Home Tamil இலகு வெற்றியுடன் உலகக் கிண்ண பயணத்தை தொடங்கியிருக்கும் அவுஸ்திரேலியா

இலகு வெற்றியுடன் உலகக் கிண்ண பயணத்தை தொடங்கியிருக்கும் அவுஸ்திரேலியா

159

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்து தங்களுடைய உலகக் கிண்ணப் பயணத்தினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் லீக் மோதல்களில் ஒன்றாக அமைந்த ஆப்கானிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி பகலிரவு ஆட்டமாக இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் நேற்று (1) ஆரம்பமாகியது.

தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன

கார்டிப் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், எமது வீரர்கள்..

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படின் நயீப் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்து கொண்டார்.

இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருந்தது. இதேநேரம் குல்படின் நயீப் இப்போட்டியின மூலம் ஆப்கானிஸ்தான் அணியினை உலகக் கிண்ணத் தொடரின் போட்டி ஒன்றில் வழிநடாத்தும் சந்தர்ப்பத்தினை முதல் தடவையாக பெற்றுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தான் அணி – மொஹமட் சஹ்ஷாத், ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய், றஹ்மத் சாஹ், ஹஷ்மத்துல்லாஹ் சஹிதி, நஜிபுல்லாஹ் சத்ரான், மொஹமட் நபி, குல்படின் நயீப் (அணித்தலைவர்), ரஷீத் கான், டவ்லத் சத்ரான், முஜீபுர் ரஹ்மான், ஹமிட் ஹஸன்

மறுமுனையில் ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி சார்பாக பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் போட்டித்தடைக்கு ஆளாகிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அத்தடைக்கு பின்னர் முதல் தடவையாக ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணி – ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, நதன் கோல்டர்-நைல், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் சம்பா

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய உலகக் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன்களாக இருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான துடுப்பாட்டத்தை ஆப்கானிஸ்தான் அணி மொஹமட் சஹ்ஷாத் மற்றும் ஹஸ்ரத்துல்லாஹ் சஷாய் ஆகியோருடன் ஆரம்பம் செய்தது.

எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்க தவறியது. அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களால் ஓய்வறை அனுப்பி வைக்கப்பட்டனர்.

சகலதுறை மிரட்டலால் இலங்கையை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டியில் இன்று (01) இலங்கை..

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து சென்ற காரணத்தினால் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் வந்த றஹ்மத் ஷாஹ் ஆப்கான் தரப்பினை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், றஹ்மத் ஷாஹ் அரைச்சதம் ஒன்றினை நெருங்கி வந்த நிலையில் அவுஸ்திரேலிய சுழல் வீரரான அடம் சம்பாவின் விக்கெட்டாக மாறி மைதானத்தை விட்டு வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித்திடம் கவர் திசையில் பிடிகொடுத்த றஹ்மத் ஷாஹ் 6 பெளண்டரிகள் அடங்கலாக 60 பந்துகளில் 43 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

றஹ்மத் ஷாஹ்வின் விக்கெட் ஒரு புறமிருக்க ஆப்கானிஸ்தானின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் நபி, ஹஷ்மத்துல்லாஹ் சஹிதி ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர். இவர்களில் ஹஷ்மத்துல்லாஹ் சஹிதி 18 ஓட்டங்களை பெற, மொஹமட் நபி 7 ஓட்டங்களை மட்டுமே பெற்றார்.

இதன் பின்னர் அணித்தலைவர் குல்படின் நயீப் மற்றும் நஜிபுல்லாஹ் சத்ரான் ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக நல்ல இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்க முயன்றனர். மொத்தமாக 83 ஓட்டங்கள் வரையில் இந்த இணைப்பாட்டம் நீடித்தது. அதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் ஐந்தாம் விக்கெட்டாக அதன் தலைவர் குல்படின் நயீப் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் நஜிபுல்லாஹ் சத்ரான் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 10ஆவது அரைச்சதத்துடன் ஆப்கானிஸ்தான் அணிக்கு நம்பிக்கை தர முயன்றார். ஆனால், நஜிபுல்லாஹ் சத்ரானின் விக்கெட்டும் சிறிது நேரத்தில் பறிபோனது.

