இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸி அணியில் 20 வயது வீரர்

820
@Cricket.com.au

இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான ஆஸி. அணியின் 13 பேர் கொண்ட குழாம் இன்று (09) ஆஸி. கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இம்மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கை..

இலங்கை கிரிக்கெட் அணியானது தற்சமயம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பணயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு நியூசிலாந்து அணியுடன் மூவகையான கிரிக்கெட் போட்டித் தொடர்களிலும் ஆடி வருகின்றது.

இரண்டு தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை இரண்டையும் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. அதிலும் ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் வெள்ளையடிப்பு செய்திருந்தது.

அடுத்ததாக ஒரு போட்டியை கொண்ட டி20 தொடர் மாத்திரம் எஞ்சியுள்ளது. அந்தப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்பணயத்தை முடித்துக் கொண்டு இலங்கை அணி அடுத்தகாக அவுஸ்திரேலிய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதற்காக ஆஸி. செல்லவுள்ளது.

ஆஸி. அணி தற்சமயம் இந்திய அணியுடனான தொடரில் சொந்த மண்ணில் ஆடி வருகின்றது. டி20 தொடர் சமநிலையில் முடிவடைய, டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி சமநிலையில் முடிவுக்குவர வரலாற்று சாதனையுடன் இந்திய அணி அத்தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.

ஆஸி. அணிக்கு இந்தியாவுடனான தொடரில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மாத்திரம் எஞ்சியுள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (12) சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

அடுத்து ஆரம்பமாகவுள்ள இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் நேற்று (08) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தொடருக்கான ஆஸி. அணி குழாம் இன்று (09) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய அனுபவ வீரர்களுக்கு இலங்கையுடனான தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரோன் பிஞ்ச், பீட்டர் ஹேன்ஸ்கொம், மார்ஷ் சகோதரர்களான ஷோன் மார்ஷ், மிட்சல் மார்ஷ் போன்ற வீரர்களே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஆஸி. அணிக்கு அறிமுக வீரராக 20 வயதுடைய இளம் வீரரான வில் புகௌஸ்கி டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் அசத்திய மெட் ரென்ஸொவ் மற்றும் ஜொய் ப்ரூன்ஸ் ஆகிய வீரர்கள் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸி. ஒருநாள் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு: சிராஜிற்கு அழைப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் …

அத்துடன் இந்திய அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்டு விளையாடிய சகலதுறை வீரரான மார்னஸ் லாபுஸ்சக்னேயும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தனது இறுதி டெஸ்ட் போட்டியாகக்கூட அமையலாம் என ஆஸி. கிரிக்கெட் சபையினரால் எச்சரிக்கப்பட்ட மிட்சல் ஸ்டாக் தொடர்ந்தும் அணியின் இடம்பிடித்துள்ளார்.  

இலங்கையுடனான தொடருக்காக ஆஸி. டெஸ்ட் குழாம்

டிம் பெய்ன் (அணித்தலைவர்), ஜொஸ் ஹெஸில்வூட் (உப தலைவர்), ஜொய் ப்ரூன்ஸ், பெட் கம்மிண்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஸ்சக்னே, நைதன் லயன், வில் புகௌஸ்கி, மெட் ரென்ஸொவ், மிட்சல் ஸ்டாக், பீட்டர் சிடில்   

இலங்கை மற்றும் ஆஸி. அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆஸி. கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பதினொருவர் அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியிலிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<