ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே பல்லேகலேயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி  106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன, கௌசல் சில்வா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே திமுத்  கருணாரத்ன ஓட்டம் பெறாமல் பெரும் ஏமாற்றம் அளித்து வெளியேறினார்.

அடுத்து குசால் பெரேரா களம் இறங்கினார். கௌசல் சில்வா 5 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இந்த விக்கட்டையும் ஸ்டார்க் வீழ்த்தினார். இதன்மூலம் 27வது போட்டியில் 99 விக்கட்டுக்களை வீழ்த்தி 100-வது விக்கட்டுக்காகக் காத்திருந்தார் ஸ்டார்க்.

பின் குசல் பெரேராவோடு இணைந்து விளையாடக், கடந்த போட்டியில் கலக்கிய குசல் மெண்டிஸ் களம் புகுந்தார்.

இவர்கள் இருவரும் இலங்கை அணியை  சரிவில் இருந்து மீட்டு பகல் போசண இடைவேளை வரை விக்கட்டுகளை பறிகொடுக்காமல் ஆடினர்.

அதன் படி இலங்கை அணி பகல் போசண இடைவேளையின் போது 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

பகல் போசண ம்முடிந்து வந்த உடனே குசல் பெரேரா 49 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார். பின் குசல் மெண்டிஸோடு தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் சிறப்பான இணைப்பாட்டதைப் பகிர்ந்தார்.

பின் இலங்கை அணியின் ஓட்டங்கள் 184ஆக இருக்கும்போது குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதன்மூலம் 100 விக்கட்டுக்களை வீழ்த்தி ஸ்டார்க் அசத்தினார். அத்துடன், காலி மைதானத்தில் வெளிநாட்டு வீரர் ஒருவர் 5 விக்கட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் 7 மாதங்கள் ஓய்விற்குப் பின் ஸ்டார்க் பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

குசல் மெண்டிஸின் விக்கட்டின் பின் தனன்ஜய டி சில்வா மற்றும் மெதிவ்ஸ் ஜோடி இணைந்தது. ஆனால் இவர்களால் பெரிய அளவு ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெறமுடியவில்லை.

இதனால் இலங்கை அணிக்கு அடுத்தடுத்து விக்கட்டுகளை இழக்க நேரிட்டது. இலங்கை அணி 73.1 ஓவர்களில் 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

அதிக பட்சமாக  குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களைப் பெற மெதிவ்ஸ் 54 ஓட்டங்களையும் தனன்ஜய டி சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் மிச்சல் ஸ்டார்க் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர நேதன் லயன் 78 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்னர் அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்ஸைத் தொடர்ந்தது. அவர்களின் இனிங்ஸின் 2ஆவது பந்து வீச்சில் ஜோ பர்ன்ஸ் அறிமுக வீரர் விஷ்வ பெர்னாண்டோவின் பந்து வீச்சில் ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால் அதன் பின் அவுஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தைக் கடைபிடிக்க இறுதியில் டேவிட் வோர்னர் அதிரடியாக ஆடி 42 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்க அவுஸ்ரேலிய அணி 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 54 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 1ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

களத்தில் உஸ்மான் கவாஜா ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களோடு இருந்தார். வீழ்ந்த 2 விக்கட்டுகளை விஷ்வ பெர்னாண்டோ மற்றும் டில்ருவான் பெரேரா பங்கு போட்டனர். தற்போது அவுஸ்திரேலிய அணி 8 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 227 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 281/10

குசல் மெண்டிஸ் 86, எஞ்சலோ மெதிவ்ஸ் 54, குசல் பெரேரா 49, தனன்ஜய  டி சில்வா 37

மிச்சல் ஸ்டார்க் 44/5, நேதன் லயன் 78/2

அவுஸ்திரேலியா – 54/2

டேவிட் வோர்னர் 42, உஸ்மான் கவாஜா 11*

விஷ்வ பெர்னாண்டோ 16/1,  டில்ருவான் பெரேரா 14/1

அவுஸ்திரேலிய அணி  227 ஓட்டங்களால் பின்னிலையில்

Full Scorecard

Batsmen Dismissal Runs Balls
Dimuth Karunarathne  c Burns b Starc 0 1
Kaushal Silva  c Nevill b Starc 5 16
Kusal Janith Perera c Smith b Lyon 49 82
Kusal Mendis c Nevill b Starc 86 137
Angelo Mathews  c Nevill b Marsh 54 65
Dinesh Chandimal  c Khawaja b Hazelwood 5 14
Dhananjaya De Silva  LBW b Holland 37 63
Dilruwan Perera LBW b Lyon 16 32
Rangana Herath  b Starc 14 19
Lakshan Sandakan  b Starc 1 7
Vishwa Fernando Not Out 0 4
Extras (14) TOTAL 281 (73.1 overs)

Fall of wickets :  1-0 (Karunaratne, 0.1 ov), 2-9 (Silva, 4.4 ov), 3-117 (MDKJ Perera, 31.2 ov), 4-184 (Mendis, 45.3 ov), 5-199 (Chandimal, 48.5 ov), 6-224 (Mathews, 56.4 ov), 7-259 (MDK Perera, 67.1 ov), 8-265 (de Silva, 68.6 ov), 9-274 (Sandakan, 71.4 ov), 10-281 (Herath, 73.1 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  16.1 7 44 5
Josh Hazelwood 15 3 51 1
Nathan Lyon 18 1 78 2
Mitchell Marsh 9 0 30 1
Jon Holland 15 0 64 1
Batsmen Dismissal Runs Balls
 Joe Burns c K Perera b Fernando 0 2
 David Warner c Mathews b Perera 42 41
 Usman Khawaja Not Out 11 38

Fall of wickets :  1-0 (Burns, 0.2 ov), 2-54 (Warner, 13.3 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Vishwa Fernando  2 0 16 1
Rangana Herath 1 0 3 0
Dilruwan Perera 5.3 1 14 1
Angelo Mathews 3 1 13 0
Dhananjaya De Silva 2 1 7 0