>> இலங்கை A அணிக்கு எதிரான டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்திய A அணி

இதன் பின்னர் போட்டியில் மிகவும் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 38.2  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற நஜிபுல்லாஹ் சத்ரான் 49 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை குவித்திருந்தார். இவரோடு ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிரடி காட்டிய ரஷீத் கானும் 11 பந்துகளில் 27 ஓட்டங்களுடன் உதவியிருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் சம்பா மற்றும் பெட் கமின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2  விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 208 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த அதன் தலைவர் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த இரண்டு வீரர்களினதும் அரைச்சத உதவிகளோடு அவுஸ்திரேலிய அணி போட்டியின் வெற்றி இலக்கினை 34.5 ஓவர்டகளில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களுடன் அடைந்தது.

அக்தர், ரொஹைலின் அதிரடியால் இலங்கையை வீழ்த்திய பாக். இளையோர்

அக்தர் ஷாவின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் ரொஹைல் நாசிரின் அபார துடுப்பாட்டம்…

அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டேவிட் வோர்னர் தனது மீள்வருகைப் போட்டியில் 18ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 8 பெளண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஆரோன் பின்ச் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 22ஆவது ஒருநாள் சதத்தோடு 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் முஜீபுர் ரஹ்மான், ரஷீத் கான் மற்றும் அணித்தலைவர் குல்படின் நயீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் தெரிவாகினார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத் தொடரின் தமது அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை எதிர்வரும் வியாழக்கிழமை (06) நொட்டிங்ஹம் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

இதேநேரம் இப்போட்டியில் தோல்வியினை தழுவிய ஆப்கானிஸ்தான் உலகக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் இலங்கை அணியுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) கார்டிப் நகரில் வைத்து மோதுகின்றது.

ஸ்கோர் விபரம்

Result

Afghanistan
207/10 (38.2)

Australia
209/3 (34.5)

Batsmen R B 4s 6s SR
Mohammad Shahzad b Mitchell Starc 0 3 1 0 0.00
Hazratullah Zazai c  Alex Carey b Pat Cummins 0 2 0 0 0.00
Rahmat Shah c Steve Smith b Adam Zampa 43 60 6 0 71.67
Hashmatullah Shahidi st  Alex Carey b Adam Zampa 18 34 3 0 52.94
Mohammad Nabi run out () 7 22 0 0 31.82
Gulbadin Naib c  Alex Carey b Marcus Stoinis 31 33 4 0 93.94
Najibullah Zadran c  Alex Carey b Marcus Stoinis 51 49 7 2 104.08
Rashid Khan lbw b Adam Zampa 27 11 2 3 245.45
Dawlat Zadran c  Alex Carey b Pat Cummins 4 6 1 0 66.67
Mujeeb ur Rahman b Pat Cummins 13 9 1 1 144.44
Hamid Hassan not out 1 2 0 0 50.00


Extras 12 (b 0 , lb 3 , nb 1, w 8, pen 0)
Total 207/10 (38.2 Overs, RR: 5.4)
Fall of Wickets 1-0 (0.3) Mohammad Shahzad, 2-5 (1.2) Hazratullah Zazai, 3-56 (13.5) Hashmatullah Shahidi, 4-75 (19.2) Rahmat Shah, 5-77 (22.2) Mohammad Nabi, 6-160 (33.1) Gulbadin Naib, 7-162 (33.5) Najibullah Zadran, 8-205 (37.3) Rashid Khan, 9-207 (38.2) Mujeeb ur Rahman,

Bowling O M R W Econ
Mitchell Starc 7 1 31 1 4.43
Pat Cummins 8.2 0 40 3 4.88
Nathan Coulter-Nile 8 1 36 0 4.50
Marcus Stoinis 7 1 37 2 5.29
Adam Zampa 8 0 60 3 7.50


Batsmen R B 4s 6s SR
Aaron Finch c Mujeeb ur Rahman b Gulbadin Naib 66 49 6 4 134.69
David Warner not out 89 114 8 0 78.07
Usman Khawaja lbw b Rashid Khan 15 20 1 0 75.00
Steve Smith c Hazratullah Zazai b Mujeeb ur Rahman 18 27 1 0 66.67
Glenn Maxwell not out 4 1 1 0 400.00


Extras 17 (b 0 , lb 1 , nb 2, w 14, pen 0)
Total 209/3 (34.5 Overs, RR: 6)
Fall of Wickets 1-96 (16.2) Aaron Finch, 2-156 (24.6) Usman Khawaja, 3-205 (34.4) Steve Smith,

Bowling O M R W Econ
Mujeeb ur Rahman 4.5 0 45 1 10.00
Hamid Hassan 6 2 15 0 2.50
Dawlat Zadran 5 0 32 0 6.40
Gulbadin Naib 5 0 32 1 6.40
Mohammad Nabi 6 0 32 0 5.33
Rashid Khan 8 0 52 1 6.50



முடிவு – அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<