச இலங்கை அணி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி…

உலகக் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சுத்துறை பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜை றிச்சட்ஸன், நேதன் கோல்டர்-நைல் மற்றும் ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் போன்றோரினால் உறுதி செய்யப்பட, சுழல் பந்துவீச்சாளர்களாக எடம் ஷம்பா மற்றும் நேதன் லயன் ஆகியோர் பெறுமதி சேர்க்கின்றனர்.

அவுஸ்திரேலிய அணியில் இணைக்கப்பட்டிருக்கும் பந்துவீச்சாளர்களில் மிச்செல் ஸ்டார்க், ஜை றிச்சர்ட்ஸன் ஆகியோர் தற்போது உபாதையில் இருக்கின்ற போதிலும் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இந்த வீரர்கள் பூரண உடற்தகுதியினௌ பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகக் கிண்ணத்தின் நடப்புச் சம்பியன்களாக இருக்கும் அவுஸ்திரேலிய அணி, ஜூன் மாதம் 01ஆம் திகதி உலகக் கிண்ணத்திற்கான தமது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்கொள்கின்றது.

அதேநேரம் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் பயிற்சிப் போட்டிகளுடன் ஆடும் அவுஸ்திரேலிய அணி, மே 02ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகும் பயிற்சி முகாம் ஒன்றுடன் உலகக் கிண்ணத்திற்கான தமது தயார்படுத்தல்களை ஆரம்பம் செய்கின்றது.

அவுஸ்திரேலிய குழாம் – ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), ஜேசன் பெஹ்ரென்ட்ரோப், அலெக்ஸ் கேரி, நேதன் கோல்டர்-நைல், பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நேதன் லயன், சோன் மார்ஸ், கிளேன் மெக்ஸ்வெல், ஜை றிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வோனர், அடம் ஷம்பா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<