நிபுன் – சமிந்துவின் சிறப்பாட்டத்தால் ஆஸி இளையோரை வீழ்த்திய இலங்கை இளையோர்

476
Australia-U19-vs-Sri-Lanka-U19

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ரொஹான் சன்ஜய மற்றும் சந்துன் மெண்டிஸின் அபார பந்துவீச்சு, அணித் தலைவர் நிபுன் தனன்ஞயவின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை இளையோர் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய இளையோர் அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒற்றை இளையோர் டெஸ்ட் என்பவற்றில் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகின்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை இளையோர் டெஸ்ட் போட்டி கடந்த 10ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது.

இளையோர் டெஸ்ட் முதல் நாளில் இலங்கை இளையோர் அணி ஆதிக்கம்

இலங்கை 19 வயதின் கீழ் மற்றும் அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகளுக்கு ….

மூன்று நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய இளையோர் அணித் தலைவர் பெக்ஸ்டர் ஜே ஹோல்ட் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலிய இளையோர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் கொரி ஹன்டர் 71 ஓட்டங்களையும், அணித் தலைவர் பெக்ஸ்டர் ஜே ஹோல்ட் 60 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பில் ரொஹான் சன்ஜய 5 விக்கெட்டுக்களையும், ருவின் பீரிஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார பெற்றுக்கொண்ட சதத்தின் உதவியோடு 8 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலிய இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பாக ஜெர்ரோட் ப்ரீமேன் 3 விக்கெட்டுக்களையும், தன்வீர் சங்கா மற்றும் செக் ஈவென்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து, 40 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய இளையோர் அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இன்று (12) தொடங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சேம் பென்னிங் மற்றும் கொரி ஹன்டர் ஆகிய இருவரும் களமிறங்கினர். சமிந்து விஜேசிங்கவின் பந்தில் கொரி ஹன்டர் ஓட்டமின்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய கீகன் ஓட்ஸ் 5 ஓட்டங்களுடனும், சேம் பென்னிங் 14 ஓட்டங்களுடனும், ஒலிவர் டேவிஸ் ஓட்டமன்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஓய்வறை திரும்ப, அந்த அணி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து மதிய போசண இடைவேளையின் பிறகும் இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் அவுஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.

கமில் மிஷாரவின் சதத்தோடு வலுப்பெற்ற இலங்கை இளையோர் அணி

இலங்கை இளையோர் மற்றும் அவுஸ்திரேலிய இளையோர் (19 வயதின்கீழ்) அணிகளுக்கு ….

எனினும், ஜெர்ரோட் ப்ரீமேனுடன் ஜோடி சேர்ந்த தன்வீர் சங்கா எட்டாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை கொடுத்தார்.  இந்த இணைப்பாட்டத்தை தேநீர் இடைவேளைக்குப் பிறகு இலங்கை இளையோர் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சொனால் தினூஷ தகர்த்தார்.

நிதானமாக துடுப்பாடிய தன்வீர் சங்கா 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சீரான இடைவெளியில் ஏனைய விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன. இறுதியில், அவுஸ்திரேலிய இளையோர் அணி 65.4 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவ்;வணிக்காக பொறுப்புடன் துடுப்பாடி அரைச்சதம் கடந்த ஜெர்ரோட் ப்ரீமேன் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை தரப்பில் பந்துவீச்சில் ரொஹான் சன்ஜய 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சந்துன் மெண்டிஸ் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர், 20 ஓவர்கள் எஞ்சியிருக்க 111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை இளையோர் அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவீஷ அபிஷேக் ஓட்டமின்றியும், கமில் மிஷார 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

வெள்ளையடிப்புக்கு உள்ளான இலங்கை தொடர்ந்தும் எட்டாமிடத்தில்

இலங்கைக்கு எதிராக 3-0 எனும் அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து ….

