Home Tamil ஆஸியுடனான வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்கா

ஆஸியுடனான வெற்றியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்கா

201
(Photo by Paul ELLIS / AFP)

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 45ஆவது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியினை தென்னாபிரிக்கா 10 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

ரோஹித்தின் சாதனை சதத்துடன் இந்தியாவுக்கு இலகு வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு…

இந்த உலகக் கிண்ணத் தொடரின் கடைசி லீக் போட்டியாக அமைந்த இந்த மோதல் நேற்று (6) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு ப்ளேசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்க அணிக்காக பெற்றுக் கொண்டார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பினை ஏற்கனவே இழந்திருக்கும்  தென்னாபிரிக்க அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத் தொடரினை ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்யும் நோக்கில் கட்டாய மாற்றம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

அதன்படி, காயத்திற்குள்ளாகிய துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லாவிற்கு பதிலாக மேலதிக சுழல் பந்துவீச்சாளராக தப்ரைஸ் சம்ஷி தென்னாபிரிக்க அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

தென்னாபிரிக்க அணி

குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், பாப் டு ப்ளேசிஸ் (அணித் தலைவர்), ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன்,  JP. டுமினி அன்டிலே பெஹ்லுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ், ககிஸோ றபாடா, இம்ரான் தாஹிர், தப்ரைஸ் சம்ஷி

இதேநேரம், இந்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக தெரிவாகியிருந்த அவுஸ்திரேலியா மாற்றங்கள் ஏதுமின்றி  களமிறங்கியது.

அவுஸ்திரேலிய அணி

டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், கிளேன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரென்டோர்ப், நதன் லயன்

இதன் பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தென்னாபிரிக்க அணி போட்டியில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது. தென்னாபிரிக்க அணிக்கு, ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த எய்டன் மார்க்ரம் 34 ஓட்டங்களை பெற்றுத்தந்து முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

எனினும், தென்னாபிரிக்க அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக், அவரின் 25ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 51 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்களாக 52 ஓட்டங்கள் பெற்று வலுச் சேர்த்தார்.

குயின்டன் டி கொக்கினை தொடர்ந்து தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு ப்ளேசிஸ் மற்றும் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் ஜோடி, தென்னாபிரிக்க அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இந்த இணைப்பாட்டத்திற்குள் சதம் பூர்த்தி செய்த பாப் டு ப்ளேசிஸ் 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார். மேலும், அவரின் 12ஆவது ஒருநாள் சதமாகவும் அமைந்தது.

இதேநேரம், ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் 97 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்கள் பெற்று சதம் பெறத்தவறியிருந்தார். இந்த 95 ஓட்டங்கள் டஸ்ஸேனின் 7ஆவது ஒருநாள் அரைச்சதமாகவும், இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவர் பெற்ற மூன்றாவது அரைச்சதமாகவும் அமைந்தது.

IPL போன்ற தொடர்களில் எமது வீரர்கள் விளையாட வேண்டும் – திமுத்

உலகளாவிய ரீதியில் நடைபெறும் சர்வதேச….

பின்னர் தென்னாபிரிக்க அணி, டு ப்ளேசிஸ் மற்றும் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 326 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் மிச்செல் ஸ்டார்க் மற்றும் நதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 326 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 315 ஓட்டங்கள் மட்டும் பெற்று போட்டியில் 10 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் பெற்ற டேவிட் வோர்னர் 117 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பெளண்டரிகள் அடங்கலாக 122 ஓட்டங்களை குவித்திருந்தார். மேலும் இந்த 122 ஓட்டங்கள் வோர்னர் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற 3ஆவது சதமாக அமைந்ததோடு, அவரின் 17ஆவது ஒருநாள் சதமாகவும் அமைந்தது. இதேநேரம், அலெக்ஸ் கேரி 69 பந்துகளுக்கு 11 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 85 ஓட்டங்கள் பெற்று போராட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக, ககிஸோ றபாடா 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியும், ட்வைன் ப்ரெடொரியஸ் மற்றும் அன்டிலே பெஹ்லுக்வேயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் அவரின் சிறந்த துடுப்பாட்டத்திற்காக தெரிவாகியிருந்தார்.

