அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா

134
Photo - Cricket Australia

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் டெஸ்ட் போட்டிகளில் தமது 150ஆவது வெற்றியினை பதிவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினர், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என முன்னிலை பெற்றுள்ளனர்.

39 வருடங்களுக்கு பிறகு இந்தியனாக சாதனை படைத்த பும்ரா

மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட்  அணி அந்நாட்டு அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளும் கொண்ட தொடர்களில் ஆடுகின்றது. அதன்படி, தமது சுற்றுப் பயணத்தில் முதல் அங்கமாக அவுஸ்திரேலிய அணியுடனான T20 தொடரினை நிறைவு செய்திருக்கும் இந்திய அணி, தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா, அவுஸ்திரேலிய ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பெற்றிருந்த நிலையில் தீர்மானமிக்க தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 443 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தமது துடுப்பாட்டத்தினை இடைநிறுத்தியது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பாக செட்டெஸ்வார் புஜாரா சதம் ஒன்றுடன் 106 ஓட்டங்கள் குவிக்க, அணித்தலைவர் கோலி 82 ஓட்டங்களையும், அறிமுக துடுப்பாட்ட வீரர் மயான்க் அகர்வால் 76 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இதேநேரம், ரோஹித் சர்மா 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இலங்கையை வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவுசெய்த நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை…

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக பேட் கம்மின்ஸ் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மிச்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் வெறும் 151 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே (மார்க்கஸ் ஹர்ரிஸ், உஸ்மான் கவாஜா, டிம் பெயின்) இருபது ஓட்டங்களை கடந்திருக்க  இந்திய அணியின் வேகப்புயலான ஜஸ்பிரிட் பும்ரா 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

இதன் பின்னர் 292 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் அணி, இம்முறை 106 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. இந்திய அணியின் இம்முறைக்கான துடுப்பாட்டத்தில் மயான்க் அகர்வால் 42 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்ய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 27 ஓட்டங்களை விட்டுத்தந்து 6 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ்

நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில்…

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 399 ஓட்டங்களை அடைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர்  89.9 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 261 ஓட்டங்களை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பாக பேட் கம்மின்ஸ் 63 ஓட்டங்கள் பெற, சோன் மார்ஷ் 44 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில், இந்திய அணியின் பந்துவீச்சு சார்பாக ரவிந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இந்த டெஸ்ட்டில் மொத்தமாக 9 விக்கெட்டுக்களை சாய்த்த இந்திய வீரர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 3ஆம் திகதி சிட்னி நகரில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 443/7 (169.4) செட்டெஸ்வார் புஜாரா 106, விராத் கோலி 82, மயான்க் அகர்வால் 76, ரோஹித் சர்மா 63*, றிசாப் பாண்ட் 39, பேட் கம்மின்ஸ் 72/3

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 151 (66.5) டிம் பெயின் 22, மார்க்கஸ் ஹர்ரிஸ் 22, ஜஸ்பிரிட் பும்ரா 33/6

இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 106/8 (37.3) மயான்க் அகர்வால் 42, பேட் கம்மின்ஸ் 27/6, ஜோஸ் ஹெசல்வூட் 22/2

அவுஸ்திரேலியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 261 (89.3) சோன் மார்ஷ் 44, ட்ராவிஸ் ஹெட் 34, ஜஸ்பிரிட் பும்ரா 53/3, ரவிந்திர ஜடேஜா 82/3

போட்டி முடிவு – இந்தியா 137 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<