தொடர்ந்து வந்த மொஹமட் சமாஸ் 22 ஓட்டங்களுடனும், சொனால் தினூஷ 6 ஓட்டங்களுடனும் வெளியேற, இலங்கை இளையோர் அணி 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அணித் தலைவர் நிபுன் தனன்ஞய மற்றும் சமிந்து விஜயசிங்க ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்காக பொறுப்புடன் ஆடி இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து நிபுன் தனன்ஞய 35 ஓட்டங்களுடன் ரன்அவுட் முறையிலும், சமிந்து விஜேசிங்க 29 ஓட்டங்களுடனும் தமது விக்கெட்டினைப் பறிகொடுத்தனர். இதனால் இலங்கை இளையோர் அணி மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

இதன் பின்னர், இலங்கை இளையோர் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேற, போட்டியின் வெற்றி அவுஸ்திரேலிய அணியின் பக்கம் திரும்பியது.

பத்தாவது அகவையை அடையும் ThePapare.com

இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஆனது, ….

இதன்படி, போட்டியின் இறுதி 2 ஓவர்களில் இலங்கை இளையோர் அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட இந்த வெற்றி ஓட்டத்தினை சந்துன் மெண்டிஸ் பவுண்டரியொன்றின் மூலம் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி, போட்டியில் இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி, 2 பந்துகள் மீதிமருக்க 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில், அணித் தலைவர் நிபுன் தனன்ஞய 35 ஓட்டங்களையும், ஏற்கனவே பந்துவீச்சிலும் அசத்திய சமிந்து விஜேசிங்க அபாரமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி 23 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கலாக 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தளர்.

மறுமுனையில் அவுஸ்திரேலிய இளையோர் அணியின் பந்துவீச்சு சார்பாக இலங்கை வீரர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த செக் ஈவென்ஸ் 44 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதன்படி, இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்று நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியை இலங்கை இளையோர் அணி கைப்பற்ற, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, 33 வருடங்களுக்குப் பிறகு இளையோர் டெஸ்ட் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணியை இலங்கை வீழ்த்தி வரலாறு படைத்தது. முன்னதாக 1985ஆம் ஆண்டு ரொஷhன் மஹானாம தலைமையிலான இலங்கை இளையோர் அணி, இவ்வாறு அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Title

Full Scorecard

Australia U19

269/9 & 151/10

(65.4 overs)

Result

Sri Lanka U19

309/8 & 114/7

(19.4 overs)

SL U19 won by 3 wickets

Australia U19’s 1st Innings

BattingRB
Sam Fanning c C Kalindu b R Peiris722
Corey Hunter b R Sanjaya71134
Keegan Oates st C Kalindu b R Sanjaya2781
Oliver Davies c K Mishara b R Sanjaya1316
Lachlan Hearne c S Dinusha b V Viyaskanth1339
Baxter Holt lbw by S Mendis60104
JA Freeman st C Kalindu b R Sanjaya3669
Josh Kann not out1318
Tanveer Sangha c Kahaduwaarachchi b R Peiris1313
Zak Evans c K Mishara b R Sanjaya42
Extras
12 (b 5, lb 6, nb 1)
Total
269/9 (83.2 overs)
Fall of Wickets:
1-22 (S Fanning, 8.1 ov), 2-103 (K Oates, 37.2 ov), 3-120 (CB Hunter, 41.3 ov), 4-125 (O Davies, 43.4 ov), 5-151 (L Hearne, 54.4 ov), 6-235 (BJ Holt, 76.3 ov), 7-245 (JA Freeman, 79.2 ov), 8-264 (T Sangha, 82.5 ov), 9-269 (Z Evans, 83.2 ov)
BowlingOMRWE
Ruvin Peiris101402 4.00
Chamindu Wijesinghe133300 2.31
Rohan Sanjaya32.23945 2.92
Sandun Mendis225571 2.59
Vijayakanth Viyaskanth60371 6.17

