சொந்த தம்பியால் படுகாயமடைந்து இரத்தம் சிந்திய ஆஸி. வீரர்

69
cricket.com.au twitter

உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின் போது சகோதரர் அடித்த பந்து தாக்கியதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அஷ்டன் அகார் காயத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலியாவில் மார்ஷ் கிண்ணத்துக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அடிலெட்டில் நேற்றுமுன்தினம் (17) நடைபெற்ற போட்டி ஒன்றில் மேற்கு அவுஸ்திரேலியாதெற்கு அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் மேற்கு அவுஸ்திரேலியா அணிக்கு ஷ்டன் அகாரும், தெற்கு அவுஸ்திரேலிய அணிக்கு அவருடைய தம்பி வெஸ் அகாரும் விளையாடியிருந்தனர்.

இதில் தெற்கு அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது அந்த அணியின் வெஸ் அகார் அடித்த பந்துமிட்ஓன்திசையில் பிடியெடுக்க முயற்சித்த அவரது சகோதரரான ஷ்டன் அகாரை (மேற்கு அவுஸ்திரேலியா) பதம் பார்த்தது

அதாவது சில அடி ஓடி வந்து அவர் தடுமாற, பந்து நேராக அவரது மூக்கின் மேல்பகுதியில் பலமாக தாக்கி இரத்தம் கொட்டியது. அவர் கண்ணாடி அணிந்து இருந்ததால் அது உடைந்து, அவரது மூக்கிற்கு மேல் பதம் பார்க்க அவர் அப்படியே கீழே படுத்து விட்டார்.

இதனையடுத்து ஜை ரிச்சர்ட்சன் உடனடியாக மருத்துவ உதவிக் குழுவை அழைத்தார். அதேபோல, துடுப்பெடுத்தாடிய தம்பி வெஸ் அகார் பதற்றத்தில் துடுப்பு மட்டையை எறிந்து விட்டு ஓடி வந்தார். உடனடியாக ஷ்டன் அகார் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பிறகு அவரது தம்பி வெஸ் அகார் (9 ஓட்டங்கள்) கொஞ்சம் பதற்றத்துடனே துடுப்பெடுத்தாடியதை காண முடிந்தது. எனினும், இந்தப் போட்டியில் தெற்கு அவுஸ்திரேலிய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு வெஸ் அகார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பந்து அவரது கண்ணாடியைத் தாக்கியதுடன், மூக்கினை பதம்பார்த்தது. இதனையடுத்து உடனே அவர் மைதானத்தில் விழுந்தார். 

அதைப் பார்த்தவுடன் நான் மிகவும் பயந்தேன். உடனே துடுப்பு மட்டையை எறிந்து விட்டு அவருக்கு அருகில் சென்றேன். நான் அவருடைய உடல்நிலையைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லைஉண்மையில் தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்

அவரது காயத்துக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வந்த போதிலும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அத்துடன், தனக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்

39 பந்தில் 63 ஓட்டங்கள்: தடைக்குப் பிறகு அதிரடி காட்டிய பிரித்வி ஷா

ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கி எட்டு மாதகால போட்டித் தடையிலிருந்து …

26 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான ஷ்டன் அகார் அவுஸ்திரேலிய அணிக்காக 2013 முதல் 2018 வரை 4 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 21 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதேநேரம், 22 வயதுடைய வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான வெஸ் அகார், அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட அணிக்காக மாத்திரம் விளையாடியுள்ளார்

அத்துடன், இவ்விரண்டு வீரர்களிதும் பெற்றோர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…