நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸி. குழாம் அறிவிப்பு

66
Australia vs Newzealand 2019

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அடுத்து மோதவுள்ள நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான 13 பேர் கொண்ட உத்தியோகபூர்வ குழாத்தினை இன்று (03) வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆகிய இரு டெஸ்ட் தொடர்களுக்குமான

பாகிஸ்தான் அணியை தங்களது சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்பு செய்த டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய அடுத்த இருதரப்பு தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தங்களது சொந்த மண்ணில் சந்திக்கின்றது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருக்கின்ற குறித்த 13 பேர் கொண்ட குழாத்தில் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்காக வெளியிடப்பட்டிருந்த 14 பேர் கொண்ட குழாத்திலிருந்து ஒரேயொரு மாற்றம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 

கடந்த 2018 மார்ச் மாதம் முழு கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்திய பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் சிக்கி கிரிக்கெட் விளையாட்டிலிருந்து தடைக்கு உள்ளான மூன்று வீரர்களில் ஒருவான கெமரூன் பென்கொரப்ட் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்தார். 

பாகிஸ்தானை வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட்

இருந்தாலும் போட்டியில் விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இரு போட்டிகளிலும் கெமரூன் பென்கொரப்ட்க்கு விளையாடக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் தொடரில் விளையாடாமலேயே நியூசிலாந்து தொடருக்கான குழாமிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் பாகிஸ்தான் தொடருக்கான குழாமில் இடம்பெற்ற பந்துவீச்சு சகலதுறை வீரர் மிட்செல் நேஸர் குறித்த தொடரில் டெஸ்ட் அறிமுகம் பெறவில்லை. இருந்தாலும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்டில் அறிமுகம் பெறும் அடிப்படையில் தொடர்ந்தும் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

2010ஆம் ஆண்டு முதல்தர போட்டிகளில் அறிமுகம் பெற்ற மிட்செல் நேஸர் இதுவரையில் 51 போட்டிகளில் பந்துவீச்சில் 163 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் 1,669 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியுடனான குறித்த குழாமில் இடம்பெற்று போட்டியில் விளையாடாத வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பெட்டின்சன் தொடர்ந்தும் அவுஸ்திரேலிய குழாமில் இடம்பெற்றுள்ளார். 

மேலும் இரு பங்களாதேஷ் வீரர்களுக்கு ஒரு வருட தடை

பங்களாதேஷ் அணியின் வீரர் சஹாடட் ஹுசைனை தாக்குதலுக்கு தூண்டிய காரணத்துக்காக அரபாத் சன்னி மற்றும் மொஹமட் சஹிட் ஆகியோருக்கு

2011ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்ற ஜேம்ஸ் பெட்டின்சன் இதுவரையில் 19 டெஸ்ட் போட்டிகளில் 75 விக்கெட்டக்களை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் உபதலைவராக தொடர்ந்தும் பெட் கம்மிண்ஸ் பெயரிடப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து தொடருக்கான ஆஸி. டெஸ்ட் குழாம்.

டிம் பெய்ன் (அணித்தலைவர்), ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மெத்யூ வேட், டேவிட் வோர்னர், ஜோ பார்ன்ஸ், பெட் கம்மிண்ஸ், ஜொஸ் ஹெஸில்வூட், ட்ரெவிஸ் ஹெட், மார்னஸ் லபுச்சேன்ஜ், நைதன் லயன், மிட்செல் நேஸர், ஜேம்ஸ் பெட்டின்சன்

தொடர் அட்டவணை 

12 – 16 டிசம்பர் – முதலாவது டெஸ்ட் போட்டி – பேர்த்

26 – 30 டிசம்பர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – மெல்பேர்ன்

3 – 7 ஜனவரி – மூன்றாவது டெஸ்ட் போட்டி – சிட்னி 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க