Sri Lanka U19’s 1st Innings

BattingRB
TA Kahaduwaarachchi c Freeman b Sangha3668
Kamil Mishara c Oates b Sangha105235
Mohamed Samaaz c & b Freeman4392
Nipun Dananjaya c Holt b Evans2051
Sonal Dinusha c Holt b Carlisle217
Chamindu Wijesinghe c Holt b Freeman3955
Sandun Mendis c Holt b Evans2246
Chihan Kalindu b Freeman411
Rohan Sanjaya not out1914
V. Viyaskanth not out31
Extras
16 (b 8, lb 5, nb 2, w 1)
Total
309/8 (98 overs)
Fall of Wickets:
1-93 (TA Kahaduwaarachchi, 26.2 ov), 2-177 (Mohamed Samaaz, 53.3 ov), 3-215 (ND Perera, 73.2 ov), 4-215 (K Mishara, 74.4 ov), 5-223 (GS Dinusha, 79.4 ov), 6-279 (C Wijesinghe, 91.1 ov), 7-283 (C Kalindu, 93.6 ov), 8-297 (ST Mendis, 96.6 ov)
BowlingOMRWE
Zak Evans185572 3.17
Jarrod Freeman329823 2.56
Tanveer Sangha163612 3.81
Iain Carlisle173471 2.76
Josh Kann41160 4.00
Keegan Oates61150 2.50
Oliver Davies50180 3.60

Australia U19’s 2nd Innings

BattingRB
Sam Fanning c S Dinusha b R Sanjaya1433
Corey Hunter c Kalindu b C Wijesinghe011
Keegan Oates st. Kalindu b S Mendis59
Oliver Davies lbw by S Mendis08
Lachlan Hearne c N Dananjaya b S Mendis2366
Baxter Holt c N Dananjaya b R Sanjaya573
JA Freeman not out5295
Josh Kann b R Sanjaya1313
Tanveer Sangha lbw by S Dinusha2560
Zak Evans c K Mishara b R Sanjaya418
Iain Carlisle b S Mendis111
Extras
9 (lb 5, nb 3, w 1)
Total
151/10 (65.4 overs)
Fall of Wickets:
1-9 (CB Hunter, 4.4 ov), 2-18 (K Oates, 6.5 ov), 3-20 (S Fanning, 9.3 ov), 4-20 (O Davies, 10.3 ov), 5-50 (BJ Holt, 31.6 ov), 6-56 (L Hearne, 34.1 ov), 7-69 (J Kann, 37.5 ov), 8-143 (T Sangha, 57.1 ov), 9-148 (Z Evans, 62.5 ov), 10-151 (I Carlisle, 65.4 ov)
BowlingOMRWE
Chamindu Wijesinghe71191 2.71
Rohan Sanjaya3116374 1.19
Sandun Mendis18.44564 3.04
Vijayakanth Viyaskanth30180 6.00
Sonal Dinusha60161 2.67

Sri Lanka U19’s 2nd Innings

BattingRB
TA Kahaduwaarachchi b Evans02
Kamil Mishara c Freeman b Evans812
Mohamed Samaaz c Fanning b Evans2226
Nipun Dananjaya (runout) Hunter3532
Sonal Dinusha c Fanning b Evans612
Chamindu Wijesinghe c Freeman b Evans2923
Sandun Mendis not out65
Chihan Kalindu c Kann b Evans04
Rohan Sanjaya not out12
Extras
7 (lb 5, w 2)
Total
114/7 (19.4 overs)
Fall of Wickets:
1-0 (TA Kahaduwaarachchi, 0.2 ov), 2-19 (K Mishara, 4.4 ov), 3-38 (Mohamed Samaaz, 8.1 ov), 4-48 (GS Dinusha, 10.5 ov), 5-94 (ND Perera, 16.4 ov), 6-103 (C Wijesinghe, 18.1 ov), 7-108 (C Kalindu, 18.6 ov)
BowlingOMRWE
Zak Evans101446 4.40
Jarrod Freeman80510 6.38
Josh Kann1.40140 10.00

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<