இப்போட்டியோடு, இந்த உலகக் கிண்ணத் தொடரில், லீக் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ளன. இதில், வெற்றி பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்கா இந்த உலகக் கிணணத் தொடரினை, 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகள் பெற்றவாறு நிறைவு செய்து கொள்கின்றது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண…

இதேநேரம், இப்போட்டியின் மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது தோல்வியினைப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, மொத்தமாக 14 புள்ளிகள் பெற்று உலகக் கிண்ண அணிகள் நிரல்படுத்தலில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்கின்றது.

இனி உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) மன்செஸ்டர் நகரில் வைத்து இந்திய அணி, நியூசிலாந்து அணியினை எதிர்கொள்கின்றது.

இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (11) பர்மிங்கம் நகரில் வைத்து அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியினை எதிர்கொள்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<

போட்டியின் சுருக்கம்

Result


Australia
315/10 (47)

South Africa
325/6 (50)

Batsmen R B 4s 6s SR
Aiden Markram st  Alex Carey b Nathan Lyon 34 37 0 0 91.89
Quinton de Kock c Mitchell Starc b Nathan Lyon 52 51 0 0 101.96
Faf du Plessis c Mitchell Starc b Jason Behrendorff 100 94 0 0 106.38
Rassie van der Dussen c Glenn Maxwell b Pat Cummins 95 97 0 0 97.94
JP Duminy c Marcus Stoinis b Mitchell Starc 14 13 0 0 107.69
Dwaine Pretorius b Mitchell Starc 2 5 0 0 40.00
Andile Phehlukwayo not out 4 3 0 0 133.33


Extras 24 (b 1 , lb 10 , nb 0, w 13, pen 0)
Total 325/6 (50 Overs, RR: 6.5)
Fall of Wickets 1-79 (11.3) Aiden Markram, 2-114 (17.4) Quinton de Kock, 3-265 (42.6) Faf du Plessis, 4-295 (46.5) JP Duminy, 5-317 (48.5) Dwaine Pretorius, 6-325 (49.6) Rassie van der Dussen,

Bowling O M R W Econ
Mitchell Starc 9 0 59 2 6.56
Jason Behrendorff 8 0 55 1 6.88
Nathan Lyon 10 0 53 2 5.30
Pat Cummins 9 0 66 1 7.33
Steve Smith 1 0 5 0 5.00
Marcus Stoinis 3 0 19 0 6.33
Glenn Maxwell 10 0 57 0 5.70


Batsmen R B 4s 6s SR
David Warner c Chris Morris b Dwaine Pretorius 122 117 15 2 104.27
Aaron Finch c Aiden Markram b Imran Tahir 3 4 0 0 75.00
Usman Khawaja b Kagiso Rabada 18 14 3 0 128.57
Steve Smith lbw b Dwaine Pretorius 7 6 1 0 116.67
Marcus Stoinis run out (Kagiso Rabada) 22 34 4 0 64.71
Glenn Maxwell c Quinton de Kock b Kagiso Rabada 12 20 1 0 60.00
 Alex Carey c Aiden Markram b Chris Morris 85 69 11 2 123.19
Pat Cummins c JP Duminy b Andile Phehlukwayo 9 15 1 0 60.00
Mitchell Starc b Kagiso Rabada 16 11 1 1 145.45
Jason Behrendorff not out 11 6 0 0 183.33
Nathan Lyon c Aiden Markram b Andile Phehlukwayo 3 3 0 0 100.00


Extras 7 (b 0 , lb 4 , nb 0, w 3, pen 0)
Total 315/10 (47 Overs, RR: 6.7)
Fall of Wickets 1-5 (2.1) Aaron Finch, 2-33 (6.3) Steve Smith, 3-95 (18.3) Marcus Stoinis, 4-119 (24.1) Glenn Maxwell, 5-227 (39.1) David Warner, 6-272 (44.2) Pat Cummins, 7-275 (45.2)  Alex Carey, 8-301 (48.1) Usman Khawaja, 9-306 (48.5) Mitchell Starc, 10-315 (49.5) Nathan Lyon,

Bowling O M R W Econ
Imran Tahir 9 0 59 1 6.56
Kagiso Rabada 10 0 56 3 5.60
Dwaine Pretorius 6 2 27 2 4.50
Chris Morris 9 0 63 2 7.00
Tabraiz Shamsi 9 0 62 0 6.89
Andile Phehlukwayo 3 0 0 0 0.00
JP Duminy 4 0 22 0 5.50



முடிவு தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்களால் வெற்றி